Header Ads



மன்னாரில் இயற்கை எரிவாயு - ஆய்வில் உறுதி செய்யப்பட்டது

மன்னார் வளைகுடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெருமளவில் இயற்கை எரிவாயு இருப்பதாகவும் இதன் மூலம் 2 ஆயிரம் மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் நிலையம் ஒன்றின் மூலம் 30 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் எனவும் கனிய எண்ணெய் வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஒரு லட்சம் கோடி கன அடியை விட அதிகமான இயற்கை எரிவாயு இருப்பதாக புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது எனவும் அமைச்சு கூறியுள்ளது.

இதனை தவிர மன்னார் வளைகுடாவில் ஓரளவு சிறியதாக இருக்கும் டோராடோ கனியத்தின் மூலம் 630 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் 10 ஆண்டுகளுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். 30 ஆயிரம் கோடி கன அடி வாயு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

ஆய்வில் கண்டறியப்பட்ட கனிய எண்ணெய் மற்றும் எரிவாயு கனியத்தை அகழ்ந்தெடுக்க சர்வதேச ரீதியில் விலை மனு கோரல் ஊடாக வணிக ரீதியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.