Header Ads



இறைவனின் ஆசியால் ஒருநாள், வங்கதேசம் கிண்ணம் வெல்லும்.

இன்று -28- நடைபெற உள்ள ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில், இந்தியாவை எப்படி வீழ்த்துவது என்பது பற்றி வங்கதேச அணித்தலைவர் மோர்தசா தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ண தொடரின் இறுதிப் போட்டியில் இன்று இந்தியா- வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

வங்கதேச அணியில் காயம் காரணமாக தொடக்க வீரர் தமிம் இக்பால், அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் ஆகியோர் விலகியுள்ளனர். மேலும் தற்போதைய அணியில் உள்ள முஷ்பிகுர் ரஹீம், மோர்தசா ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தான் இதுவரை தோல்வியை சந்திக்காத இந்திய அணியை வங்கதேச சந்திக்க உள்ளது. வங்கதேசம் இதுபோன்ற தொடர்களில் இதுவரை கிண்ணத்தை வென்றதில்லை. எனினும், இறுதிப்போட்டி வரை முன்னேறியுள்ளதால் அந்த அணி தீவிரமாக செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்திய அணியை வீழ்த்தும் திட்டம் குறித்து வங்கதேச அணித்தலைவர் மோர்தசா கூறுகையில்,

‘களத்தில் ஏதாவது சிறப்பான நிகழ்வு ஏற்பட வேண்டும். அது ஒரு மிக சிறந்த பந்துவீச்சு பகுதியாகவோ, ஒரு வீரரின் மிகச்சிறந்த ரன் குவிப்பாகவோ இருக்கலாம். அதுவரை நாம் காத்திருக்க வேண்டும்.

பாகிஸ்தான் அணிக்கு எதிராக முஷ்பிகுர் மற்றும் மிதுன் இணைந்து சிறந்த கூட்டணி அமைத்தனர். அது போல நிகழ வேண்டும். இதை விட்டால் இந்திய அணியை வீழ்த்த எளிதான வழி எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கிண்ணத்தை வெல்வது குறித்து கூறுகையில், ‘வங்கதேசத்திற்கு ஒரு கிண்ணம் அவசியம். கடவுளின் ஆசியால் ஒருநாள் வங்கதேசம் கிண்ணம் வெல்லும். இளம் வீரர்கள் அதன் மூலம் ஊக்கம் பெறுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா வங்கதேச அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. இவர்களைத் தானே இலங்கை ரசிகர்கள் நக்கல் அடித்து, விரட்டியடித்தார்கள்.
    பின்னர் தங்கள் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாது தங்கள் அறை கண்ணாடியை உடைத்தவர்கள்

    ReplyDelete
  2. Bangladesh will teach good lesson

    ReplyDelete

Powered by Blogger.