Header Ads



25 வயதில் கலாநிதிப் பட்டம்பெற்ற, அகமட் மிப்லாஹ் நொடிங்ஹாம் பல்கலைக்கழக துணைப் பேராசிரியரானார்

ஐக்கிய இராச்சியத்தின் குயின்மேர், லண்டன் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் விஞ்ஞானத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்ற அகமட் மிப்லாஹ் ஹுசைன் இஸ்மாயில் நொடிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். 

நொடிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் அறிவுசார் நரம்பியல் துறையில் முதல் தரத்தில் கௌரவப் பட்டம் பெற்ற இவர், தமது ஆராய்ச்சியை தொடர்வதற்காக, புலமைப்பரிசில் பெற்று லண்டன் குயின்மேர் பல்கலைக்கழகம் சென்றார். தனது 25 ஆவது வயதில் கலாநிதிப் பட்டத்தை பூர்த்தி செய்தார். அறிவுசார் நரம்பியல் துறையில் கலாநிதிப்பட்டம் பெற்ற முதல் இலங்கையர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் பழைய மாணவரான இவர் பேருவலையை சேர்ந்த ஹுஸைன் இஸ்மாயில் தம்பதிகளின் புதல்வராவார். 

10 comments:

  1. So, its better to leave like this country very soon for ur safty bro....

    ReplyDelete
  2. Best to leave this country please.

    ReplyDelete
  3. Masa Allah... Great achievement at young age.

    ReplyDelete
  4. maasha Allha great....

    ReplyDelete
  5. MashaAllah, Congratulation Young Professor/Dr... We need your valuable services for our Mother SriLanka. Keep it up.

    ReplyDelete

Powered by Blogger.