Header Ads



கொழும்பு குப்பை வேண்டாம் - புத்தளத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவந்து கொட்டப்படவிருக்கும் குப்பைக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டம்  இன்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம் பெற்றது.

சீமெந்து தொழிற்சாலை, அனல் மின் நிலையக்கழிவுகளால் பல்வேறு அசௌகரியங்களை புத்தளம் மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.

அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் தூசுத்துணிக்கைகளால் முற்றாக அப்பகுதி விவசாயம் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன், சுவாச நோய் உள்ளிட்ட பல நோய்களால் , உயிர் இழப்புக்களாலும் பாதிக்கப்பட்டுள்ளதும்,  குறிப்பிடத்தக்கதாகும்.

முறையான சுற்றாடல் பாதுகாப்பு பத்திரமில்லாத அனல் மின் நிலையத்தினை மக்கள் பல எதிர்ப்புக்களைத்தெரிவித்தும் கடந்த அரசு அத்திட்டத்தை அமைத்தது.

அதே போல் தற்போது கொட்டப்படவுள்ள இலத்திரணியல்,பிளாஸ்த்திரிக்,மருத்துவக்கழிவுகளால் அவ்விடத்தை அண்மித்துள்ள பகுதிகள் பல தரப்பட்ட வளங்களை இழக்கும் அபாயம் நிலவுவதுடன்,  பல தரப்பட்ட நோய்களுக்கு ஆளாகும் நிலைக்காணப்படுகின்றது.

இவ்வாறான அடிப்படை சூழலியல் பிரச்சினைகள் தொடர்ந்தும் புத்தளத்தில் தினிக்கப்பட்டு வருகின்றமையைக்கண்டித்து, அப்பகுதிகமக்களின் உரிமைகளுக்காக உண்ணாவிரதம் போராட்டம் இருந்தனர் .

இவ் உண்ணாவிரத போராட்டத்தில்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மாவட்ட அமைப்பாளரும் நகர சபை உறுப்பினருமான அலி சப்ரி ரஹீம்,  மாகாண சபை உறுப்பினர் நியாஸ், நகர சபை தலைவர் பாயிஸ், முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஆப்தீன் எஹியா உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பினைத்தெரிவிக்கும் வகையில் தலையில் கருப்பு நிறப்பட்டியணிந்து கலந்துக்கொண்டனர்.

(இஹ்ஸான்)

No comments

Powered by Blogger.