Header Ads



மெள­லவி ஆசி­ரியர் போட்டிப் பரீட்­சைக்கு, உடனடியாக விண்ணப்பிக்க கோரிக்கை


 மெள­லவி ஆசி­ரியர் போட்டிப் பரீட்­சைக்கு விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளதால் அதற்­கான தகு­தி­யு­டைய மெள­ல­வி­மார்கள் அனை­வரும் குறிப்­பிட்ட திக­திக்குள் விண்­ணப்­பிக்­கு­மாறு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணிகள் சம்­மே­ளனம் வேண்­டுகோள் விடுத்­துள்­ளது.


இது தொடர்­பாக சம்­மே­ள­னத்தின் தலைவர் பீ.எம். பாரூக் கருத்துத் தெரி­விக்­கையில், பல வரு­டங்­க­ளுக்கு முன்பு நடை­பெற்ற மெள­லவி ஆசி­ரியர் போட்டிப் பரீட்­சைக்கு 1600 பேர் தோற்­றி­யி­ருந்­த­போ­திலும் 113 பேர் மட்­டுமே அதில் தேர்ச்சி பெற்­றி­ருந்­தனர். பரீட்­சையில் தேறி­ய­வர்­க­ளுக்கு மட்­டுமே நிய­மனம் வழங்­கப்­பட்­டது. பரீட்­சையில் சித்­தி­ய­டை­யா­த­வர்கள் நிய­மனம் பெறத் தகு­தி­யற்­ற­வர்கள். பரீட்­சையில் சித்­தி­ய­டை­யாது வெறு­மனே அர­சாங்­கத்தைக் குறை­கூ­று­வதில் எவ்­வித பய­னு­மில்லை. தற்­போது நாட்டில் 635 மௌலவி ஆசி­ரியர் வெற்­றி­டங்கள் இருப்­பதால் போட்டிப் பரீட்­சைக்கு விண்­ணப்­பங்கள் கோரப்­பட்­டுள்­ளன.

இச்­சந்­தர்ப்­பத்தைப் பயன்­ப­டுத்தி தகு­தி­யுள்ள மௌல­வி­மார்கள் அனை­வரும் அதில் தேர்ச்­சி­ய­டை­வதன் மூலம் தமது தகு­தி­களைக் கூட்­டிக்­கொள்ள முயற்­சிக்க வேண்டும். இச்­சந்­தர்ப்­பத்தைக் கோட்­டை­விட்டு விட்டுப் பின்னர் வருந்­து­வதில் பய­னில்லை. அர­சாங்கப் போட்டிப் பரீட்­சை­களில் சித்­தி­ய­டை­யா­த­வர்­க­ளுக்கு எவ்­வி­த­மான அரச நிய­ம­னங்­களும் வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்­ப­தையும் நாம் உண­ர­வேண்டும் என்று கூறிய அவர், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­ன­ணி­களின் சம்­மே­ளனம் இதற்கான வழிகாட்டல்களை வழங்கத் தயாராக இருக்கிறது என்றும், அது தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்ள 0770 550 557 இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமென்றும் குறிப்பிட்டுள்ளார்

-Vidivelli

No comments

Powered by Blogger.