August 17, 2018

சலீம் மர்சூப் - பாயிஸ் முஸ்­தபா பிளவுகளை களைந்து, ஒன்றுபடுத்த முயற்சி

முஸ்லிம் தனியார் சட்ட திருத்த அறிக்கை தொடர்பில் பிள­வு­பட்­டுள்ள தரப்­பு­களை ஒற்­று­மைப்­ப­டுத்தி ஒரே அறிக்­கை­யாக சமர்ப்­பிப்­ப­தற்­கான முயற்­சிகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­றது.

நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மையில் நிய­மிக்­கப்­பட்ட முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபா­ரிசு அறிக்கை தயா­ரிப்­ப­தற்­கான குழு இரண்­டாகப் பிள­வு­பட்டு தனித்­தனிக் குழுக்­க­ளாக கையொப்­ப­மிட்டு நீதி­ய­மைச்­ச­ரிடம் அறிக்கை கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்­தது. இந் நிலையில் இவ்­வாறு இரு தரப்­பாக முன்­வைக்­கப்­பட்ட அறிக்­கையை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்க முடி­யாது எனவும் முஸ்லிம் சமூ­கத்தின் சார்பில் சக­லரும் ஏற்றுக் கொள்ளும் வகை­யி­லான ஒரே அறிக்­கையைத் தரு­மாறும் நீதி­ய­மைச்சர் தலதா அத்­து­கோ­ரள அண்­மையில் வேண்­டு­கோள்­வி­டுத்­தி­ருந்தார்.

இதற்­கி­டையில் மேற்­படி திருத்த விவ­கா­ரத்­துடன் தொடர்­பு­பட்ட குழுவின் அங்­கத்­த­வர்கள் சலீம் மர்சூப் தரப்பு, பாயிஸ் முஸ்­தபா தரப்பு என இரு தரப்­பாக செயற்­ப­டு­வதும் தத்­த­மது சிபா­ரி­சு­களே சரி­யா­னவை என நிரூ­பிக்கும் வகையில் பகி­ரங்க பிர­சா­ரங்­களை முன்­னெ­டுத்து வரு­வதும் சமூ­கத்தில் கருத்து வேறு­பா­டு­க­ளுக்கும் குழப்ப நிலை­க­ளுக்கும் வித்­திட்­டுள்­ளது.

இந் நிலை­யி­லேயே இரு தரப்­பிலும் நிலவும் கருத்து வேறு­பா­டு­களைக் களைந்து ஒரே அறிக்­கை­யாக சமர்ப்­பிப்­ப­தற்­கான அடுத்த கட்ட நகர்­வு­களை முன்­னெ­டுக்க சில தரப்­புகள் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

இது தொடர்பில் ஜமா­அதே இஸ்­லாமி, மர்­கஸுஸ் ஸலாமா மற்றும் ஜாமிஆ நளீ­மியா பழைய மாணவர் அமைப்­பான ராபி­ததுன் நளீ­மிய்யீன் என்­பன சம்­பந்­தப்­பட்ட தரப்­பு­க­ளுடன் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்­துள்­ள­தாக அறிய முடி­கி­றது.

இதற்­கி­டையில் இவ்­வாறு இரு தரப்­பாக செயற்­ப­டு­வதை விடுத்து குழுவினர் தமக்குள் கலந்­து­ரை­யாடி வேறு­பா­டு­களை களை­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொள்ள வேண்டும் என முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்பினர்கள் சிலரும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் தாம் விரைவில் இரு தரப்பையும் அழைத்து அழுத்தங்களை வழங்கவுள்ளதாக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 'விடிவெள்ளி'க்குத் தெரிவித்தார்.
-Vidivelli

9 கருத்துரைகள்:

கருத்து முரண்பாடு என்பது இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் காணப்படுகின்றது காரணம் ஆழ்ந்த கருத்துக்களைக்கொண்ட குர்ஆனிலும், ஹதீஸிலும் விளக்கம் பெறும் போது எதிரெதிர் கருத்துக்கள் வரும் அது சிறப்பிற்குரியதே. இம்முரண்பாடானது இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளை விட்டு விலகாமல் இருந்தால் போதுமையானது இவற்றுக்கான விமர்சனங்கள் மதம் பிடித்தமை போன்று அமையத்தேவையில்லை என்பது எனது தாழ்மையான கருத்தாகும். இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகள் என்பது அல்லாஹ்வை உருவகப்படுத்தல் அல்லது பன்மைப்படுத்தல் இவை போன்றவை. அல்லாஹ் அவனுக்கு மாற்றம் செய்வதை விட மனிதன் மனிதனுக்கு குற்றம் செய்வதை முதல் கவனம் செலுத்துகின்றான். அல்லாஹ் போதுமானவன் எம் அனைவரையும் பொருந்திக்கொள்வதற்கு. தர்க்கம் தவிருங்கள். விமர்சனங்களை மற்றவர்கள் பிழை நான் மட்டும் சரி என்ற தோரணையில்லாமல் செய்வது சிறந்தது. நான் மட்டும் சரி மற்றவர்கள் பிழை என்ற எண்ணம் வழக்கமாக இருக்குமாயின் அது மன அழுத்தத்தின் அறுகுறியாகும்.

All these legal experts in Islamic law should be educated in the legal philosophy of Islamic law ..
This a battle between the legal school of Islamic law and Maqasid school of Islamic law ..
Some people think you must take on all what has been said in divine texts and Hadith and applied in Sri Lanka 100% without ommission of any letter .they do not want read the rationale; wisdom; logic; and contexts of the divine texts ..these people are literalists who are with good intention oppose all reforms in Islamic law ..
Their good intention is fine ..
But they are ignorant people .
I do not care if he is an expert on any area of Islamic law or common law..but these people need to learn more about the general philosophy of Islamic law ...maqasid so that they could guide our community in SL.
Let us start with Mufits to learn this ...

If you go for vote among muslims 80% will support fais mustafa report.

சலீம் மர்சூபின் பின்னால் காபிர்களும் சடவாதிகளும் உள்ளனர், பாயிஸ் முஸ்தபாபின் பின்னால் அறிஞ்சர்களும் உலமாக்களும் உள்ளனர்

It's much better both sit in one table and come to health conclusion. May Almighty guide all of us. Aameen

Fiaz Mustafa is not an expert in Islamic law ...he is just expert in common law .
English law ..
Not Islamic law ..

Some idiots talk like this ..
Both are good..
It is a fiqh difference

இவ்விடயத்தில் இஸ்லாமிய ஷரீஅத்திற்கு நெருக்கமானதாகவும் முஸ்லிம்களின் கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியம் என்பவற்றைப் பாதுகாப்பதாகவும் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் அறிக்கையே உள்ளது.

ஆனால், முஸ்லிம்களின் கலாச்சாரம் பாரம்பரியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூக்குரல் இடுபவர்களும் ஷரீஆவை நடைமுறைப்படுத்துவதில் சமூக ஒற்றுமை பர்ளு என்று சொல்பவர்களும் அவை அனைத்தையும் மறந்து முஸ்லிம் விவாக விவாக ரத்துச் சட்டத்திருத்தத்தில் குதித்திருப்பதுதான் ஆச்சரியமானதாக இருக்கின்றது. அல்லாஹ் போதுமானவன்.

எவரது அறிக்கை ஏற்றுகொள்ளப்பட வேண்டும் என்று கருத்து வெளியிடுவதை விட இருசாராரையும் ஒரு இணக்கப்பாடான கருத்தொருமிப்புக்குள் கொண்டு வந்து ஒரே அறிக்கையாக சமர்ப்புக்கும் முயற்சி சிறப்பானதும் சரியான தீர்வுமாகும்.
இதைவிடுத்து மார்க்க அறிஞர் சபையும்,ஒரு சில ஜமாஅத்களும் ஒரு பிரிவினரின் அறிக்கை தான் சிறந்தது என பிரசாரம் பண்ணியமை முதிர்ச்சியற்ற தன்மையும்,வழிகாட்டல் பண்பினை கொண்டிராததுமாகும்.
இவ்விடயத்தில் ஜப்னா முஸ்லிம் இணையதள நிர்வாகியும் ஆசிரியருமான சகோத்தரர் அன்ஸிர் அவர்களின் ஆளுமையும் சேர வேண்டும்,இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளில் சர்யான தீர்வுகளை எட்டுவதற்கு அவரது முயற்சிகள் மறைகரமாக இருந்துள்ளன

Post a Comment