Header Ads



வாஜ்பாயின் இறுதிச்சடங்கில், சிறிலங்கா அமைச்சர்கள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் இறுதிச்சடங்கில் சிறிலங்கா அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்ல பங்கேற்கவுள்ளனர்.

மூன்று தடவைகள் இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்த அடல் பிகாரி வாஜ்பாய்  நேற்று புதுடெல்லியில் காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை 4 மணியளவில் புதுடெல்லியில், யமுனை ஆற்றங்கரையில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் சிறிலங்கா அரசாங்கத்தின் சிறப்புப் பிரதிநிதிகளாக அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியெல்லவும், ரிஷாட் பதியுதீனும் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாயின் மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கும் செய்தி ஒன்றை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்திய அரசுக்கு அனுப்பியுள்ளார்.

அதில், “வாய்ஜ்பாயின் மரணம் ஆழ்ந்த துக்கத்தை தந்துள்ளது. அவர் சிறிலங்காவின் உண்மையான நண்பனாக இருந்தவர்.

1975ஆம் ஆண்டு தொடக்கம் வாஜ்பாயை எனக்குத் தெரியும்.  நான் பிரதமராக இருந்த 2001 2004 காலப்பகுதியில் அவருடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது.

சிறிலங்காவில் உறுதியான நிலையை ஏற்படுத்துவதில் அவர் முக்கிய பங்கை வகித்தார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.