Header Ads



"இருதரப்பு துயரங்கள் பற்றியும் கவலைபடுவார், யாருமில்லையே என மனம் நொந்தது"

-வ.ஐ.ச.ஜெயபாலன்-

இன மோதல்களில் கொலையுண்ட முஸ்லிம்களையும் தமிழர்களையும் நினைவுகூர்ந்து தோழன் பசீர் ஒரு பதிவு போட்டிருந்தான். மனசைத் தொட்டது.

1985ம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாணபுலிகளாலும் முஸ்லிம் ஊர்காவல் படைகளாலும் தமிழ் முஸ்லிம் காடையர்களாலும் இனமோதல்களில் மாறி மாறிக் கொல்லபட்ட முஸ்லிம்களும் தமிழர்களதும் தொகை எரிக்கபட்ட வீடுகளின் தொகை என்பவற்றை ஒப்பிட்டுபர்த்தால் அதிற்ச்சியாக இருக்கும் 1985 - 2015 காலக்கட்டத்தில் ஏட்டிக்குப் போட்டியாக இருதரப்பிலும் அத்தனை கொலைகளும் வீடெரிப்புகளும் பாலியல் வன்முறைகளும் அரங்கேறியுள்ளது.

வேடிக்கை என்னவென்றால் நல்லிணக்கம்பற்றி பேசுகிற தமிழரோ முஸ்லிம்களோ நடுநிலையாக அஞ்சலி செலுத்துவதில்லை. தங்கள் பிள்ளைகளிடத்திலும் இரண்டுபக்கமும் அநீதிகள் அரங்கேறியுள்ளது நாம் அவற்றை கண்டிக்கவேண்டும். இறந்த இருதரப்புக்கும் அஞ்சலி செய்ய வேண்டும் என சொல்வதில்லை.

”அவர்கள் கொடியவர்கள், அவர்களால் நாம் மட்டுமே பாதிக்கபட்டோம்” என்று தம் பிள்ளைகளுக்கு சொல்கிற தமிழரும் முஸ்லிம்களும் தங்கள் பிள்ளைகளையும் மோதலுக்கு தூண்டுகிறவர்களே. இருபக்கத்துக்குமாக பேசுகிற அஞ்சலிக்கிற தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் மட்டுமே இன நல்லினக்கம்பற்றி பேச அருகதை உள்ளவர்கள்.

வடக்கில் நிலமை வேறு கொடுமை தமிழர் பக்கத்திலும் பாதிப்பு முஸ்லிம்கள் பக்கதிலுமாக நிகழ்ந்தது வடக்கில் மட்டும்தான். தாயகம் திரும்பிக் கொண்டிருக்கும் வடபகுதி முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கிற தமிழர்களுக்கு ஐயோ. அவர்கள் தர்மத்தின் தண்டனைக்கு த[ப்பமாட்டார்கள். .

காத்தான்குடி படுகொலைகள்பற்றி கவலையில் ஆழ்ந்திருந்தேன். இதுஅற்றி 1990ல் இருந்தே எழுதிவருகிறேன். முஸ்லிம் மீடியாக்கள் என் கவலையைப் பகிர்ந்துகொண்டன. தமிழ் நண்பர்களும் மீடியாக்களும் சமகாலத்தில் எரித்து அழிக்கபட்ட வீரமுனைப் படுகொலைகள் பற்றி கவலைப் பட்டுக்கொண்டிருந்தார்கள். 

இன்னும் சமகாலங்களில் இடம்பெற்ற இருதரப்பு துயரங்கள் பற்றியும் கவலைபடுவார் யாருமில்லையே என்று மனம் நொந்தபோது பசீரின் பதிவைப் பார்த்தேன். மனசுக்கு நிம்மதியாக இருந்தது.

காத்தான்குடியிலும் வீரமுனையிலும் பறிக்கபட்டது எங்கள் இரு கண்களுமல்லா?

இருதரப்பு இழப்புகளையும் நினைவு கூர்ந்து அஞ்சலிக்காத யாரும் இன்னும் நல்லிணக்கத்துக்கு தயாராகவில்லை.

3 comments:

Powered by Blogger.