Header Ads



மாட்டிறைச்சி சாப்பிட்டதால்தான், கேரளாவில் வெள்ளம் - பாஜக எம்.எல்.ஏ.

மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ. பசன்கவுடா பட்டில் யட்னால் கருத்து தெரிவித்துள்ளார். 

கேரள மாநிலத்தில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. வெள்ளத்தால் 370 பேர் பலியானார்கள். ரூ.19,500 கோடிக்கு இழப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் மாட்டிறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது என்று கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ.வும், முன்னாள் மத்திய மந்திரியுமான பசன்கவுடா பட்டில் யட்னால் சர்ச்சை அளிக்கும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்து உணர்வுகள் தூண்டி விடப்பட்டால் மதம் தண்டிக்கும். உதாரணமாக கேரளாவில் என்ன நடந்தது என்பதை பாருங்கள் அந்த மாநில மக்கள் நேரிடையாகவே மாட்டிறைச்சி சாப்பிடுவதை ஆதரித்தனர். கடந்த ஆண்டு இதே மாதம் தான் அங்கு மாட்டு இறைச்சி திருவிழா நடத்தப்பட்டது. கேரளா வெள்ளத்துக்கு இதுதான் காரணம்.

கர்நாடகா மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சியை பிடிக்கும் எடியூரப்பா மீண்டும் முதல்-மந்திரி ஆவார். நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மாடு படுகொலை தடை செய்யப்படும்.

5 comments:

  1. அப்படியெண்டா, அரபு நாடுகள்ள சாப்பிடுற இறைச்சிக்கு ஒவ்வொரு நாளும் வெள்ளம் வரணுமே ஐயா !!!
    இங்க அடிக்கிற வெயில் ..........

    ReplyDelete
  2. Adu sari, apo inda naayga ellam Pombulaga erachi tinredukku ennavellam varanum???

    ReplyDelete
  3. குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் இருபத்து ஐயாயிரம் பேர் இறந்தது மாட்டிறைச்சி சாப்பிடாததினாளா.உலகில் அதிகமாக மாட்டிறைச்சி சாப்பிடுவது கிரிஸ்தவ நாட்டினர் .முஸ்லிம்கள் அதிகம் சாப்பிடுவதாக ஒரு மாயை,வேடிக்கை என்னவென்றால் முஸ்லிம்களே அறபு நாடுகளை உதாரணம் காட்டுவது. ஆதன்சீன,பிரேஸில்,அமேரிக்காவில் எல்லா நாடுகளும் .ஐரோப்பாவில் எல்லா நாடுகளும் மாட்டிறைச்சியைதான் கூடுதலாக சாப்பிடுகிறார்கள்.அங்கு எல்லாம் மாட்டிறைச்சியினால் எந்த பிறச்சினையோ, வெள்ளமோ ஏற்பட்டதாக யாரும் கூறவுமில்லை.நம்பவுத் மாட்டார்கள்.ஐந்தறிவுள்ள மிருகத்தை வணங்குவதை விட்டு ,படைத்த கடவுளை வணங்குங்கள்.

    ReplyDelete
  4. ஒரு பொறம்போக்கி கதை சொல்கிறான்.மாட்டிறைச்சி சாப்பிடாததனால் இவனது மூளை சரியாக வேலை செய்வதில்லையோ?பேலியோ மருத்துவ முறையை இவனுக்கு சிபார்சு செய்ய வேண்டும்.மோடயன்.

    ReplyDelete

Powered by Blogger.