August 17, 2018

முஸ்லிம் மாணவிக்கு, நடந்த கொடூரம்

நடந்து முடிந்த ஐந்தாம் தர புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையின் போது கிண்­ணியா கல்வி வல­யத்­திற்­குட்­பட்ட முள்­ளிப்­பொத்­தானை  பாத்­திமா  பாலிகா மகா வித்­தி­யா­லய மாண­வி­யொ­ருவருக்கு நோக்­கு­நர்­களால் அநீதி இழைக்­கப்­பட்­ட­தாக கிடைக்கப் பெற்­றுள்­ள­ முறைப்­பாடு தொடர்பில் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்­பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் 'விடி­வெள்ளி'க்குத் தெரி­வித்தார்.

இது தொடர்பில் ஒரு வார காலத்­திற்கு முன்னர் தனக்கு எழுத்துமூலம் கிடைக்கப் பெற்ற முறைப்­பா­டு­களை விசா­ரித்து உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்­காக மாகாண கல்வித் திணைக்­க­ளத்தின் பிராந்­திய இணைப்­ப­தி­காரி மூலம் விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இச்சம்­பவம் உண்­மை­யாயின் சம்­பந்­தப்­பட்ட பரீட்சை நோக்­கு­நருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுப்­ப­துடன் பாதிக்­கப்­பட்ட மாண­வி­க­ளுக்கு பரீட்சைத் திணைக்­க­ளத்தின் மூல­மாக நீதியைப் பெற்றுக் கொடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் எனவும் மாகாண கல்விப் பணிப்­பாளர் மேலும் தெரி­வித்தார்.

இச் சம்­பவம் நடந்து ஒரு வார காலத்தின் பின்­னரே இந்த விடயம் தனது கவ­னத்­திற்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தா­கவும் பரீட்சை நடந்த அன்­றைய தினமே இது தொடர்­பான முறைப்­பாடு கிடைத்­தி­ருப்பின் விரைந்து நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

இதே­வேளை, இந்த விவ­காரம் தொடர்பில் முள்­ளிப்­பொத்­தானை பாத்­திமா பாலிகா மகா வித்­தி­யா­லய பாட­சாலை அபி­வி­ருத்திச் சங்­கத்­தினால் மாகாண கல்விப் பணிப்­பா­ள­ருக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள கடி­தத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

கடந்த 05.08.2018 ஆம் திகதி நடை­பெற்ற தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு எமது பாட­சாலை மாண­வி­களும் தோற்றி இருந்­தார்கள். பரீட்சை எழு­திய சில அறை­க­ளினுள் மாண­வி­க­ளுக்கு சில நோக்­கு­நர்கள் பரீட்சை எழு­த­வி­டாது இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்தி பிஞ்சு உள்­ளங்கள் பாதிக்கும் வகையில் நடந்­துள்­ள­தாகப் பாதிக்­கப்­பட்ட மாண­வி­களும் அப்­பிள்­ளை­களின் பெற்­றோர்­களும் மிகக் கவ­லை­யுடன் எம்­மிடம் முறைப்­பாடு செய்­துள்­ளனர். அம்­மு­றைப்­பாட்டின் அடிப்­ப­டையில்,

· பரீட்­சையின் முத­லா­வது பகுதி எழுதி முடிந்­ததன் பின்னர் இடை­வே­ளை­யின்­போது இப்­பிள்­ளை­க­ளிடம் குறிப்­பிட்ட நோக்­குநர் உங்கள் வகுப்பில் யார் கெட்­டிக்­காரர், அவர் பாட­சா­லையின் இறு­திப்­ப­ரீட்­சையில் எத்­தனை புள்ளி எடுத்­துள்ளார் எனவும் (குறிப்­பிட்ட பிள்ளை 192 எனக் கூறி­யுள்ளார்) கேட்­டு­விட்டு பகுதி II ஆரம்­பிக்­கப்­பட்ட போது குறிப்­பிட்ட அப்­பிள்­ளை­யிடம் பின்­வரும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ளார்.

· மாணவி பேனையால் விடையை எழுத ஆரம்­பிக்­கும்­போது பேனையை வாங்கி எடுத்த அந்­நோக்­குநர் தனது கடமை ரீதி­யான வேலை­களை இப்­பே­னையின் மூலம் முடித்­து­விட்டு பரீட்சை நேரம் முடியும் தறு­வாயில் பேனையைக் கொடுத்­துள்ளார். அது­வரை இப்­பிள்ளை தனது பேனை வரும் எனக் காத்­தி­ருந்து விட்டு பின்னர் ஏமாற்­றத்­துடன் பென்­சிலால் விடை எழுதி முடித்­துள்ளார்.

· எழுதிக் கொண்­டி­ருக்­கும்­போது மாணவி இருந்த கதி­ரையில் நோக்­குநர் தாளம் தட்­டிக்­கொண்டு மாண­வியை பரீட்சை எழு­த­வி­டாது இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

· விடை எழு­தும்­போது குறிப்­பிட்ட மாண­வியின் தாளையே அருகில் இருந்து நோக்­குநர் பார்த்துக் கொண்­டி­ருந்­த­துடன் அடிக்­கடி புரட்டிப் புரட்டி பார்த்து பரீட்சை எழு­த­வி­டாது இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

· பரீட்சை ஆரம்­பிப்­ப­தற்கு முன்னர் கொண்டு சென்ற கொம்பாஸ், உணவுப் பொதி போன்­ற­வை­களை குழந்­தைகள் மூலம் ஒரு இடத்தில் வைப்­ப­தற்கு வழிப்­ப­டுத்­து­வ­தற்குப் பதி­லாக நோக்­குநர் பறித்து அவை­களை சிறுவர் உள்ளம் குழம்பும் வகையில் இவர்­க­ளுக்குத் தெரி­யாத இடத்தில் கொண்டு சென்று வைத்­துள்ளார்.

· மற்றும் ஒரு அறையில் இருந்து நோக்­குநர் ஒரு மாண­விக்கு பொலிஸில் கொடுப்பேன் என 3 தட­வைகள் மிரட்டி சிறுவர் உள்­ளத்தில் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.

இவ்­வாறு இந்­நோக்­கு­நர்­களின் அத்­து­மீ­றிய நடத்­தை­யினால் தங்கள் பிள்­ளையின் விடைத்­தா­ளுக்கு ஏதேனும் சதி செய்­தி­ருப்­பார்­களோ என்று என்னும் அள­வுக்குப் பாதிக்­கப்­பட்ட பிள்­ளையின் பெற்றோர் அச்­சத்­து­டனும் மனக்­கு­ழப்­பத்­து­டனும் கலங்­கிப்போய் உள்­ளார்கள் என்­பதை தங்கள் கவ­னத்தில் கொண்டு வரு­கின்றோம். அத்­தோடு பெறு­பேறு வரு­கின்­ற­போது எதிர்­பார்த்­தி­ருக்கும் பெறு­பேறு குறை­வாக காணப்­படின் பிள்­ளையின் விடைத்­தாளை காண்­பிப்­ப­தற்கு சந்­தர்ப்பம் ஒன்றைத் தரு­வார்­களா என்று பெற்றோர் கேட்­கின்­றனர் என்­ப­தையும் தங்கள் கவனத்தில் கொண்டு வருகின்றோம்.

மேற்படி விடயத்தை கவனத்தில் எடுத்து விசாரணை செய்து பல்வேறு தியாகங்களுடன் இராப்பகலாகக் கற்று மிக நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் பரீட்சை எழுதியுள்ள இப்பிள்ளைகளுக்கு அநீதி இழைத்துள்ள இந்நோக்குநர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுப்பதுடன் பாதிக்கப்பட்ட பிள்ளைக்குரிய நியாயமான தீர்வினையும் பெற்றுத்தருவீர்கள் என எதிர்பார்க்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 கருத்துரைகள்:

நோக்­குநர் ஒரு மிருகம் என்றுதான் சொல்ல வேண்டும், அவரது பெயரை குறிப்பிட்டிருக்களாம்

இந்த நோக்கினார் ஒரு தமிழ் பயங்கரவாதி அவனை பற்றி ஏராளமான செய்திகள் கடந்த வாரங்களில் வெளிவந்தது. இந்த வன்மம் பிடித்த மிருகங்கள் எவ்வளவு கொடூரமானவர்கள்

தமிழ் பயங்கரவாத எச்சங்களின் ஒருத்தனாக இருக்க வேண்டும்.

Post a Comment