Header Ads



கௌத‌ம‌ ஒரு, புத்த‌ர் முஸ்லிம்

கௌத‌ம‌ புத்த‌ர் முஸ்லிம் என்ப‌தே என‌து க‌ருத்தாகும் என‌ உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

அவ‌ர் தெரிவித்த‌தாவ‌து,

இறை தூத‌ர்க‌ள் அதாவ‌து ந‌பிமார் அனுப்ப‌ப்ப‌டாத‌ ச‌மூக‌ம் எதுவும் இல்லை என‌ இறைவ‌ன் குர் ஆனில் கூறியுள்ளான். நாம் ந‌பிமார்க‌ள் என்று அறிந்து வைத்திருக்கும் சில‌ர் ம‌த்திய‌ கிழ‌க்கை சேர்ந்தோராக‌ ம‌ட்டுமே இருக்கின்ற‌ன‌ர். ஆனால் ம‌னித‌ இன‌த்தில் முத‌ல் பூர்வீக‌ம் வாழ்ந்த‌ ஆசிய‌ க‌ண்ட‌த்தில் எந்த‌ ந‌பியையும் நாம் இன‌ங்கானாம‌ல் இருக்கின்றோம். இந்த‌ வ‌கையில் குர் ஆனில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ ஒரு ந‌பிதான் க‌பில‌வை அல்ல‌து கிஃப்ல‌வை சேர்ந்த‌வ‌ர் என்ப‌தாகும். இவ‌ரின் பெய‌ர் என்ன‌ என‌ குர் ஆனோ ஹ‌தீதோ சொல்லாவிட்டாலும் க‌பில‌வை உடைய‌வ‌ர் என‌ குர் ஆனில் இர‌ண்டு இட‌ங்க‌ளில் சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌து. சூர‌த்துல் அன்பியா 85வ‌து வ‌ச‌ன‌த்தில் துல் கிப்ல் அதாவ‌து கிஃப்லை சேர்ந்த‌வ‌ரை ந‌பிமார்க‌ளின் பெய‌ர்க‌ளுட‌ன் இணைத்து இறைவ‌ன் கூறுவ‌துட‌ன் அவ‌ரும் ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளில் ஒருவ‌ர் என்றும் கூறுகிறான்.

இவ‌ர் யார் என்ப‌தில் க‌ருத்து வேறுபாடு உள்ள‌ன‌. அற‌பு அறிஞ‌ர்க‌ள் இவர் இஸ்ரேல் ப‌ர‌ம்ப‌ரையில் வ‌ந்த‌ ஒரு ந‌பியாக‌ இருக்க‌லாம்  என‌ எழுதி வைத்துள்ள‌ன‌ர். இத‌ற்கு கார‌ண‌ம் இந்திய‌ உப‌க‌ண்ட‌ம் ப‌ற்றிய‌ அறியாமையாக‌ இருக்க‌லாம்.
இந்த‌ ந‌பி யார் என‌ நான் தேடிய‌ போது க‌ண்ட‌ உண்மைதான் அவ‌ர் புத்த‌ர் என்ப‌து. அந்த‌ வ‌கையில் புத்த‌ர் ஒரு தூய்மையான‌ முஸ்லிம், இறை தூத‌ர்க‌ளில் ஒருவ‌ர்.

  கௌத‌ம‌ புத்த‌ரின் பெய‌ர் சித்தார்த் என்றிருந்தாலும் அவ‌ர் புத்த‌ர் என்றே அழைக்க‌ப்ப‌ட்டார். அவ‌ர‌து பெய‌ருக்கும் அர‌புக்கும் நெருங்கிய‌ தொட‌ர்பு உண்டு. அர‌பு மொழி உல‌கின் முத‌ன் மொழிக‌ளில் ஒன்று என்ப‌தால் இத்தொட‌ர்பு ஏற்ப‌ட்டுள்ள‌து. கௌத‌ம‌ புத்த‌ர் என்ப‌து அர‌பு மொழியில் க‌வ்துல் ப‌த்ர். 
ப‌த்ர் என்றால் பூர‌ண‌ ச‌ந்திர‌ன். பூர‌ணையில் அவ‌ர‌து ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் ந‌ட‌ந்துள்ள‌தால் ப‌த்ர் என‌ அழைக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம். நாள‌டைவில் புத்த‌ர் என‌ ம‌ருவியிருக்க‌லாம். முஹ‌ம்ம‌த் என்ற‌ பெய‌ர் கூட‌ ம‌ம்ம‌து, மொஹ‌மெட் என்றெல்லாம் ம‌ருவியிருப்ப‌தை காண்கிறோம்.


புத்த‌ரின் ஊர் க‌பில‌ வ‌ஸ்த்தாகும். வ‌ஸ்த்து என்ப‌து ச‌ம‌ஸ்கிருத‌ சொல்லாகும். அத‌ற்கு ப‌ல‌ பொருள் உண்டு. ஒரு  வ‌ஸ்த்துவுக்கு வ‌ஸ்த்து என‌ சொல்ல‌ப்ப‌டும். க‌பில‌ வ‌ஸ்த்து என்றால் க‌பில‌வின் வ‌ஸ்த்து அதாவ‌து க‌பில‌வை சேர்ந்த‌து  என்று அர்த்த‌ம். இந்த‌ வ‌கையில் மேற்ப‌டி க‌பில‌ வ‌ஸ்த்து என்ப‌த‌ன் ப‌டி க‌பில‌வை சேர்ந்த‌வ‌ர் என‌ குர் ஆன் கூறுவ‌த‌ன் கார‌ண‌மாக‌ இர‌ண்டும் ஒருவ‌ரையே குறிப்ப‌தை நூறு வீத‌ம் நாம் தெளிவாக‌ புரிய‌லாம்.

புத்த‌ர் ப‌ற்றிய‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ளையும் குர் ஆன் வ‌ச‌ன‌த்தையும் ஆராயும் போது அவ‌ர் ஒரு தூய்மையான‌ முஸ்லிம் என்ப‌தை 99 வீத‌ம் உறுதியாக‌ என்னால் சொல்ல‌ முடியும்.
குர் ஆனில் சில‌ இறை தூத‌ர்க‌ளின் பெய‌ர்க‌ள் சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌து. சில‌ர‌து பெய‌ர்க‌ள் புணைப்பெய‌ரில் சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌து. உதார‌ண‌மாக‌ துல் க‌ர்னைன் ந‌பியாகும். இதே போல் குர் ஆனின் இர‌ண்டு இட‌த்தில் க‌பிலை உடைய‌வ‌ர் அல்ல‌து க‌பிலை சேர்ந்த‌வ‌ர் என‌ ந‌பிமார்க‌ளின் பெய‌ர்க‌ளுட‌ன் இணைத்து சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌து. குர் ஆனில் இறைவ‌ன் எந்த‌ வ‌ச‌ன‌த்தையும் வீணாக‌ இற‌க்க‌வில்லை. சில‌ வ‌ச‌ன‌ங்க‌ள் அன்று விள‌ங்காத‌ போதும் கால‌ப்போக்கில் விள‌ங்கும் என்ப‌து குர் ஆனின் அற்புத‌ங்க‌ளில் ஒன்றாகும்.

இங்கு நாம் கேட்ப‌து என்ன‌வென்றால் க‌பில‌வை சேர்ந்த‌வ‌ர் என்றால் க‌பில‌ எனும் ஊரைசேர்ந்த‌வ‌ர் என்ப‌தால் க‌பில‌ என்ற‌ ஊர் உல‌க‌ வ‌ர‌லாற்றில் இருந்திருக்க‌வில்லை என்றால் இது யார் என்றே தெரியாது என‌ சொல்லி விட்டு போக‌லாம். ஆனால் க‌பில‌ என்ற‌ ஊர் இருந்திருக்கிற‌து. அது புத்த‌ரின் ஊராகும். என‌வே புத்த‌ரைத்தான் இங்கு குர் ஆன் குறிப்பிடுவ‌துட‌ன் அவ‌ரை  ஒரு தூய்மையான‌ முஸ்லிம் என்ப‌தையும் குர் ஆன் இங்கு கூறுகிற‌து.

அத்துட‌ன் புத்த‌ர் அணிந்த‌ ஆடையும் அத‌னை அணியும் வித‌மும் முஹ‌ம்ம‌து ந‌பி ஹ‌ஜ் யாத்திரையின் போது அணிந்த‌ ஆடையாக‌வே உள்ள‌து, நிற‌ம் ம‌ட்டும் வித்தியாச‌மான‌து.
ஹ‌ஜ் என்ப‌து எப்ர‌ஹாம் ந‌பி காட்டித்த‌ந்த‌து என‌ முஹ‌ம்ம‌து ந‌பி சொல்லியுள்ள‌தால் எப்ர‌ஹாமுக்கு பின்ன‌ர் வ‌ந்த‌ ந‌பி புத்த‌ரும் அதே ஆடையை பின்ப‌ற்றியிருக்க‌லாம். 

கால‌த்துக்கு கால‌ம் ச‌ட்ட‌ங்க‌ள் மாறு ப‌ட்டிருக்க‌லாம். அதே போல் யேசுவின் சீட‌ர்க‌ள் அவ‌ர் வ‌ழிகாட்டிய‌ இஸ்லாத்தில் சில‌ மாற்ற‌ங்க‌ளை செய்து அத‌னை கிறிஸ்த‌வ‌ ம‌த‌ம் என‌ மாற்றிய‌து போல் புத்த‌ரின் ம‌றைவுக்குப்பின் சில‌ர் சில‌ மாற்ற‌ங்க‌ளை சேர்த்திருக்க‌லாம். ஆனால் புத்த‌ரின் போத‌னைக‌ள் 99 வீத‌ம் இஸ்லாமிய‌ போத‌னைக‌ளாகும்.

புத்த‌ர் ஒரு நாஸ்திக‌ர் என்ப‌த‌ற்கு எந்த‌ ஆதார‌மும் இல்லை. அவ‌ர் அன்று இந்துக்க‌ளிட‌ம் இருந்த‌ ப‌ல‌ க‌ட‌வுட் கொள்கையை ம‌றுத்தார். க‌ட‌வுள்க‌ள் இல்லை என்றுதான் சொல்லியுள்ளாரே த‌விர‌ எந்த‌ ச‌ந்த‌ர்ப்ப‌த்திலும் அவ‌ர் க‌ட‌வுளே இல்லை என‌ சொல்ல‌வில்லை. ஆனால் அவ‌ர‌து சில‌ க‌ருத்துக்க‌ள் க‌ட‌வுள் இருப்ப‌தை ந‌ம்பும்ப‌டி அவ‌ர் சொல்வ‌தாக‌ விள‌ங்க‌ முடியாகிற‌து.

எவ்வாறு முஹ‌ம்ம‌து ந‌பி லா இலாஹ‌ இல்ல‌ல்லாஹ் க‌ட‌வுள் இல்லை ஒரு க‌ட‌வுள் த‌விர‌ என‌ சொன்ன‌தை  முஹ‌ம்ம‌து ந‌பி க‌ட‌வுள் இல்லை என‌ சொல்வ‌தாக‌ சில‌ அரைகுறைக‌ள் விள‌ங்க‌லாம். இது போன்றே புத்த‌ர் ப‌ல‌ க‌ட‌வுட் கொள்கையை நிராக‌ரித்த‌த‌ன் கார‌ண‌மாக‌ அவ‌ர் க‌ட‌வுட் கொள்கையை ம‌றுப்ப‌தாக‌ ம‌ற்றோர் பிழையாக‌ விள‌ங்கியிருக்க‌ முடியும்.

ஆக‌வே புத்த‌ர் நாஸ்திக‌ர் என‌ சொல்ல‌ப்ப‌டுவ‌து பிழையான‌ க‌ருத்தாகும்.

மேலும் புத்த‌ர் ந‌பி சிலை வ‌ண‌க்க‌த்தை ம‌றுத்தார். எந்த‌ அள‌வுக்கு என்றால் த‌ன்னுடைய‌ உருவ‌ம் வ‌ரைய‌ப்ப‌ட‌க்கூடாது என்ப‌தில் உறுதியாக‌ இருந்தார். ஒரு நாள் அவ‌ர் ஆற்றோர‌ம் நிற்கும் போது அவ‌ர‌து உருவ‌ம் த‌ண்ணீரில் தோன்றிய‌தாகும் அத‌னை பார்த்து அவ‌ர‌து சீட‌ர் ஒருவ‌ர் புத்த‌ருக்கு தெரியாம‌ ம‌ண்ணில் அந்த‌ உருவ‌த்தை வ‌ரைந்த‌தாக‌வும் சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌து.

அது ம‌ட்டும‌ல்லாம‌ல் புத்த‌ ம‌த‌ம் என்ற‌ ஒரு ம‌த‌த்தை புத்த‌ர் உருவாக்க‌வில்லை. அவ‌ரும் ஆத‌ம் ந‌பி முத‌ல் வ‌ந்த‌ முஸ்லிம் என்ப‌தால் புதிய‌ ம‌த‌த்தை தோற்றுவிக்க‌வில்லை. பௌத்த‌ம் என்ப‌து ம‌த‌ம‌ல்ல‌; ஒரு த‌த்துவ‌ம் என்ப‌தே பௌத்த‌ த‌லைவ‌ர்க‌ளின் முடிவாகும். ம‌னித‌ வாழ்க்கையை சீர் செய்ய‌ இறைவ‌னால் தொட‌ர்ந்தும் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌   வாழ்க்கைத்த‌த்துவ‌ம். அனைத்து ந‌பிமார்க‌ளும் ஒரே த‌த்துவ‌த்தையே எடுத்து இய‌ம்பின‌ர். அதுதான் ஓர் இறைவ‌னை ந‌ம்புவ‌து அவ‌ன் காட்டிய‌ பிர‌கார‌ம் வாழ்க்கையை ந‌ல்ல‌ வ‌ழியில் அமைப்ப‌து.

புத்த‌ர் ம‌னித‌ர்க‌ளை த‌ர்ம‌த்தின் பால் அழைத்த‌துட‌ன் அத‌னை ந‌ம்பும் ப‌டி கூறினார். இத‌னை த‌ம்ம‌ என‌ சொல்ல‌ப்ப‌டும். த‌ம்ம‌ என‌ அவ‌ர் கூறிய‌து க‌ட‌வுளைத்தான் என்ற‌ க‌ருத்தும் உள்ள‌து. த‌ம்ம‌ என்ப‌து புத்த‌ரின் வ‌ழிகாட்ட‌ல் என்ற‌ க‌ருத்தும் உள்ள‌து. இஸ்லாமிய‌ க‌ண்ணோட்ட‌த்தில் பார்த்தால் இர‌ண்டும் ஒன்றுதான். இறைவ‌னை பின் ப‌ற்றும் ப‌டி சொல்வ‌தும் அவ‌ன் த‌ந்த‌ குர் ஆனை பின்ப‌ற்றும் ப‌டியும் சொல்ல‌ப்ப‌டுவ‌தை போன்று இங்கு சொல்ல‌ப்ப‌ட்டுள்ள‌து.

மூசாவுக்கு த‌வ்றாத் போல் யேசுவுக்கு இஞ்சீல் போல் புத்த‌ருக்கு த‌ம்ம‌ வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இஞ்சீலில் சில‌ ம‌னித‌ரின்  கைக‌ள் வைக்க‌ப்ப‌ட்ட‌து போன்று த‌ம்ம‌விலும் ஏற்ப‌ட்டிருக்க‌லாம். அப்ப‌டி உள்ள‌தா என்ப‌து ஆராய‌ப்ப‌ட‌ வேண்டிய‌ விட‌ய‌ம்.

புத்த‌ர் த‌ன்னை வ‌ண‌ங்கும்ப‌டி ஒரு போதும் சொல்ல‌வில்லை. அவ‌ரின் வ‌ழிகாட்ட‌லை பின்ப‌ற்றும் ப‌டியே சொன்னார். முஸ்லிம்க‌ள் ந‌ம‌க்கு இறுதி இறைத்தூத‌ர் கொண்டு வ‌ந்த‌ குர் ஆன் சுன்னா போதுமான‌தாகும். இது ப‌ற்றிய‌ தெளிவு இல்லாத‌ கால‌ம் இருந்த‌து. இப்போது தெளிவு வ‌ந்து விட்ட‌தால்  புத்த‌ரை ஒரு ல‌ட்ச‌த்து இருப‌த்தி நான்காயிர‌ம் ந‌பிமார்க‌ளில் ஒருவ‌ர் என்ப‌தை ந‌ம்பிக்கொண்டால் ந‌ம‌க்கு போதுமான‌து. 

ஆக‌வே புத்த‌ர் ஒரு ந‌ல்ல‌ முஸ்லிம் என்ப‌தையும் இறைவ‌னின் தீர்க்க‌த‌ரிசிக‌ளில் ஒருவ‌ர் என்ப‌தையும் நாம் ந‌ம்பித்தான் ஆக‌ வேண்டும்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர்

5 comments:

  1. Dear Mr .

    He may have been a prophet without any divine book..
    He may have been a divinely inspired person ..
    Some of his teaching are very much similar to Islamic teaching ..
    That is for sure and yet we can not wrongly interpret his names as having Arabic connection ..
    Sanskrit or Pally language does not have any connection to Arabic ...

    ReplyDelete
  2. முஸ்லீம்களது மதம் தீனுல் இஸ்லாம். அதற்கு அடிப்படை புனித குர்ஆனும் ஹதீஸ்களும். புத்தர் பெயர் குறிக்கப்படாத 125,000 நபிமார்களுல் ஒருவராக இருந்து விட்டுப் போகட்டும். இதனால் இஸ்லாத்திற்கு எந்த நன்மையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. தீனுக்கு முதல் எதிரிகள் அப்படிப்பட்ட நபிமார்களின் வழித்தோன்றல்களே. இப்படிப்பட்டவர்கள் எங்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீமையாவது செய்யாமலிருக்க இறைவனைப் பிரார்த்திப்போம்.

    ReplyDelete
  3. இக்கருத்தை இந்தியாவைச் சேர்ந்த Dr.ஹபீபுல்லாஹ் ஏற்கனவே தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ReplyDelete
  4. There is no doubt the Quran and subah are foundation of Islam..
    But does it mean there no any truth and good in Other religions ..
    If you think 100% truth is enshrined in Islam alone what about previous nations and do not be judgmental in your narrow mind ..
    Allah is رب العالمين..
    His mercy is greater than out narrow salafi minds ..

    ReplyDelete
  5. All the anbiyas were send to remind the people to worship Allah alone.... Did Budda tell ina ny ocation about Tawheed? if the can bring a single evidence... that is is enough for his claim. if he can not bring ... that mean he shoud avoid his 99% confirmation about Budda being a muslim and nabi... Fear Allah for making stories ..

    Allah alone knows the status of Budda?
    No hypothesis in islam but only atheniticated evidences to be accepted by a TRUE MUSLIM
    .

    ReplyDelete

Powered by Blogger.