September 13, 2018

டளஸ் அழகப்பெருமவின் வயிற்றோட்டம் பற்றி, முஜிபுர் ரஹ்மானின் நக்கல்

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெருமவுக்கு பால் அருந்தியதால் வயிற்றோட்டம் ஏற்பட்டவில்லை என ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

மாறாக மக்கள் சக்தி ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த மக்களை கண்டே அவருக்கு வயிற்றோட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நட்சத்திர ஹொட்டல்களில் சாப்பிடும் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, வீதியில் இறங்கி பால் பக்கெற்றை அருந்துவார் என நினைக்கவில்லை.

கூட்டு எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணியின் போது வழங்கப்பட்ட பால் பக்கெற் தொடர்பில் நாட்டில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளதால், இது குறித்து விவாதம் ஒன்றுக்கு வருமாறு கூட்டு எதிர்க்கட்சியினருக்கு அழைப்பு விடுப்பதாகவும் இந்த விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்படுவது முக்கியமானது எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியினர் நடத்திய மக்கள் சக்தி ஆர்ப்பாட்ட பேரணியின் போது சிலர் வழங்கிய பால் பக்கெற்றை பருகியதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும, மூன்று நாட்கள் சுகவீனமுற்றிருந்தாக கூறியிருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே முஜிபுர் ரஹ்மான் இதனை குறிப்பிட்டுள்ளார்.

1 கருத்துரைகள்:

Milk Packet, Srilankan Cadju etc. - these are the serious issues to be reolved immediatley.

Post a Comment