Header Ads



பல மணிநேர விசாரணை செய்தும், சிறையில் அடைத்தும் குற்றத்தை கண்டுபிடிக்க முடியாது திணறும் அவுஸ்திரேலியா


அவுஸ்திரேலிய அரசியல்வாதிகளை கொல்ல திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்ட இலங்கை மாணவர் குற்றம் செய்ததற்கு போதுமான ஆதாரம் இல்லாத நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட உள்ளது.

Mohamed Kamer Nizamdeen (25) என்னும் இலங்கையைச் சேர்ந்த நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக மாணவரின் அறையில் கிடைத்த நோட்டு புத்தகம் ஒன்றில் பிரபல அரசியல்வாதிகள் சிலர் மற்றும் முக்கியமான சில இடங்களை தாக்குவதற்கான திட்டம் இடம்பெற்றிருந்ததன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்.

தீவிரவாத குற்றச்சாட்டின்பேரில் நான்கு வாரங்கள் சிறையில் இருந்த Nizamdeen நிரபராதி என்று அவரது குடும்பத்தாரும் ஆதரவாளர்களும் கூறிவந்தனர்.

கண்டு பிடிக்கப்பட்ட நோட்டு புத்தகத்தில் இருந்தது Nizamdeenஇன் கையெழுத்துதானா என்பது குறித்து தீர்க்கமான ஒரு முடிவுக்கு நிபுணர்களால் வர இயலவில்லை.

நிபுணர்களால் குற்றவாளிதான் அந்த கையெழுத்துக்கு உரியவர் என்ற முடிவுக்கு வர இயலாத நிலையில், குற்றச்சாட்டு எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளதோ அந்த ஆதாரமே பெருமளவில் வலுவிழந்து போகிறது என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எட்டு மணி நேர விசாரணைக்கு பின்னும் Nizamdeenஇடம் பொலிசாரால் எந்த குற்றத்தையும் கண்டுபிடிக்க இயலவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி Nizamdeen அறையில் கண்டுபிடிக்கப்பட்ட கணினி, மொபைல் போன் மற்றும் பிற ஆவணங்களும் எந்த தீவிரவாதக் கருத்துகளையும் கொண்டிருக்கவில்லை.

இந்நிலையில் Nizamdeen மீதான வழக்கு அக்டோபர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.