Header Ads



Mp களின் சம்பளத்தை அதிகரிக்க, ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் - மைத்திரிபால

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சம்பளத்தை அதிகரிப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதி வழங்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவையில் இன்று -04- இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி,

“நான் நேற்று பத்திரைகளில் பார்த்தேன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படுவதாக குறுப்பிடப்பட்டிருந்தது.

அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுவதாக தொலைக்காட்சி, வானொலி மற்றும் பத்திரிகை செய்திகளில் வெளியாகி இருந்தன.

கட்சித் தலைவர்கள் அனைவரும் இணைந்து இந்த சம்பள அதிகரிப்பிற்கு இணக்கம் வெளியிட்டு தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக செய்திகளில் குறிப்பிட்டிருந்ததனை நான் பார்த்தேன்.

யார் கூறினாலும் 5 சதமேனும் சம்பளம் அதிகரிக்கப்படாது. அதற்கு நான் அனுமதி வழங்கப் போவதில்லை. அமைச்சரவை யோசனைகளுக்கு அனுமதியளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சம்பளம் 54258 ரூபாவிலிருந்து 120000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகவும்,

அமைச்சர் மற்றும் ராஜாங்க அமைச்சர் ஒருவரின் சம்பளம் 65000 ரூபாவிலிருந்து 140000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகவும்

பிரதி அமைச்சர் ஒருவரின் சம்பளம் 63500 ரூபாவிலிருந்து 135000 ரூபாவாக அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் ஜனாதிபதியின் இன்றைய அறிவிப்பானது அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 comment:

  1. இது சிரிப்பதற்கா ? அல்லது சிந்திப்பதற்கா ?

    ReplyDelete

Powered by Blogger.