Header Ads



''மஹிந்த - மோடியின் சந்திப்பு இலங்கையில் அரசியல் ரீதியில் மாற்றத்தினை உருவாக்கும்”

இந்நிய பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு வெகுவிரைவில்  இலங்கையில் அரசியல் ரீதியில் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்துமென மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

இந்நியாவில்  இடம்பெற்ற  விராட்  இந்துஸ்தான் நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இந்தியப் பிரதமர் நரேந்நிர மோடிக்குமிடையில்  விசேட சந்திப்பு இடம்பெற்றது.  

இச்சந்திப்பு தொடர்பில்  மஹிந்த ராஜபக்ஷவுடன் விஜயத்தில் கலந்துக்கொண்ட அஜித் நிவாட் கப்ரால் மேலும் குறிப்பிடுகையில், 


இந்தியாவின்  நல்லுறவில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் தற்போதைய விஜயத்தின் போது பலப்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும். இந்நிய பிரதமர் நரேந்திர மோடியிக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றது . 

 இரு தரப்பினருக்குமான பேச்சுவார்த்தையின் பிரதிபலன் வெகுவிரைவில் கிடைக்கப் பெறும் .   

இலங்கையின்  ஜனாதிபதி தேர்தலில்  இச்சந்திப்பு பெரிதும் செல்வாக்கு செலுத்தும்.  

மேலும்  மஹிந்த ராஜபக்ஷ தொடர்பில் இதுவரை காலமும் இந்நிய மக்களிடம் காணப்பட்ட  பல கேள்விகளுக்கு  ஊடகங்கள் வாயிலாக பதிலளிக்கப்பட்டுள்ளது.இது பாரிய மாற்றமாகுவே அமைந்துள்ளது என்றார்.

(இராஜதுரை ஹஷான்)

3 comments:

  1. நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது.

    அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?  (2:107)

    இவர்களுக்கு ஆட்சியில் ஒரு சிறு பாகமாவது இருக்கிறதா?

    அப்படியிருந்தால், (மற்ற) மனிதர்களுக்கு (அதிலிருந்து) ஓர் எள்ளளவும் கொடுக்க மாட்டார்கள்.(4:53)

    www.tamililquran.com

    ReplyDelete
  2. மோடியின் ஆட்சியே இலங்கைக்கு தேவை

    ReplyDelete
  3. ajan பயங்கரவாதி பிரபாகரன் எழுந்துவந்து வாக்களித்தால் தான் மோடி இலங்கை பிரதமராக முடியுமாம் 🤣🤣🤣

    ReplyDelete

Powered by Blogger.