September 23, 2018

கொழும்பை பாதுகாக்கும் திட்டம், கொமாண்டோ படைக்கு இராணுவத் தளபதி உத்தரவு


நாட்டின் முக்கியமான இடங்களின் பாதுகாப்பு தொடர்பான அவசர நிலையை எதிர்கொள்வதற்கான உடனடித் திட்டங்களுடன் தயாராக இருக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

சிறிலங்கா இராணுவத்தின் கொமாண்டோ பிரிகேட்டுக்கு இந்த உத்தரவை அவர் பிறப்பித்துள்ளார் என்று ‘றிவிர’ சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றம், அதிபரின் இல்லம், அலரி மாளிகை, மத்திய வங்கி போன்ற நாட்டின் முக்கியமான கேந்திர நிலைகளின் பாதுகாப்பு தொடர்பான திட்டங்களைத் தயாரிக்குமாறே சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவிட்டுள்ளார்.

‘நீர்க்காகம் கூட்டுப் பயிற்சி’யின் ஒரு கட்டமாக, கொழும்பில் உள்ள தாமரைத் தடாகம் அரங்கில் பணயக் கைதிகளை மீட்கும் கொமாண்டோ தாக்குதல் ஒத்திகை ஒன்று கடந்த 20ஆம் நாள் நடத்தப்பட்டது.

இதன்போது, கொமாண்டோக்கள் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய சந்திப்பின் போதே, சிறிலங்கா இராணுவத் தளபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

உயிருக்குப் பயந்தால் கோத்தாபய அமெரிக்காவுக்குப் போகட்டும் – சரத் பொன்சேகா

முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

வவுனியா – நந்திமித்ரகமவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“எனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை விடவும் கோத்தாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகம்.

எனக்கு, 17 பேர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளனர். ஆனால் கோத்தாபய ராஜபக்சவுக்கு, இராணுவம், சிறப்புப் படை, கொமாண்டோக்களை உள்ளடக்கிய 25 பேர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்தனர் என்பது எனக்குத் தெரியும்.

ஒரு ஆர்ப்பாட்டத்தின் போது, அவருக்கு சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்குவதை பார்த்தேன். இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்ட பின்னர், அவருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அவருக்கு போதிய பாதுகாப்பு உள்ளது.

போரின் போது, அவரது பாதுகாப்புக்காக 500 படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால் இப்போது,  அதற்கு அவசியமில்லை, ஏனென்றால்,  நாட்டின் நிலைமை மாறி விட்டது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஒரு சாதாரண குடிமகன் தான். அவர் அரசாங்கத்திலோ அல்லது வேறெந்த பொறுப்பிலுமோ உள்ள ஒருவரல்ல.

நாட்டின் அதிபருக்கோ, பிரதமருக்கோ வழங்கப்படுவது போல, அவருக்கு அமைச்சர்கள் பாதுகாப்பு பிரிவின் பாதுகாப்பு தேவையில்லை.

நான் அறிந்தவரையில் எந்தவொரு செயலருக்கும் ஓய்வுபெற்ற பின்னர் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.

இந்த நாட்டில் பலருக்கு மரண அச்சுறுத்தல் இருக்கிறது. அவர்கள் எல்லோருக்கும் குண்டுதுளைக்காத வாகனங்களை வழங்கி பாதுகாப்பு அளிக்க நாட்டில் நிதி இல்லை.

கோத்தாபய ராஜபக்ச தனது உயிர் பற்றி அச்சம் கொண்டிருந்தால்,  நாட்டை விட்டு வெளியே போகலாம். அவர் ஒரு அமெரிக்க குடியுரிமை பெற்றவர் தானே” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வட­மா­காண சபையின் பின்­ன­டை­வு­க­ளுக்கு, ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினரே காரணம்

தற்போதைய தலைமைகள் போய், மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிங்குவதற்கு சாத்தியும் உள்ளது எனத் தெரிவித்த வட மாகாண  முதலமைச்சர் விக்னேஸ்வரன்,

வட­மா­காண சபையின் ஒரு­சில பின்­ன­டை­வு­க­ளுக்கு அர­சியல் ரொட்­டித்­துண்­டு­களைக் காட்டி அற­நிலை மறந்த அவை­யினர் சிலரே காரணம். அவ்­வாறு இருந்தும் எமது செயற்­பா­டுகள் செவ்­வனே இருந்­தன என்றும் சுட்­டிக்­காட்­டினார்.

எதிர்­வரும் மாதம் 25 ஆம் திக­தி­யுடன் வட­மா­காண சபையின் முத­லா­வது ஆயுட்­காலம் நிறை­வுக்கு வர­வுள்ள நிலையில் அடுத்­த­கட்ட செயற்­பா­டுகள் குறித்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­துவேன். கட்­சி­க­ளிலும் பார்க்க  மக்­களை ஒன்­றி­ணைத்து எமது மக்­களின் தேவை­களை உல­கிற்கு எடுத்துக் கூற என்னால் முடிந்­த­வற்றை செய்வேன் என்று விக்­கி­னேஸ்­வரன் இதன்போது தெரி­வித்தார்.

நாலக சில்வா + நாமல் குமார உரையாடலின் முழுவிபரம் - பல அதிர்ச்சித் தகவல்கள் அம்பலம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்வதற்கு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளரும் பிரதிப் பொலிஸ் மா அதிபருமான நாலக டி சில்வா சதித் திட்டம் தீட்டியதாக வெளியான தகவல்கள் கடந்த நாட்களில் நாட்டில் பல சர்ச்சைகளைத் தோற்றுவித்திருந்தன.

இந்நிலையில், நாலக டி சில்வா சதித் திட்டம் தீட்டியதாக வெளியான தகவல்கள் குறித்த உரையாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த உரையாடல் பின்வருமாறு,

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: எனக்கு மேலதிக வேலைகள் அதிகம், 14 நாட்கள் வெளிநாடு சென்றிருந்தேன். நான் இறுகிப் போயுள்ளேன்.

நாமல் குமார: நான் பயந்து போனேன். சேர் போனையும் ஓப் செய்துவிட்டிருந்தீர்கள். அமித் வீரசிங்கவின் பிரச்சினையால் உங்களுக்கு ஏதும் பிரச்சினையோ என பயந்து போனேன்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: பிரச்சினைகள் என்றால் வந்துள்ளனர். சிலர் எனக்கு எதிராக சேறு பூசுகின்றனர். நான் அவற்றுக்கு அஞ்சவில்லை. நான் அதனை கண்டு கொள்வதுமில்லை. நான் பதினான்கு நாட்கள் வெளிநாடு சென்றிருந்தேன். உனக்கு முடியுமா அவனுக்கு எதிராக பௌத்த துறவிகளை குரல் கொடுக்கச் செய்ய?

நாமல் குமார: எஸ்.ஐ.எஸ் பொறுப்பாளருக்கு எதிராகவா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர் : ஆம்

நாமல் குமார: ஒரு பிரச்சினையும் இல்லை, சேர் எனக்கு சரியான தகவல்கள்தான் தேவை.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: நான் தகவல்களைத் தருகின்றேன். எப்படியாவது அவனுக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். நேரடியாக அவனை பீச்சானாக்க (இழிவுபடுத்துவதற்கான வட்டாரவழக்கு) வேண்டும்.

அமீத் வீரசிங்கவை இவர் சிக்கலில் போட்டார் என்ற வகையில் பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். கண்டி பிரதிப் பொலிஸ் மா அதிபர் இல்லை, அரச புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளரே இதற்கு பொறுப்பு என்பதனை வெளிக்காட்ட வேண்டும்.

பௌத்த அமைப்புக்களின் ஊடாக இதனை வெளிப்படுத்த வேண்டும். இவரின் ஆட்கள் அமித்தை சுற்றியிருந்னர் என வெளிக்காட்ட வேண்டும். அமித்தை வன்முறைகளில் ஈடுபடத்தூண்டியவர் எனவும் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

அமித் வீரசிங்கவை நிர்க்கதியாக்கி அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிக்காட்டினால், அனைவரும் கோபித்துக்கொள்வார்கள்.

நாமல் குமார: அவரின் பெயர் என்ன சேர்

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: நிலந்த ஜயவர்தன

நாமல் குமார: நிலந்த ஜயவர்தன, பிரதமர் நம்புகின்றாரா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர் : பிரதமரும், ஜனாதிபதியும் நம்புகின்றனர்.

நாமல் குமார: அந்த இருவரும் நம்புகின்றனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ம்ம். இந்தப் பிரச்சாரத்தை மேற்கொண்டால், பிரதமர் டக்கென்று அவரை கைவிடுவார்.

நாமல் குமார: லத்தீப் ஐயா பற்றி அறியக் கிடைத்தது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் : அவரை எஸ்.டி.எப்லிருந்து தூக்க வேண்டும்.

நாமல் குமார: அவருக்கு நாகொடிக் பிரிவு உள்ளதல்லவா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: நாகொடிக் இருப்பது எமக்கு பிரச்சினை கிடையாது. எஸ்.டி.எப்லிருந்து தூக்கினால் அதிகாரங்கள் சிதைந்து போகும். எஸ்.டி.எப்ல் பதவி வகிப்பதனால்தான் அவருக்கு அதிகாரம் காணப்படுகின்றது.

நாமல் குமார: நாகொடிக் (போதைப் பொருள் தடுப்புப் பிரிவில்) எனது நண்பர் ஒருவர் இருக்கின்றார். எஸ்.டி.எப். (விசேட அதிரடிப்படை)க்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடுகளை பொலிஸ் மா அதிபர் நிறுத்திக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அது பொய் கதை, மக்களுக்கு எஸ்.டி.எப். பீதி ஏற்பட்டுள்ளது. நாமே மஹாசோன் அமைப்பை பிடித்தோம். எஸ்.டி.எப். அதனைச் செய்யவில்லையே. எமக்கு முடியும், பொலிஸாரினால் மக்களுக்கு சேவையாற்ற முடியும். எஸ்.டி.எப். எதற்கு பொய்யான பீதியே உருவாக்கப்பட்டுள்ளது.

நாமல் குமார: சேர் சொன்னது போன்று முகநூல் கணக்கு ஒன்றை உருவாக்கி இவற்றை போட வேண்டும். இன்று முகநூலே சிறந்த ஊடாக அமைந்துள்ளது. ஒரே மணித்தியாலத்தில் நாடே உலகமே தகவல்களை அறிந்து கொள்ள வழியமைக்கும். பஸ்ஸில் ரயிலில் செல்லும் போதும் அதனை பார்க்கின்றார்கள்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அதற்கு ஓர் கணக்கு உருவாக்க முடியாதா?

நாமல் குமார: இல்லை சேர். எல்லோருக்கும் தெரியும்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: உயிரிழந்த நபர்களின் பெயர்களில் உருவாக்க முடியாதா

நாமல் குமார: முடியும் சேர். அப்படித்தான் பலர் உருவாக்குகின்றார்கள்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அவதானமாக, தொழில்நுட்பமும் உண்டு சட்டமும் உண்டு. சேறு பூச போய் உள்ளே இருக்க நேரிடும். நான் அடித்தால் ஒரே அடிதான் இவனால் எழும்ப முடியாது. சாலிய ரனவக்க மற்றும் டென் பிரியசாத் இவனுடன் இணைந்துள்ளனர். அதனை புளொக் செய்ய வேண்டும்.

நான் முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பிக்கின்றேன், அதற்கு இவர்கள் செய்யும் மோசமான செயற்பாடுகளை அம்பலப்படுத்த வேண்டும். இவர்கள் இருவரையும் பீச்சானாக்க வேண்டும். வரும் தேர்தலுக்கு முன்னதாக இரண்டு மூன்று பேரை தாக்க வேண்டுமென்றால் முடியும்தானே.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: என்னுடன் தொடர்பு பேணுவேரை தேடுகின்றனர்.

நாமல் குமார: உண்மையில் சேருக்கு அஞ்சுகின்றனர்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம் எனக்கு அவர்கள் அஞ்சுகின்றார்கள்.

நாமல் குமார: நீங்கள் பொலிஸ் மா அதிபராவீர்கள் என்று அஞ்சுகின்றார்கள் போலும். ஏதேனும் மோசடியான முறையில் தேசியப் புலனாய்வுப் பிரிவிற்கு பொறுப்பானர் பணம் சம்பாதித்திருக்க வேண்டும்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம் அவ்வாறு பணம் சம்பாதித்துள்ளார். இவருக்கு இந்திய புலனாய்வுப் பிரிவுடன் தொடர்பு உண்டு. பல மில்லியன் ரூபா பெறுமதியான வியாபாரம் செய்கின்றார்கள். ஓய்வு பெற்றுக்கொண்ட பின்னரும் அந்த வியாபாரத்தை முன்னெடுக்க முடியும்.

நாமல் குமார: டி.ஐ.ஜீ நந்தன முனசிங்க என்பவர் பற்றி கேள்வி பட்டேன், அப்படி ஒருவர் இருக்கின்றாரா?

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: அவர்தான் பெரிய பிரச்சினை, பாலியல் தொழில் மையங்கள் ஊடாக பணம் சம்பாதிக்கின்றார், ஊழல் மோசடி குகையென்றே அவரை கூற வேண்டும்.

நாமல் குமார: சீனியர் டி.ஐ.ஜீ ஒருவர்தானே அவர்?

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம். ஹக்மீமன தயாரட்ன உள்ளிட்டோருக்கு பிணை வழங்குவதற்கு இவரே நடவடிக்கை எடுத்திருந்தார். நான் உங்களுக்கு பேசினால் தொலைபேசியில் பதிலளிக்கவும்.

நாமல் குமார: என்னுடைய போனுக்கா சேர்

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: இந்த மொபிடேல் போனை ஆற்றில் வீசி விடவும். தேடிக்கொள்ள முடியாதவாறு ஆற்றில் வீசவும். அடுத்த வாரம் புதிய போன் ஒன்று கிடைக்கும். எமது காரியாலயத்திற்கு ஐந்து போன் வரும் அதில் ஒன்றை தருகின்றேன். புதிய சிம் ஒன்றை போட்டுக் கொள்ளவும்.

அதில் எனக்கு மட்டும் அழைக்கு எடுக்கவும். வீட்டில் இருந்து அழைப்பு எடுக்க வேண்டாம், வீட்டிலிருந்து ஒரு கிலோ மீற்றர் வந்து என்னுடன் பேசவும். தேசிய புலனாய்வு பிரிவு உங்களை பின்தொடரக்கூடும். நானும் ஓர் தனியான இலக்கத்தை பெற்றுக் கொள்கின்றேன் அதன் ஊடாக இருவரும் தொடர்பு கொள்ள முடியும். அல்பிட்டிய பகுதியில் நிஹால் தலதூ என்ற நபர் இருக்கின்றான் அவன் பௌத்த பிக்குகளுடன் நல்ல சிநேகிதம்.

நாமல் குமார: பொலிஸ் உத்தியோகத்தரா

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஆம் அல்பிட்டி எஸ்.ஐ ஒருவர். பெசில், கோதபாய, பொதுபல சேனா உள்ளிட்ட தரப்புக்களுடன் அவனுக்கு தொடர்பு உண்டு. இந்த நபருக்கும் அமைப்புக்களுக்கும் இடையிலான தொடர்பு பற்றிய விபரங்கள் தேடித் தாருங்கள். இந்த நபர்கள் வழங்கும் பொலிஸ் மற்றும் சட்ட ஆலோசனைகள் என்ன என்பது பற்றியும் தெரிவியுங்கள். நினைவிருக்கட்டும் பெயர் நிஹால் தல்துவ.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்: ஜனாதிபதி மீதும் எனக்கு நம்பிக்கையில்லை. நாம் பிரதமர் மீது நம்பிக்கை வைத்தே செயற்பட வேண்டும். 2020ம் ஆண்டில் கோதபாய ராஜபக்ஸ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இணைந்து கொள்வார்கள்.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாடு காணப்படுகின்றது. ஜனாதிபதியை நம்ப முடியாது. அதனால் முடியாத சந்தர்ப்பம் வந்தால் 2020ம் ஆண்டு அண்மிக்கும் போது கோதபாய ராஜபக்ஸவிற்கோ அல்லது மைத்திரிபால சிறிசேனவிற்கோ மாகந்துரே மதுஸைக் கொண்டு ஏதேனும் செய்யுங்கள். முடிந்த எதையேனும் செய்யுங்கள். ஏனென்றால் கோதபாயவிற்கும் மதுஸிற்கும் முரண்பாடு உண்டு அதேபோன்று மைத்திரிக்கும் மதுஸிற்கும் இடையில் முரண்பாடு உண்டு.

இந்நிலையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் என்ற போர்வையில் வேறும் எவரும் பேசினார்களா அல்லது அவரே பேசினாரா என்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்திற்கு செல்லாவிட்டால், சம்பளத்தில் வெட்டு

வெளிநாடு செல்ல தடை, சம்பளம் குறைப்பு! நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் நடவடிக்கை

நாடாளுமன்ற அமர்வுகளின்போது அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடைவிதிக்கப்படவுள்ளது.

இதற்கான தீர்மானம் கடந்த அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக நாடாளுமன்ற அமர்வுகளின்போது கோரமின்மை காரணமாக நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன.

இதனைக்கருத்திற்கொண்டே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் யோசனையை முன்வைத்துள்ளார். இதனை அமைச்சரவை ஏற்றுக்கொண்டுள்ளது.

இதேவேளை, நாடாளுமன்றத்துக்கு சமூகம் தராத நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்களில் வெட்டுக்களை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய, அமீராக உஸைர் தெரிவு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான அமீராக (தலைவர்) அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் (இஸ்லாஹி) தெரிவு செய்யப்பட்டுள்ளார். கண்டி பொல்கொல்ல NICD மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (2018.09.23) நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தேசிய அங்கத்தவர் மாநாட்டின்போதே புதிய தலைவர் தெரிவு இடம்பெற்றது.

1966ஆம் ஆண்டு புத்தளம் நகரில் பிறந்த அஷ்ஷெய்க் எம்.எச்.எம். உஸைர் (இஸ்லாஹி) தனது ஆரம்பக் கல்வியை புத்தளம் ஸாஹிராக் கல்லூரியில் கற்றார். 1987ஆம் ஆண்டு இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டபோது அதன் முதல் தொகுதி மாணவர்களில் ஒருவராக இணைந்து ஷரீஆத் துறையில் பட்டம் பெற்றார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டம் பெற்ற அவர் இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி விரிவுரையாளராக இணைந்தார். தற்போது அதன் உதவி அதிபராக பணியாற்றி வருகிறார்.

இளம் வயதில் ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் மத்திய சபை அங்கத்தவராகவும் அதன் செயலாளராகவும் இருந்து அழைப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அவர், பின்னர் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியில் அங்கத்தவராக இணைந்து கொண்டார். பல வருடங்கள் மாதம்பை கிளை நாஸிமாகவும் வடமேல் பிராந்திய நாஸிமாகவும் (தலைவர்) கடமையாற்றியுள்ளார். கடந்த எட்டு வருடங்களாக ஜமாஅத்தின் மத்திய மஜ்லிஸுஷ் ஷூராவின் அங்கத்தவராக இருந்துவரும் அவர், கடந்த இரண்டு வருடங்களாக ஜமாஅத்தின் தேச விவகாரங்களுக்கான உதவித் தலைவராகவும் கடமையாற்றி வந்தார்.

மாநாட்டுக்கு நாட்டின் சகல பிரதேசங்களிலிருந்தும் வருகை தந்த சுமார் 1600 ஆண், பெண் அங்கத்தவர்களின் பங்குபற்றுதலுடன் இன்று காலை 9.00 மணி முதல் நடைபெற்று வரும் இத்தேசிய மாநாட்டில் உதவித் தலைவர்கள், மத்திய மஜ்லிஸுஷ் ஷூரா அங்கத்தவர் தெரிவுகளும் இடம்பெறவுள்ளன.

ஒருவர் தொடர்ந்தேர்ச்சியாக நான்கு வருடங்களைக் கொண்ட இரண்டு தவணைக் காலமே அமீராகப் பதவி வகிக்க முடியும் என்ற புதிய யாப்பு மாற்றத்தின் அடிப்படையில் நடைபெற்ற முதலாவது அமீர் தேர்தல் இதுவாகும்."ரூபாவின் குத்துக்கரணமும், அதன் பொருளாதார விளைவுகளும்"

-கலாநிதி எம். கணேசமூர்த்தி, பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்-

அண்மைய சில வாரங்களாக இலங்கை ரூபாவின் பெறுமதி மிக மோசமான விதத்தில் வீழ்ச்சியடைந்து செல்வது அனைவரினதும் பேசுபொருளாகி இருக்கிறது. வரலாறு காணாத வகையில் இலங்கை ரூபாவுக்கு எதிராக அமெரிக்க டொலர் சடுதியாக அதிகரித்து 170 ரூபா என்னும் மட்டத்தை அடைந்திருக்கிறது. இது வியாபார மட்டத்தில் மிகுந்த அதிருப்தியையும் உத்தேச எதிர்பார்க்கைகளையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 25 தொடக்கம் செப்டெம்பர் 20 வரையிலான காலப்பகுதியில் இலங்கை ரூபாவின் பெறுமதி அதன் மிகப்பெறுமதியாகிய 154.90 இலிருந்து 168.78 ஆகிய மட்டத்தை அடைந்தது.

பின்வரும் அட்டவணை 2018.03.25 – 2018.09.20 காலப்பகுதியில் ஆசியாவின் முக்கிய நாடுகளின் நாணயங்கள் தேய்வடைந்த விதத்தைக் காட்டுகிறது.

இதன்படி நோக்குமிடத்து அமெரிக்க டொலரின் பெறுமதியானது ஆசிய நாணயங்களுக்கு எதிராக அதிகரித்துச் செல்வதைக் காணமுடிகிறது. சில நாடுகளில் அவற்றின் உள்ளூர் நாணயங்கள் அதிகளவு தேய்வுக்கு உள்ளாகியுள்ளமையும் தெரிகிறது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக அந்நாட்டு நாணயத்தின் பெறுமதி அதிகரித்துச் செல்வதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள இச் சடுதியான வீழ்ச்சிக்கு சர்வதேச ரீதியில் டொலரின் பெறுமதி அதிகரிப்பே காரணமென்றும் உள்ளூர் பொருளாதார நெருக்கடி காரணமாகவே இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையவில்லை எனவும் இலங்கை மத்திய வங்கி காரணம் கூறுகிறது. அத்துடன் 2011/12 காலப்பகுதிகளில் ஏற்பட்ட 12 சதவீத வீழ்ச்சியுடன் ஒப்பிடுகையில் இது குறைவானதெனவும். இலங்கை மத்திய வங்கியிடம் கடன் தவணைகளை மீளச்செலுத்தப் போதுமான வெளிநாட்டு ஒதுக்குகள் உள்ளதாகவும் ஆறுதல் கூறுகிறது. இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை ரூபா அதிகளவில் பாதிப்புக்குள்ளாகவில்லை எனவும் ஒப்பீடு செய்கிறது. அதேவேளை வங்காளதேசம் மற்றும் வியட்னாம் ஆகிய நாட்டு நாணயங்கள் மிகவும் குறைந்த மட்டத்தேய்வினையே அடைந்துள்ளதையும் நாம் அட்டவணையிலிருந்து நோக்கலாம்.

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி கீழ்ச்சியடைந்து செல்கின்றமைக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று உள்நாட்டுப் பொருளாதாரத்தின் உறுதியற்ற தளம்பல் நிலை. மற்றொன்று உலகளாவியரீதியில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள். குறிப்பாக ஐக்கிய அமெரிக்காவின் பாதுகாப்பு வாதப் பொருளாதாரக் கொள்கைகள்.

இவற்றுள் காலங்காலமாகவே இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைவதற்கு உள்நாட்டு காரணிகளே பெருமளவு பங்களிப்புச் செய்துள்ளன. அரசாங்கம் நாணய மாற்று வீத நிர்ணயிப்பில் தலையிடாத நிலையில் முழுக்க முழுக்க சந்தை சக்திகளால் அது முழுமையாக நிர்ணயிக்கப்படும் ஒரு சூழ்நிலையில் ஒரு ஐக்கிய அமெரிக்க டொலருக்கான இலங்கை ரூபாவிலான விலையாகிய நாணயமாற்று வீதத்தை ஐக்கிய அமெரிக்க டொலருக்கான சந்தைக் கேள்வியும் அதன் நிரம்பலும் சேர்ந்து நிர்ணயிக்கின்றன.

இலங்கைக்கு டொலர்கள் கிடைக்கும் மூலாதாரங்களும் அவ்வாறே டொலரை செலவிட வேண்டிய தேவைகளும் உண்டு. ஏற்றுமதி, கடன்பெறல், இலங்கையர் வெளிநாட்டில் உழைத்து அனுப்பும் பணம், வெளிநாட்டு முதலீடுகளின் உள்வருகை போன்ற நடவடிக்கைகள் ஊடாக இலங்கைக்கு டொலர் நிரம்பல் செய்யப்படுகிறது. அவ்வாறே இறக்குமதி, கடன் மீளச் செலுத்தல் முயற்சியாண்மை இலாபங்களைக் கொண்டு செல்லல் போன்ற பல்வேறு காரணங்களால் டொலர் வெளியே செல்கிறது. இவ்விருவகையான பாய்ச்சல்களையே நாம் சென்மதி நிலுவை எனக்குறிப்பிடுகிறோம். இலங்கையைப் பொறுத்தவரை உள்வரும் டொலர்களின் அளவைவிட இருமடங்கு செலுத்தல்களை வெளிநாடுகளுக்கு மேற்கொள்ளவேண்டிய நிலை தொடர்ச்சியாக உள்ளது. இதனால் டொலருக்கு பற்றாக்குறை ஏற்படுவதனால் அதன் விலை தொடர்ச்சியாக அதிகரிக்கிறது. இலங்கைப் பொருளாதாரத்தின் மிகப்பலவீனமான ஒரு அம்சமாக இது பார்க்கப்பட்டபோதிலும் தொடர்ந்து பதவிக்கு வந்த அரசாங்கங்கள் இதனை ஒரு சாதகமான தன்மையாகவே பார்க்க முனைகின்றன. உதாரணமாக

தற்போது டொலரின் விலை சடுதியாக அதிகரித்துச் செல்வதால் இறக்குமதி பொருட்களின் விலைகள் கிடுகிடுவென உயர்கின்றன. இறக்குமதி செய்யப்படும் எதுவும் இதில் விதிவிலக்கில்லை. உணவுப் பொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தொடக்கம் அதி ஆடம்பர சொகுசு மோட்டார் ஊர்திகள் வரை பலவற்றின் விலைகளும் அதிகரித்துள்ளன. இதன்காரணமாக உள்நாட்டு நுகர்வோர் வெளிநாட்டுப் பொருள்களைக் கைவிட்டு உள்ளூரில் உற்பத்தி செய்யும் பொருள்களைக் கொள்வனவு செய்ய முயல்வர். இதனால் உள்ளூர் உற்பத்தி பெருகும்; இறக்குமதிகள் குறையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனூடாக டொலர் நாட்டுக்கு வெளியில் செல்வது குறையும் எனக் கருதப்படுகிறது. மறுபுறம் வெளிநாட்டவர் பார்வையில் முன்னர் ஒரு டொலரைக் கொடுத்து 153 ரூபா பெறுமதியான இலங்கைப் பொருளை இறக்குமதி செய்த ஒருவர், தற்போது 169 ரூபா பெறுமதியான பொருட்களை இறக்குமதி செய்யமுடியும். எனவே இலங்கைப் பொருள் வெளிநாட்டவருக்கு மலிவானதாக மாறியுள்ளது. இது இலங்கையின் ஏற்றுமதிகளுக்கான கேள்விகளை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஏற்றுமதிகள் அதிகரிப்பதால் டொலர் இலங்கைக்கும் அதிகளவில் உள்வருவதால் டொலரின் விலை படிப்படியாகக் குறையும் என்பது கோட்பாட்டு ரீதியாக சொல்லக்கூடிய விளக்கமாகும். ஆனால் இவ்வாறு நடைமுறையில் நிகழக்கூடிய வாய்ப்புகள் மிகமிக அரிது. எனவே டொலரின் எழுச்சியானது இலங்கைப் பொருளாதாரத்திலும் மோசமான பணவீக்க நிலைமையினையும் வெளிநாட்டு முதலீட்டு உள்வருகையில் பெருந்தாக்கத்தையும் ஏற்படுத்தும். இது பொருளாதார உறுதிப்பாட்டை பாதித்து நிச்சயமற்ற சூழலை ஏற்படுத்தும். இந் நிச்சயமற்ற சூழல் நிலைமையை மேலும் மோசமாக்கும்.

ஒரு அண்டாவில் நீர் நிரப்பி அடுப்பில் வைத்து நெருப்பு மூட்டிய நிலையில் அதன் உள்ளே விடப்பட்ட நண்டு எவ்வாறு சூடேறு முன்னர் நீந்திக் களிக்குமோ அவ்வாறே பொறுப்புவாய்ந்த நிறுவனங்கள் இப்போதைய பொருளாதார சூழலை இலகுவாக எடுத்துக் கொள்கின்றன. அடுத்து வரும் வாரங்களுக்குள் பாரிய டொலர் உட்பாய்ச்சல் நாட்டுக்குள் உள்வராவிட்டால் நி​ைலமை மேலும் மோசமடைவதைத் தவிர்க்க இயலாது.

நுகர்வுப் பொருள் விலை அதிகரிப்பு, எரிபொருள்விலை அதிகரிப்பு பயணக்கட்டண அதிகரிப்பு, உள்ளிட்ட அதிகரிப்புகள் வாழ்க்கைச் செலவினை எகிறச்செய்து மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கும் அதேவேளை அண்மையில் வரிகளின் அதிகரிப்பு காரணமாக மத்தியதர வர்க்கத்தின் மெய்வருமானத்தில் பாரிய ஒரு அடி விழுந்துள்ளது. எனவே 100 ரூபா சம்பளமாகப் பெறும் ஒருவர் செலவு செய்யக்கூடிய அளவாக 50 ரூபா மட்டுமே அமையும்.

மீதி 50 ரூபா ஒரு புறம் விலை அதிகரிப்பினாலும் மறுபுறம் அரசாங்க வரிகளாலும் விழுங்கப்பட்டு விடும்.

சர்வதேசக் காரணங்களால் டொலரின் பெறுமதி அதிகரிப்பதை தடுக்க முடியாவிட்டாலும் உள்ளூர் காரணிகளைக் கட்டுப்படுத்த முயற்சிப்பது அவசியம். அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்காக அரசாங்கம் இறக்குமதி செய்யும் வாகனங்கள், தளபாடங்கள், அலங்காரப் பொருட்கள் மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்கள் உள்ளிட்ட எல்லா மட்டங்களிலும் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டிய காலப்பகுதி இது.

அரசாங்கம் ஒரு முன்மாதிரியாக செலவினக்குறைப்பை செய்ய வேண்டியது அவசியம். அரச துறை நடவடிக்கை காரணமாக வெளியேறும் ஒவ்வொரு டொலரையும் ஒன்றுக்கு பலதடவை சிந்தித்தே அனுப்பவேண்டும். இல்லாவிட்டால் இலங்கை அரசாங்கமும் அதன் அதிகாரிகளும் எதிர்பார்ப்பை விட மோசமானதொரு பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். அதிலிருந்து மீண்டு வருவது இலகுவானதாக இருக்காது. பதவியில் உள்ள அரசாங்கம் அதற்காக செலுத்த வேண்டிய 'அரசியல்' விலை மிக மிக அதிகமானதாக இருக்கும்.

டொலரின் குழப்பத்திற்கு விரைவில், முற்றுப்புள்ளி வைக்கப்படும் - ரணில்

-ருஸ்மானுல் ஹஸன்-

டொலரின் பெறுமதி அதிகரிப்பினால் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தளம்பலுக்கும் குழப்பத்திற்கும் விரைவில் நிரந்தரமான தீர்வு காணப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (22) தெரிவித்தார்.

அமெரிக்காவில் சர்வதேச முதலீட்டாளர்கள் பாரியளவில் டொலர்களை முதலீடு செய்து கைத்தொழில்களில் ஈடுபட்டுள்ளதனால் எமது நாட்டின் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது என்றும் இதனைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நாத்தாண்டி, லூர்து மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத் திறப்பு விழாவில் நேற்று பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பிரதமர் உரையாற்றினார். வித்தியாலய அதிபர் பீ.எப்.பர்ணாந்து தலைமையில் நடைபெற்ற விழாவில் தொடர்ந்து உரையாற்றிய பிரதமர்,

"தற்போது உலக நாடுகளில் எண்ணெய் விலை அதிகரித்து காணப்படுகின்றது. எனினும் நாம் எமது நாட்டில் எண்ணெய் விலையை ஓரளவு கட்டுப்பாட்டில் வைத்து பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றோம். எமது நாட்டில் எண்ணெய் உற்பத்தி கிடையாது. நாம் எண்ணெய்யை விலைக்கு வாங்குவதற்கும் டொலரையே செலுத்த வேண்டும்.

ஏற்றுமதியாளர்களும் டொலர்களை அமெரிக்காவிலேயே முதலீடு செய்து வருகின்றனர். ஏற்றுமதி வருமானத்தை ஒரே தடவையில் எமது நாட்டுக்கு அவர்கள் கொண்டு வருவதில்லை.இது எமக்கு பாரிய பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.இதனை நாம் கூடிய விரைவில் நிவர்த்தி செய்வோம்.

எமது ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி அடைவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. நாம் எமக்குத் தேவையான கூடுதலான எண்ணெய்யை ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்தே வாங்கி வந்தோம்.

இதற்கு இப்போது அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனாலும் உலக நாடுகளில் எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது.

.டொலரின் பெறுமதி அதிகரித்து காணப்படுவது போன்று எண்ணெய்யின் விலையும் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை 77.50 டொலராக இருக்கிறது. கடந்த 2015 ஆம் ஆண்டில் ஒரு பீப்பாய் எண்ணெய்யின் விலை 45 டொலராக இருந்தது.

டொலரின் விலையும் எண்ணெய்யின் விலையும் அதிகரித்துள்ளதால் எமது நாட்டின் பொருளாதாரமும் இதனால் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதேபோன்று எமது மனைப் பொருளாதாரமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆனாலும், நாம் எமது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஒதுக்கப்பட்டு வந்த நிதியை குறைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்கவில்லை.அமெரிக்காவின் சுங்கப் பிரிவு, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பொருட்களுக்குச் சுங்க வரியை விதித்துள்ளது. இதே போன்று சீனாவும் ஜப்பானும் சுங்க வரியை அமெரிக்காவின் பொருட்களுக்கு விதித்துள்ளன.

இதனாலும் உலக நாடுகளில் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இது தொடர்ந்து இருப்பதில்லை.இதிலிருந்து நாம் மீண்டு வருவதற்கு பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம். உலக நாடுகளில் பல நாடுகள் தற்போது பூகோள பொருளாதார சிக்கலுக்கு முகங்கொடுத்து வருகின்றன.

எமது அயல் நாடான இந்தியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், கொரியா, இத்தாலி ஆகிய நாடுகளும் அவற்றில் சிலவாகும்.தேசிய உற்பத்தி வருமானத்திலிருந்து ஆறு சத வீதத்தை கல்வி நடவடிக்கைகளுக்கு ஒதுக்கியுள்ளோம்.இது ஒரு போதும் குறைக்கப்பட மாட்டாது. எமது மாணவர்களின் எதிர்காலமே எமக்கு முக்கியமாகவுள்ளது எனக் கூறினார். நாத்தாண்டி, லூர்து மகா வித்தியாலயத்தில் சுமார் 85 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடத்தைத் திறந்து வைத்ததுடன் புதிய தொழில்நுட்ப ஆய்வு கூடத்திற்கான 39 இலட்சம் ரூபாய் பெறுமதியான உபகரணங்கள் மற்றும் வித்தியாலயத்திற்கான வாத்தியக் கருவிகள்,விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கினார்.

தங்கத்தின் விலை உயர்வடைந்தது

உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.

இதன்படி, உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்சின் விலை 1,119 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

எதிர்வரும் வாரங்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்குமென பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண் விரிவுரையாளரின், மரணத்திற்கு காரணம் இதுதான்

திருகோணமலையில் சடலாமக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் நீரில் மூழ்கியமையால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே மரணம் சம்பவிப்பதற்கான காரணம் என்பது பிரேத பரிசோதனையின் ஊடாக தெரியவந்துள்ளது. 

பிரேத பரிசோதனையானது யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று மாலை 4 மணியளவில் இடம்பெற்றது. 

குறித்த பெண்ணின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை என்பதுடன், குறித்த பெண் இரண்டு அல்லது மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த்தாகவும் நீரில் மூழ்கியமையால் இடம்பெற்ற மூச்சுதிணறனாலேயே இம் மரணம் சம்பவித்தமை என்பது தெரியவந்துள்ளது. 

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் நேற்று திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார். 

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணி பெண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டிருந்தார். 

-பிரதீபன்-

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு, கோட்டாபய தகுதி வாய்ந்தவர் இல்லை - பொன்சேகா

பாதுகாப்பு வழங்கும் அளவிற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தகுதி வாய்ந்தவர் இல்லை என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். 

நேற்று (22) களனி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

கோட்டபய ராஜபக்ஷ தற்போது அரசாங்க உத்தியோக்கதர் ஒருவர் இல்லை எனவும் அவர் மக்கள் தற்போது எந்த ஒரு சேவையையும் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தனது பாதுகாப்பிற்காக 17 பாதுகாப்பு உத்தியோகத்தர்களே வழங்கப்பட்டுள்ளதாகவும் இருப்பினும் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இதுவரையில் 25 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

இதேவேளை பொலிஸ் மா அதிபருக்கு முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் நியாயமான விசாரணை ஒன்றை மேற்கொண்டு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு முஸ்லிம்களின் கவனத்திற்கு...!

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாதுஹு 

எமது வடக்கு இனிய உறவுகளே எமது சமூகம் தமது தாயக மண்ணை விட்டுவிரட்டப்பட்டு இன்று வரையில் சொல்லமுடியாத துன்பங்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டுவருகின்றதை யாவரும் அறிவர்.

காலத்தின் தேவை கருதி எமது நிலைமைகளை சர்வதேசத்திற்கும் எமது தாய் நாட்டின்தலைமைகளுக்கும் தெரியப்படுத்தி நாம் இழந்த இழப்புக்களுக்கு இழப்பீடுக்களையும் நஷ்ட ஈடுகளையும் உரிமைகளையும் பெறவேண்டியுள்ளோம். இன்ஷா அல்லாஹ் றஹ்மானின் துணையுடன் அறிவுசார் ரீதியான முன்வைப்புக்களை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

இதன்மூலம் எமது விபரங்களை உரியவர்களுக்கு உரியமுறையிலும் சந்தர்ப்பங்களிலும் முன்வைக்க முடியும். எனவே இதற்காக பரந்துபட்ட தூரநோக்காக செயற்படவேண்டிய காலகட்டமிது. எனவே இதுவிடயமாக எமது கடந்தகால, பூர்வீக நிலை  அகதியான காலசூழ்நிலை தற்போதைய களநிலை எதிர்காலத்தில் நிறைவு செய்யப்பட வேண்டிய வேலைப்பாடுகள் உள்ளிட்ட முன்வைப்புக்களை உள்ளடங்கிய ஆவணத் தகவல்களை வெளிக்காட்டும் முகமாக  யாழ்ப்பாணம் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா போன்ற வடமாகாணத்தின் களநிலைமைகளையும் மீள்குடியமர்த்தப்படால் தற்போதுள்ள புத்தளம் நீர்கொழும்பு போன்றவரகளின் நிலைமைகளையும் இருபது நிமிடங்களில் இருக்கக்கூயதான காட்சித் திரையுடன் ஆவணப்படுத்தலும் பத்து நிமிடங்களை மாவட்டபிரதிநிதிகளின் முன்வைப்புக்களுக்குமாக ஒதுக்கீடுகளை செய்யவும்  ஒருமாவட்டத்திற்கு சராசரியாக முப்பதுநிமிடம் மட்டுமே ஆகும். 

மேலும் கடல்கடந்து எமது உறவுகளுக்காக சர்வதேசத்தன் குரலாக இயங்கி வரும்   JMA அமைப்பு சார்பான முன்வைப்புக்களுக்கு பதினைந்து நிமிடங்களும் JMCI அமைப்பு சார்பான முன்வைப்புகளுக்கு பதினைந்து நிமிடங்களையும் நேரம் ஒதுக்கீடுகளையும் வழங்கியுள்ளோம். 

எனவே தங்கள் தங்களின் மாவட்டங்களை பிரதிநிதித்துவம் பிரமுகர்கள் சிவில் அமைப்புக்களும் தன்னார்வு அமைப்புக்களும் கட்சிபேதமின்றி ஒருமித்த முன்வைப்புக்களை காட்சிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

எனவே இதற்கான முன்வைப்புக்களை  அனுப்பி வைக்குமாறு ஆரம்ப ஏற்பாட்டுக் குழுசார்பாக புத்தளம் வாழ் யாழ் கிளிநொச்சி வெளியேற்றப்பட்ட சிவில் சமூகசம்மேளனம்.முன்னெடுத்துள்ளது.

எனவே இதற்காக தங்கள் சார்பான ஆலோசனைகளையும் முன்வைப்புக்களிலும் வழங்கி பங்கெடுக்குமாறு சகல அமைப்புகளுக்கும் அன்பாக வேண்டுகின்றோம். 

இதற்காக யாவரும் தங்களால் ஆன ஆதரவையும் ஒத்துழைப்புக்களையும் சகலவழங்குமாறு அன்பாக வேண்டுகின்றோம் .   

அப்துல் மலிக் மெளலவி    0718618749 whatsapp               

ஹசன் பைறூஸ் 0767284996 whatsapp 

hfairoos@gmail.com இவர்களுடன் தொடர்புகொண்டு தகவல்களை வழங்கவும் நிகழ்வுகளை செயல்படுத்தவும், 2018.10.05 திகதி காலப்பகுதிக்கு இடையில் அனுப்பி வைக்குமாறு அன்பாக வேண்டுகின்றோம். 

 நாம்யாவரும் இப்பயணத்திற்காக முன்னெடுப்புக்கள் செய்யமுயலுவோமாக. வாருங்கள். அன்பின் இனிய உறவுகளே தாங்கள் யாவரும் முன்வந்து இப்பாரிய நிகழ்வுகளுக்கு .உங்களின் மேலான உதவிகள் சகல வழிகளிலும் தேவையாக உள்ளது.

"நீதிமன்றத்தில் வைத்து, என்னை கொலைசெய்ய திட்டம்" - கோத்தாபய

பாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

“பல்வேறு நம்பகமான வழிகளின் ஊடாக சரிபார்த்துக் கொண்டதில், இந்த தகவல் உண்மையானது என்று தெரிய வந்துள்ளது.

அதற்குப் பின்னர், எனக்கு முழுமையான எண்ணிக்கை கொண்ட பாதுகாப்பு அணியை மீளப்பெறுவது குறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் பேசினேன்.

எனது பாதுகாப்பு அணி பாதியாகக் குறைக்கப்பட்டு விட்டதாக கூறினேன். அதனைப் பார்த்துக் கொள்வதாக இணங்கிய போதிலும், அதற்குப் பின்னர் அவரிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை. இது நடந்து ஒன்றரை மாதங்களாகி விட்டது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் முன்னிலையாகும் போது தன் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என்றும், பாதாள உலகக் குழுத் தலைவரின்  இந்த முயற்சியை அறிந்து கொண்டு தாம் மேலதிக முன்னேற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவையும், தன்னையும் கொலை செய்யும் சதித் திட்டம் பற்றிய செய்திகள் வெளியானதும் முன்னாள் மற்றும் பணியில் இருக்கும் இராணுவ அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், பலர் தொலைபேசியில் அழைத்து,  மேலதிக பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்யுமாறும், உள்ளூர் பயணங்களை குறைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர் என்றும் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தச் சதித் திட்டம் தொடர்பாக எங்கிருந்து தகவல் கிடைத்தது என்றோ, அதனை எவ்வாறு சரிபார்த்துக் கொண்டார் என்பதையோ கோத்தாபய ராஜபக்ச வெளிப்படுத்த மறுத்து விட்டார்.

அதேவேளை, தம்மைக் கொல்ல சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணைகளை நடத்துமாறும், தமக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் சிறிலங்கா காவல்துறை மா அதிபருக்கு, கோத்தாபய ராஜபக்ச கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மைத்திரி, கோத்தா கொலைச் சதி – 2 LMG துப்பாக்கிகள் மீட்பு - பூஜித்தவின் உத்தரவில் வழங்கப்பட்டதாம்...!

மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டமை குறித்து விசாரிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகள் (எல்எம்ஜி) கைப்பற்றப்பட்டுள்ளன.

பயங்கரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட இந்த இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகளும், கொலைச் சதிக்குப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருந்ததா என்ற கோணத்தில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

பயங்கரவாத தடுப்பு பிரிவின் பணிக்கு இலகு இயந்திரத் துப்பாக்கிகள் தேவையில்லை என்ற போதும், இவை அந்தப் பிரிவின் பொறுப்பில் இருந்தமை குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

இந்த இலகு இயந்திரத் துப்பாக்கிகள் பம்பலப்பிட்டியில் உள்ள சிறிலங்கா காவல்துறையின் மத்திய ஆயுத களத் தலைமையகத்தினால், காவல்துறை மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் ஆணையின்படியே பயங்கரவாத தடுப்புப் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகிறது.

September 22, 2018

ஆடிப்போன சந்திரிக்காவும், பைசரும் - பாலம் திறப்பு விழாவில் கூச்சல்குழப்பம் (வீடியோ)

அத்தனகல்ல ஓயாவை ஊடறுத்துள்ள அத்தனகல்ல – கோனகல பாலம், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது, பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச அரசியல்வாதிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அமைதியின்மை ஏற்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா, நிதி மற்றும் ஊடகத்துறை பிரதி அமைச்சர் லசந்த அலகியவத்த ஆகியோரின் தலைமையில் அத்தனகல்ல – கோனகல பாலத்தை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த பாலத்தின் நிர்மாணப் பணிகள் கடந்த ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்து, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் ஆதரவாளர்கள் சிலர் பாலத்திற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

சிலரின் வெற்றிக்கோஷத்துடனும் எதிர்ப்புக் கூச்சலுக்கு மத்தியிலும் பாலம் திறந்து வைக்கப்பட்டது.

பாலத்தை திறந்து வைத்த பின்னர் நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அமைச்சர் பைசர் முஸ்தபா உரையாற்றுவதற்கு முன்னர் அப்பகுதியின் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், எதிர்ப்பு தெரிவித்தவர்களின் கூச்சலுக்கு மத்தியில் அமைச்சர் உரையாற்றினார்.மாகாண தேர்தலை, விரைவாக நடத்துங்கள் - ரணிலிடம் சபாநாயகர் கோரிக்கை

மாகாண சபைகள் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான மீளாய்வு அறிக்கையைக் கையளிப்பதற்கு பிரதமர் தலைமையிலான ஐவர் அடங்கிய குழுவினர் மேலும் 2 மாத கால அவகாசத்தை சபாநாயகரிடம் கோரியுள்ளனர்.

அத்துடன், எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை மேலும் தாமதமாகுவதற்கு இருக்கும் சூழ்நிலை தொடர்பாக அமைச்சரவையில் விளக்கமளிக்கப்படும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

சபாநாயகரை நேற்றுமுன்தினம் சந்தித்திருந்த மீளாய்வுக்குழ உறுப்பினர்கள், எல்லை நிர்ணயம் தொடர்பாக மேலும் விரிவாக ஆராய்ந்து இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டியுள்ளதாகவும் - இதனால் தமது அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக மேலும் 2 மாத காலம் தாமதம் ஏற்படலாம் எனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இது தொடர்பாக ஆராய்வதற்காக சபாநாயகர் நேற்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தியிருந்தார்.

இக்கூட்டத்தின் போது, மீளாய்வுக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவையென்றால் அது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

எப்படியாவது கூடிய விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டுமென பிரதமர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்துள்ள மீளாய்வு குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை மேலும் தாமதமாகுவதற்கு இருக்கும் சூழ்நிலை தொடர்பாக அமைச்சரவையின் அவதானத்திற்குக் கொண்டு சென்று அங்கு பெற்றுக்கொள்ளப்படும் யோசனைகளை கட்சித் தலைவர்களிடம் முன்வைப்பதற்குத் துரித நடவடிக்கையெடுப்பதாகக் தெரிவித்துள்ளார்.

அதா - உதுமா நாளை முக்கிய பேச்சு

- மூத்த ஊடகவியலாளர் Suaib Cassim- 

முஸ்லிம் கட்சிகளை ஒன்றிணைக்கும் தனது நிலைப்பாட்டுக்கு தேசிய காங்கிரஸின் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கவே கட்சியின் பதவிகளை இராஜினாமாச் செய்ததாக கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம் எஸ் உதுமாலெவ்வை எம்மிடம் இன்று இரவு (22) தெரிவித்தார்.

கொழும்பு புதுக்கடையில் எங்களைச் சந்தித்த அவர் தெரிவித்ததாவது.

தொடர்ந்து தேசிய காங்கிரஸில் எனது பயணம் தொடரும். நாளை தலைவர் அதாவுல்லாவுடன் நடத்தப்படவுள்ள சந்திப்பில் முஸ்லிம் கட்சிகளுடன் இணங்கிச் செல்லும் எனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவேன்.

அம்பாரை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் கட்சிகளும் சம பலத்தில் உள்ளன. இந்நிலையில் முஸ்லிம் கட்சிகள் பிரிந்து செயற்படுவது பேரினவாதத்தின் நில ஆக்கிரமிப்புக்கு வாய்ப்பாகிவிடும். எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள எந்தத் தேர்தலிலும் விழிப்பாகவும்,விட்டுக் கொடுப்புடனும் பேரினவாதக் கட்சிகள் கூட்டாகச் செயற்படவுள்ளன.

இப்பின்னணியில் முஸ்லிம் சமூகக் கட்சிகள் பிரிந்து செயற்படுவதன் ஆபத்தை என்னால் உணர முடிகின்றது. இதன் ஆபத்தை தே.காங்கிரஸ் தலைமைக்கு உணர்த்தி வருகிறேன்.நாளைய சந்திப்பிலும் உணர்த்துவேன்.

சமூகத்தை ஒற்றுமைப்படுத்தும் எனது முயற்சிகளுக்கு எனது கட்சித் தலைமையின் அங்கீகாரம் கிடைக்குமென நம்புகிறேன் ."சமூகக் கட்சிகளின் கூட்டை ஏற்படுத்தும் முயற்சிகளில் அமைச்சர் ரிஷாதுடன் சேர முடியாது. அவருடன் இணங்க முடியாது. இவருடன் நெருங்க இயலாது" எனத் தொடர்ந்தும் தேசிய காங்கிரஸ் காலம் கடத்த முடியாது.

சமூக ஒற்றுமையை ஏற்படுத்தி பேரினவாதம்.கடும்போக்குவாதங்களை அடியோடு வீழ்த்தும் எனது வியூகம் வெற்றியளிக்கும் வரை தேசிய காங்கிரஸின் தொண்டனாகவே உழைப்பேன். அக்கரைப்பற்றில் இடம் பெற்ற உங்கள் புத்தக (வடபுல முஸ்லிம்களின் மீள் குடியேற்ற சவால்கள்) வெளியீட்டு விழாவில் இப்பரந்த நோக்கத்துடனே,தான் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களுக்கு இனிமேல் அடிக்கவோ, ஏசவோ முடியாது - நடைமுறைக்கு வருகிறது சட்டம்

இலங்கைப் பாடசாலைகளில் உடல் ரீதியான தண்டனைகள் மற்றும் வன்முறைகளை ஒழிப்பதற்கான ஜனாதிபதி காரியாலயம், சிறுவர் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி மற்றும் இலங்கை மன்றம் இணைந்து ஏற்பாடு செய்யும் 2020 நோக்கி நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் ஒக்டோபர் 1ம் திகதி சர்வதேச சிறுவர் தினத்தன்று பாதயாத்திரையொன்று ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு -7 இலங்கை மன்ற நிறுவனத்திலிருந்து ஆரம்பிக்கும் நடைபவனி ஆர்ப்பாட்ட ஊர்வலம் அல்ல என சிறுவர் துன்புறுத்தலுக்கு முற்றுப்புள்ளி அமைப்பின் தலைவர் டொக்டர் துஷ் விக்ரமநாயக்க கூறினார். செப்டம்பர் 1ம் திகதி இந்த நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வடக்கு, கிழக்கு, மேல், தெற்கு என அனைத்து பகுதிகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் சிங்கள, தமிழ், முஸ்லிம், மலே, பரங்கியர் உள்ளிட்ட அனைத்து இனத்தினரும் கலந்து கொள்ளவுள்ளார்கள். பாடசாலைகளில் எமது பிள்ளைகளை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் எனக் கோரி மனுவொன்றும், அமைப்பின் மூலம் முன்வைக்கப்பட்ட ஐந்து யோசனைகளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அன்று மாலை 4 மணிக்கு கையளிக்கப்படவுள்ளது.

இது குறித்த விடயங்கள் தொடர்பாக விளக்கமளித்த டொக்டர் துஷ் விக்ரமநாயக்க, இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் விசேட அம்சங்கள் பல உண்டு. நாம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பிள்ளைகளை இணைத்து இத்திட்டம் பற்றி அறிவுறுத்துகின்றோம். அதே போல் நிபுணர்கள் குழுவினருடன் இணைந்து செயல்படுகின்றோம். அதைத்தவிர ஐந்து அம்ச யோசனை மிக முக்கியமானது. இலங்கை 1991ல் ஐக்கிய நாடுகளில் சிறுவர் உரிமைகள் தொடர்பான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு அந்த சட்ட திட்டங்களுக்கு உட்படுவதாக உறுதியளித்துள்ளது.

ஆனால், அன்று தொடக்கம் இன்று வரை பல பாராளுமன்ற தேர்தல்கள் இடம்பெற்றன. 4 ஜனாதிபதிகள், 9 பிரதமர்கள் தெரிவு செய்யப்ப ட்டார்கள். ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாங்கள் வழங்கிய உறுதிமொழியை அதாவது சிறுவர்களுக்கு உடல் ரீதியாக தண்டனை வழங்குவதை நிறுத்த எதுவும் செய்ய முடியாது போயுள்ளது. அதனால் கடந்த பெப்ரவரி மாதம் ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் தொடர்பான அமைப்பால் எமது நாட்டுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைவாக இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளார்கள்.

விக்னேஸ்வரன் தலைமையில், புதிய அரசியல் கூட்டணி - தமிழ் கூட்டமைப்பு இல்லாமல் போகுமா..?

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணி அடுத்த மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்று அணியாக உருவாக்கப்படும் இந்த புதிய கூட்டணியில் தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை இணைத்துக் கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த கட்சிகள் சாதகமான பதில்களை வழங்கியிருப்பதாகவும் பேசப்படுகிறது. வடக்கை சேர்ந்த கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் மற்றும் வெளிநாடு வாழ் புலம்பெயர் சமூகத்தின் முழுமையான ஆதரவுடன் இந்த புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட உள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் முடிந்து, சபை கலைக்கப்பட்டதும் புதிய அரசியல் கூட்டணியின் தலைமை பொறுப்பை விக்னேஸ்வரன் ஏற்பார் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பில் ரயில் ஒன்றில் தீ விபத்து, பயணிகள் பெரும் பதற்றம்


கொழும்பில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக  ரயில் நிலையத்தில் நின்ற பயணிகள் பெரும் பதற்றம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

தெமட்டகொட ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் ஒன்றிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக 3 ரயில் பெட்டிகளில் தீ பரவல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பழுது பார்க்கும் நோக்கத்துடன் கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கொழும்பு தீயணைப்பு பிரிவினரின் 3 வாகனங்கள் பயணியில் ஈடுபட்டுள்ளன.


அரசாங்கத்தை எம்மிடம் ஒப்படையுங்கள், ரூபா வீழ்ச்ச்சியை நிறுத்திக்காட்டுகிறோம் - மகிந்த


இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதை தடுக்க முடியாவிட்டால் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தில் சரியான தலைமைத்துவம் இல்லாததே நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு பிரதான காரணம்.

நாங்கள் ஆட்சியை ஒப்படைக்கும் போது அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 131 ரூபாய் 40 சதமாக இருந்தது.

அதற்போது அதன் பெறுமதி 170 ரூபாயாக உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பிழப்பை தடுக்க முடியாது போனால் அரசாங்கத்தை எங்களிடம் ஒப்படையுங்கள்.

எமது நாட்டின் பொருளாதாரத்தை சக்திமிக்கதாக மாற்றுவதற்கு உலகின் அனைத்து நாடுகளுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம்.

அது இந்தியாவா? அமெரிக்காவா என்பதில் எமக்கு பிரச்சினையில்லை. நாட்டில் ஸ்தீரமற்ற அரசாங்கம் காணப்படுவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இங்கு வருவதற்கு அச்சப்படுகின்றனர். இருக்கும் முதலீட்டாளர்களும் இலங்கையை கைவிட்டு செல்லும் நிலை காணப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தேர்தல் ஒன்று நடைபெற வேண்டும். அதன் பின்னர் நாங்கள் அதிகாரத்தை கைப்பற்றுவோம். எங்களால் வெற்றிபெற முடியுமென நாங்கள் உள்ளூராட்சித் தேர்தலில் நிரூபித்துக்காட்டியுள்ளோம். எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் உயிரைப் பறிகொடுப்பதில் உலகிலேயே இந்தியா முதலிடம்

இந்தியாவில் 2017ஆம் ஆண்டில் ஒரு வயது நிறைவடைவதற்கு முன்பே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 8,02,000 என்கிறது ஐக்கிய நாடுகள் அவையின் குழந்தைகளின் இறப்பு விகிதத்தை கணக்கிடுவதற்கான பன்முகமைக் குழு (United Nations Inter-agency Group for Child Mortality Estimation) வெளியிட்டுள்ள அறிக்கை.

உலக சுகாதார நிறுவனம், உலக வங்கி, ஐ.நாவின் சர்வதேச குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப் ) மற்றும் ஐ.நா மக்கள் தொகை பிரிவு ஆகிய அமைப்புகள் உள்ளடங்கிய இந்தக் குழுவின் அறிக்கையில் குடிநீர், சுகாதாரம், போதிய ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகள் ஆகியவை கிடைக்காததுதான், உலகெங்கும் நிகழும் இந்த மரணங்களுக்குக் காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

2016இல் இந்தியாவில் இந்த எண்ணிக்கை 8,67,000. கடைசி ஐந்து ஆண்டுகளிலேயே 2017இல்தான் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது.

எனினும் அந்த அறிக்கையின் தரவுகளைப் பகுத்தாய்ந்தால், (ஓர் ஆண்டுக்கு உள்ள 3,15,36,000 வினாடிகளை 8,02,000ஆல் வகுத்தால்) 2017இல் சுமார் 39.3 வினாடிக்கு ஒருமுறை ஒரு வயதுக்கும் குறைவான ஓர் இந்தியக் குழந்தை உயிரிழந்துள்ளது தெரிய வருகிறது.

உலகெங்கும் பிறக்கும் குழந்தைகளில் 18% குழந்தைகள் பிறக்கும் இந்தியாதான், உலகிலேயே ஒரு வயதை அடையும் முன்பு இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடும் ஆகும்.

உலகில் பிறந்து 28 நாட்களுக்குள் இறக்கும் குழந்தைகளில் சுமார் கால் பங்கு இந்தியக் குழந்தைகள்தான். அதாவது உலகில் பிறக்கும் குழந்தைகளில் 18 சதவீதக் குழந்தைகள் இந்தியக் குழந்தைகள். அதே நேரம் உலகில், பிறந்து 28 நாள்களில் இறக்கும் குழந்தைகளில் இந்தியக் குழந்தைகள் 24 சதவீதம்.

"இந்தியக் குழந்தைகளிடம் நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாடு, தடுப்பூசி எல்லா குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறதா என்கிற விவரம், பெண்கள் கல்வி விகிதம், மருத்துவ வசதிகள் எந்த அளவுக்கு எல்லோருக்கும் கிடைக்கிறது என்ற விவரம் ஆகியவற்றை குழந்தைகள் இறப்பு விகிதத்துடன் பொருத்தி பார்க்க வேண்டும்," என்கிறார் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரவீந்திரனாத்.


1990-ல் ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான காலகட்டத்தில் இறக்கும் இந்தியக் குழந்தைகளின் எண்ணிக்கை 1.26 கோடியாக இருந்தது. இது 2017-ல் 54 லட்சமாகக் குறைந்துள்ளது. ஆனால், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இறப்பில் உலகளவில் 50% பங்கு வகிக்கும் ஆறு நாடுகளில் (இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ ஜனநாயகக் குடியரசு, எத்தியோப்பியா, சீனா) இந்தியா முதன்மையான நாடாக உள்ளது.

ஐந்து வயதுக்கு முன்னரே இறக்கும் குழந்தைகளில் 32% குழந்தைகள் இந்தியாவையும், நைஜீரியாவையும் சேர்ந்தவை. அதாவது இரு நாடுகளில் நடக்கும் இத்தகைய மரணங்கள் உலக அளவில் நடப்பதில் சுமார் மூன்றில் ஒரு பங்கு.

டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..?


இந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தினை ஹாங்காங் வீரர் கூறியுள்ளார்.

துபாய் மற்றும் ஐக்கிய அமீரகத்தில் ஆசிய கிண்ணத்திற்கான போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.

போட்டியின் இடையே ரசிகர்களின் ஆரவாரமான கரகோஷத்தில் டோனி களமிறங்கினர். 2 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காத டோனி துரதிஷ்டவசமாக 3-வது பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.

இதனை சற்றும் எதிர்பார்த்திராத ரசிகர்கள் , அதிர்ச்சியில் உறைந்து போயினர். அதேசமயம் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் எதிர் அணியினர் துள்ளிக்குதிக்க, பந்து வீச்சாளர் எசன் கான் உடனே தரையில் விழுந்து வணங்கினார். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவியது.

இந்த நிலையில் டோனியின் விக்கெட் குறித்து பேசியுள்ள அவர், நான் டோனியின் விக்கெட்டை வீழ்த்தியதும் ஏன் கீழே விழுந்து கடவுளை வணங்கினாய் என அனைவரும் கேட்கின்றனர். டோனியின் விக்கெட் 5 விக்கெட்டுகளுக்கு சமம். டோனியின் விக்கெட்டுடன் சேர்த்து இந்தியாவிற்கு எதிராக நான் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தேன் என பெருமையாக கூறியுள்ளார்.

மேலும், அந்த சமயத்தில் விக்கெட் கீப்பரை பார்த்து தான், நான் நடுவரிடம் முறையிட்டேன். ஆனால் டோனி உடனடியாக அங்கிருந்து நடக்க ஆரம்பித்துவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து, ஏதேனும் சத்தம் உங்களுக்கு கேட்டதா என நடுவர் என்னிடம் கூறினார். நான் எதுவும் கேட்கவில்லை என கூறினேன்.

பின்னர் நான் பேட்டிங் செய்ய வந்த பொழுது, போட்டி முடிந்த பிறகு உங்களை சந்திப்பேன். என் வாழ்க்கையில் மீண்டும் இந்த தருணம் எப்பொழுது கிடைக்கும் என எனக்கு தெரியாது என்று தான் கூறியதாக தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் முதன்முறையாக, பெண்ணோருவர் செய்தி வாசித்தார்


சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்ணோருவர் செய்தி வாசிப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு, அந்நாட்டு பெண்கள் அமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் இளவரசர் முகமது பின் சல்மான் பொறுப்புக்கு வந்த பின்னர், அந்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வந்த பல செயல்பாடுகள் நிறுத்தப்பட்டன.

பல சட்டதிட்டங்களையும் அவர் உடைத்தார். அதன் பின்னர், பெண்களுக்கு கார் ஓட்டுவது முதல் விமானம் ஓட்டுவது வரை என அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அல் சவுதியா எனும் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வீம் அல் தஹீல் என்ற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மாலை நேரத்தில் மட்டும் ஆண் செய்தி வாசிப்பாளருடன் இணைந்து செய்தி வாசிப்பார் என்று கூறப்படுகிறது.

இவர் தான் சவுதியின் முதல் பெண் செய்தி வாசிப்பாளர் ஆவார். சவுதி அரசின் இந்த முடிவிற்கு பல்வேறு நாடுகளில் உள்ள பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

சதான் உசேனுக்கு நேர்ந்த கதிதான், டிரம்புக்கு நேரிடும் - ஈரான் ஜனாதிபதி மிரட்டல்

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேனுக்கு நேர்ந்த கதியைத் தான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சந்திக்க நேரிடும் என ஈரான் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுடன் வர்த்தக உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என, அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது. இதன் காரணமாக ஈரான் பல பொருளாதார சிக்கல்களை சந்திக்க வேண்டியதுள்ளது.

ஏற்கனவே, அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக கூறி ஈரானின் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்திருந்தது. இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவுகானி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், ‘1980களில் ஈரான் மீது போர் தொடர்ந்த சதாம் உசேனுக்கு ஏற்பட்ட அதே கதி அமெரிக்காவுக்கும், டிரம்புக்கும் ஏற்படும். அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு பயந்து ஏவுகணைகளை நாங்கள் கைவிட முடியாது’ என தெரிவித்துள்ளார்.

இதனை வானொலி மூலம் ஆற்றிய உரையில் ரவுகானி தெரிவித்தார்.

ரூபா வீழ்வதை தடுக்க விரும்புகிறீர்களா..? நாட்டு மக்களும் பங்களிப்புச் செய்யலாம்

-Dc-

நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வரும் ரூபாவின் பெறுமானத்தைப் பாதுகாப்பதற்கு நாட்டுப் பற்றுள்ள பொது மக்களும் தமது பங்களிப்பை வழங்க முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வர்த்தக வாணிபத்துறைப் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஜனக் குமாரசிங்க விளக்கமளித்துள்ளார்.

சகோதர தனியார் வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இந்த வழிகாட்டளை வழங்குகின்றார்.

நாட்டில் டொலர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதற்கு சர்வதேசத்தின் சூழ்ச்சி என்று குற்றம்சாட்டுவதனால் எந்தவித நன்மையும் கிட்டப் போவதில்லை. மாற்றமாக, நாம் இதற்கு என்ன செய்ய முடியும் என்று யோசிப்பதே நாட்டுப் பற்றுள்ள பிரஜையொன்றின் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

இதற்கு பொது மக்கள் மாத்திரம் ஒத்துழைத்தால் போதாது. அதிகாரத்திலுள்ள அரசியல் வாதிகளும் முன்மாதிரியாக திகழ வேண்டும். டொலர் விலை அதிகரிப்பை குறைத்து, நாட்டின் ரூபாயின் பெறுமதியைப் பாதுகாப்பதற்கு பின்வரும் வழிமுறைகளை நாம் பின்பற்றலாம்.

அவசியம் என்றில்லாத மேலதிக வெளிநாட்டுப் பயணங்களைக் குறைத்துக் கொள்ளல், அத்தியாவசிய பொருட்கள் தவிர்ந்த வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை தவிர்ந்து கொள்ளல், எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்கு சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் தமது முக்கிய தேவை தவிர்த்து பயணங்களை மட்டுப்படுத்திக் கொள்ளல் போன்ற இன்னோரன்ன நடவடிக்கைகள் மூலம் பொது மக்கள் இந்த டொலர் விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஆதரவு வழங்கலாம்.

இதேவேளை, பொது மக்கள் இவ்வாறு தமது வாழ்க்கையை நாட்டின் மீது கொண்டுள்ள பற்றுக் காரணமாக மட்டுப்படுத்திக் கொள்ளும் போது அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும்.

பொது மக்களை இவ்வாறு நடந்துகொள்ளுமாறு கூறிவிட்டு, தாங்கள் வீணான வெளிநாட்டுப் பயணங்களிலும், தேவையற்ற நிகழ்வுகளிலும், விழாக்களிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் பொது மக்கள் மட்டும் மேற்கொள்ளும் தியாகத்தினால் பயன் கிடைக்கப் போவதில்லை.

டொலர் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வரையில் நாட்டுப் பற்றுள்ள சகலரும் இவ்வாறு தியாகமொன்றை மேற்கொண்டால் மாத்திரமே ரூபாவின் பெறுமதியை பாதுகாக்க முடியும் எனவும் அவர் மேலும் கூறினார்.  

கர்ப்பிணி பெண், விரிவுரையாளர் மரணம் – ஒருவர் கைது


கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக மீட்க்கபட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றுமுன்தினம் மதியம் பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு திரும்பியபோது காணாமல் போயிருந்த அவர் நேற்றுக்காலை சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நடராசா போதநாயகி எனப்படும் கர்ப்பிணி பெண் விரிவுரையாளரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நிலையில் சந்தேகத்தின் பேரில் திருகோணமலை சங்கமித்த கடலோரப் பிரதேசத்தில் வைத்து உருவரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் பெண்கள் பயன்படுத்தும் கைப்பை ஒன்றை எடுத்துச் சென்று கொண்டிருந்த போது அதனை சோதனை செய்யப்பட்டதையடுத்து அதில் இருந்து ஆவணங்கள் சில கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இலங்கையின் பொக்கிஷத்தை மறைத்து, வைத்திருந்த பிக்கு கைது

6 கோடி ரூபாய் பெறுமதியான டைட்டன் ரக வலம்புரி சங்கு ஒன்றை இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த பிக்கு ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாத்தறை தேவேந்திரமுனை (தெவுந்தர) விகாரைக்கு அருகில் வைத்து நேற்று கொக்மாதுவை விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

39 CM நீளமும், 46 CM அகலமும் கொண்ட இந்த வலம்புரி சங்கின் எடை 1.38 கிலோ கிராம் எனவும், இது இலங்கையில் கிடைத்த ஒரு பொக்கிஷம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

இதனை ஆறு கோடி ரூபாவுக்கு வெளிநாட்டவர் ஒருவருக்கு விற்பனை செய்ய சந்தேகநபர்கள் தயாராக இருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

வாகனங்களில் விலை, பல லட்சங்களாக அதிகரிக்கும் வாய்ப்பு

ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதையடுத்து, வாகனங்களின் விலை குறைந்தது 250,000 ரூபாயில் இருந்து 8 இலட்சங்களாக அதிகரிக்குமென வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசலில் கண்ட, அற்புதமான காட்சி (படம்)

அன்புள்ள அன்பர்கேள,

 எமது மனங்களில் பதியவைத்த ஒரு இனிய நிகழ்வுகளில் ஒன்று இந்தக் காட்சி.

 வயது முதிர்ந்த இயலாமையையும், காதுகேட்காதவருமான இவர் புத்தள சாலிகீன் பள்ளிவாசலை துப்பரவு செய்யும் காட்சி. 

இவர் 5 நேரத்தொழுகையையும் இமாம் ஜமாத்தாகத்தொழும் ஒருவராவர .

மேலான நற்கூலிகளை வல்ல றஹ்மான் வழங்குவானாக ஆமீன்

தகவல் - அப்துல் மலீக் மௌலவி


"இலங்கை ரூபாவின் வீழ்ச்சிக்கு, காரணம் இதுதான்"

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சிக்கு காரணம் தற்போதைய அரசாங்கத்தின் முறையான முகாமைத்துவம் இன்மையே என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். 

கல்கிஸ்ஸ பிரதேசத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வௌியிடும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். 

வரலாற்றில் ஒருபோதும் இதுபோன்ற நிலை எற்பட்டதில்லை என்று அவர் கூறியுள்ளார். 

2007ம் ஆண்டு முழு ஆசிய வலயத்திலும் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த போதிலும் இலங்கையின் பொருளாதார நிலையை சீராக பேணியதாக அவர் கூறியுள்ளார். 

உடனடியாக அரசு தலையிட்டு சரியான முறையில் முகாமை செய்தமையாலேயே அவ்வாறு பேண முடிந்ததாக அவர் கூறியுள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு, ஒரு நல்ல பக்கமும் உண்டு - பட்டியல்படுத்துகிறார் பிரதியமைச்சர்

பொலிஸ் மாஅதிபர் மீது முன்வைக்கப்படும் பெரும்பாலான குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்டவைகள் என்றும், குற்றச்சாட்டு உள்ளதென்பதற்காக அவர் தொடர்பிலான நல்ல செயற்பாடுகளை பாராட்டாமல் இருக்க முடியாதெனவும் சட்டம் ஒழுங்கு பிரதியமைச்சர்  நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் மாஅதிபரிடம் குறைபாடுகள் இருக்கலாம், அதற்காக வேண்டுமென்றே அவர் மீது சிலர் சேறு பூசி வருகிறார்கள். கண்டி பெரஹெரவின்போது ஆடாமல் சென்ற நடனக் கலைஞர்களை ஆடுமாறு அவர் கையை ஆட்டி சைகையில் காட்டியதை மட்டும் காட்சிப்படுத்தி பொலிஸ் மா அதிபர் நடனமாடுவதாக பிரசாரம் செய்தார்கள்.

அதேபோன்று அவர் பாடசாலையொன்றில் ஆற்றிய உரையின் சில வசனத்தை மட்டும் எடுத்து வேறு அர்த்தம் புலப்படும் வகையில் அதனை காட்சிப்படுத்தி சேறு பூசி வருகிறார்கள். அந்த உரை முழுவதையும் நான் கேட்டுப்பார்த்தேன். உண்மையில் அது கருத்துள்ள உரையாகவே காணப்பட்டது.

எனக்குத் தெரிந்த வரை பொலிஸ் மாஅதிபர் தனது உரிமைகளைப் பெறக்கூட அதிக ஆர்வம் காட்டாத ஒருவர். இன்னமும் சாதாரண காரிலேயே பயணம் செய்கிறார். அண்மையில்கூட அமைச்சர் காரை ஏன் மாற்றக்கூடாது என கேட்டதற்கு, இது போதும் என்று சாதாரணமாக பதிலளித்தவர் அவர்.

அவர் அரசியல் பழிவாங்கலுக்கு உள்ளான 129 பொலிஸ் அதிகாரிகளுக்கு நியாயத்தை பெற்றுக் கொடுத்தவராவார்.

கடந்த அரசாங்கத்தில் அரசியல் தலையீட்டின் காரணமாகவே போதைவஸ்து கடத்தல் மற்றும் விற்பனை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆனால் பொலிஸ் மாஅதிபரின் கடுமையான செயற்பாட்டால் தற்போது அனைத்து நடவடிக்கைகளும் குறைவடைந்துள்ளன என்றும் பிரதியமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

"இலங்கை வீரர்களுக்கு இடையில் முரண்பாடு அல்லது பிளவு ஏற்பட்டுள்ளது"

அர்ஜூன ரணதுங்கவை விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிப்பதே, இலங்கை கிரிக்கெட் துறையை மேம்படுத்துவதற்கான ஒரே வழியாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க இருக்கும் வரையில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒருவரினால், கிரிக்கெட் விளையாட்டை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்கப்படாது.

அர்ஜூனவை விளையாட்டுத்துறை அமைச்சராகவோ அல்லது கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராகவோ நியமிக்க வேண்டும்.

சில வீரர்கள் மூன்று நான்கு முகநூல் கணக்குகளை வைத்துக் கொண்டு சேறு பூசி வருகின்றனர்.

இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டை தெரிவுக்குழுவிடம் ஒப்படைப்பதில் எனக்கு பிரச்சினையில்லை.

வாக்கெடுப்பின் மூலம் சரியானவர்களை தெரிவு செய்து கொள்ள முடியும்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு இடையில் முரண்பாட்டு நிலைமை அல்லது பிளவு ஏற்பட்டுள்ளது என தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவிய காரணத்திற்காக அவை ஒத்தி வைப்பு விவாதம் நடத்த வேண்டியதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

காட்டிலிருந்து கடற்கரைக்கு வந்த பிரபாகரன் - சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட புதிய தகவல்

2009ஆம் ஆண்டு போரின் இறுதிக் கட்டத்தின்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மீட்க சோனியா காந்தி தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசாங்கம் கப்பல் அனுப்புவதாக உறுதியளித்திருந்தது என பாரதிய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவரும், ராஜ்ய சபா உறுப்பினருமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

dailypioneer.com என்ற இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும்,

இலங்கை தொடர்பிலும், போர் தொடர்பிலும் சுப்ரமணியன் சுவாமி கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருக்கிறார்.

புது டில்லியில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பை ஏற்று மஹிந்த ராஜபக்ஷ அதில் கலந்து கொண்டிருந்தார்.

இதேநேரம், தமது இந்திய விஜயத்தின் போது அந்த நாட்டு ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணல்களில் மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு தகவல்களையும் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், இறுதிப் போர் குறித்து தற்போது மேற்கண்ட தகவலை சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ளார். அதில் மேலும் அவர்,

போரின் இறுதி கட்டத்தின்போது, அப்போதைய இந்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரபாகரனுக்கு தகவல் ஒன்றை வழங்கியிருந்தார்.

பிரபாகரனை காப்பாற்ற இந்திய கடற்படை வரும் என்றும், அதற்காக காத்திருக்குமாறும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிரபாகரன் காட்டு பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி பயணித்தபோது அங்கு கடற்படை சென்றது. ஆனால் அது இலங்கை கடற்படை.

இந்திய கடற்படை கப்பல் புறப்பட தயாராகியிருந்த போதும், அதிகாரிகளிடமிருந்து வெளிப்பட்ட கடுமையான எதிர்ப்பு காரணமாக அந்தக் கப்பல் புறப்படவில்லை.

எனினும், திட்டம் மாற்றப்பட்டமை குறித்து அப்போதைய காங்கிரஸ் தலைமையினால் பிரபாகரனுக்கு அறிவிக்கப்பட்டிருக்கவில்லை என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளதாக குறித்த இந்திய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மினுவங்கொடயில் உணவு விஷமானதால், நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதி

ஆடை தொழிற்சாலையில் வழங்கப்பட்ட உணவு விஷமானதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மினுவங்கொட, யகஹட்டுவ பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மினுவங்கொட மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலை உணவு பெற்றுக் கொண்டவர்களுக்கு, வாந்தி, வயிற்றோட்டம் மற்றும் மயக்கம் ஏற்பட்டமையினால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

September 21, 2018

போராடி தோற்ற ஆப்கான், இறுதி ஓவரில் 3 விக்கெட்டால் பாகிஸ்தான் திரில் வெற்றி


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் இரண்டாவது போட்டியின் இமாம், பாபர் அசாம் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தினால் மலிக்கின் அதிரடி ஆட்டத்தினாலும் பாகிஸ்தான் அணி மூன்று விக்கெட்டுக்களினால் வெற்றியையீட்டியது.

போட்டியில் அதிக 6 ஓட்டங்களை விளாசிய வீரராக ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் அஸ்கர் ஆப்கான் தெரிவு செய்யப்பட்டதுடன் போட்டியின் ஆட்டநாயகனாக 43 பந்துகளில் 51 ஓட்டங்களை விளாசிய மலிக் தெரவுசெய்யப்பட்டார்.

துறவறவப் பெண்களை பிக்குணிகள் என்றழைப்பதை உடன் தடுக்க வேண்டும் - மகாநாயக்கர்கள் போர்க்கொடி

பௌத்த துறவறத்தில் ஈடுபடும் பெண்களை பிக்குணிகளாக அடையாளப்படுத்தல் தடுக்கப்பட வேண்டும் என்று மகாநாயக்கர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

அவ்வாறான செயற்பாடுகள் காரணமாக இலங்கையில் பௌத்த மதம் அழிவுக்குள்ளாகி வரும் நிலையில், ஜனாதிபதி தலையிட்டு பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக மல்வத்துபீட மகாநாயக்கர் திப்பட்டுவாவே சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்கர் வரகாகொட ஞானரத்ன தேரர் ஆகியோர் கூட்டாக கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குறித்த கடிதத்தில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளவது, பௌத்த விரோதக் கருத்துக்கள் நாட்டில் தலையெடுத்து வரும் நிலையில் சில பிக்குகளின் செயற்பாடுகளும் அதற்கு துணை செய்வதாக உள்ளது.

அவற்றை மகாநாயக்க தேரர்கள் தலையிட்டு தடுத்து நிறுத்துவதற்கான அரச அனுசரணை வழங்கப்பட வேண்டும். கௌதம புத்தர் தொடர்பாக அண்மைக்காலமாக பரப்பப்படும் கட்டுக்கதைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

பெண்களை பிக்குணிகள் துறவறத்தில் இணைத்துக் கொள்ள முடியாது என்று பௌத்தம் தெளிவாக விளக்கமளித்துள்ள நிலையில் துறவறம் மேற்கொள்ளும் பெண்கள் பிக்குணிகள் என்றழைக்கப்படுவது உடன் தடுக்கப்பட வேண்டும்.

அதற்குப் பதிலாக அவர்கள் பஞ்ச சீலப் பெண்கள் என்றழைக்கப்படுவதே பொருத்தமானதாக இருக்கும் என்பன போன்ற இன்னும் பல கோரிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Newer Posts Older Posts Home