Header Ads



ஞானசாரரை ஜனாதிபதி வேட்பாளராக, நிறுத்த முயற்சி - 2 அமைச்சர்கள் ஆதரவு

ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி ஊடாக பொது மன்னிப்பை பெற்றுக்கொடுத்து, அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவரை வேட்பாளராக நிறுத்துவது சம்பந்தமான திட்டத்தை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு முக்கிய அமைச்சர்கள் முன்னெடுத்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் தினம் அறிவிக்கப்பட உள்ள தருவாயில் அவருக்கு பொதுமன்னிப்பை வழங்குமாறு இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் ஞானசார தேரரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது அல்லது, அவர் தலைமையிலான பொதுபல சேனா ஊடாக மாற்று ஜனாதிபதி வேட்பாளர் குறித்து நாட்டுக்குள் நிலைப்பாடு ஒன்றை உருவாக்குவது இவர்களின் இரண்டாவது திட்டம் எனவும் பேசப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆசியுடன் போட்டியிடும் வேட்பாளருக்கு கிடைக்கும் சிங்கள பௌத்த வாக்குகளின் ஒரு பகுதியை உடைப்பது என்பது இவர்களின் இறுதித்திட்டம் எனவும் தெரியவருகிறது.

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் அமைச்சரவை அந்தஸ்துள்ள இந்த அமைச்சர்களின் திட்டத்திற்கு இதுவரை ஞானசார தேரரின் இணக்கம் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

நீதிமன்றம் தண்டனை விதித்து சிறையில் அடைக்கப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கினால், அவர் தேர்தலில் போட்டியிட எந்த சட்டரீதியான தடைகளும் இல்லை.

1 comment:

Powered by Blogger.