Header Ads



பெண்னியம் பேசுவோரே, இஸ்லாத்துடன் விளையாடாதீர்கள்..!

-அல் - ஹாபிழா அல்-ஆலிமா உம்மு ஹபீப் பின்தி இஸ்ஸத்-

தற்போது இலங்கை நாட்டில் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம் என்பது எல்லேருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளது. நாளுக்கு நாள் இதைப்பற்றி எழுதுவோரும் பேசுவோரும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர்.

எது எவ்வாறு இருந்தாலும் இஸ்லாமிய மார்க்கம் அல்லாஹ்வினால்  பூர்த்தியாக்கப்பட்ட, பொருந்திக் கொள்ளப்பட்ட ஏக மார்க்கமாகும்.

அல்லாஹ் அருளுகின்றான்;:

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا)  المائدة :03(

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்;. மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன்;. இன்னும் உங்களுக்காக நான் இஸ்லாம் மார்க்கத்தையே (இசைவானதாகத்) தேர்ந்தெடுத்துள்ளேன்;. (அல் மாஇதா:03)

அந்த மார்க்கத்தில் முழுமையாக நுழையும் படி அல்லாஹுத் தஆலா கட்டளையிட்டுள்ளான்.

يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا ادْخُلُوْا فِى السِّلْمِ کَآفَّةً  وَلَا تَتَّبِعُوْا خُطُوٰتِ الشَّيْطٰنِ‌ؕ اِنَّهٗ لَـکُمْ عَدُوٌّ مُّبِيْنٌ ) البقرة:208(

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்; தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான் (பகறா:208)

இஸ்லாம் என்றாலே அர்த்தம் அடிபணிதல்இ கட்டுபடல் என்பதாகும். எனவே அல்லாஹ்வினதும் அவன் தூதரினதும் கட்டளைகள் சொல்லப்பட்டால் அவை பகுத்தறிவுக்கு நேர்ப்பட்டாலும் அல்லது முரண்பட்டாலும் அவற்றை கட்டாயம் எடுத்து நடப்பதே உண்மையான முஸ்லிம்களின் அடிப்படையாகும். பகுத்தறிவை வைத்து நாம் அல்லாஹ் ரஸுலின்  கட்டளைகளை விளங்க வேண்டுமே தவிர அதைக் கொண்டு அவற்றை நிராகரிக்கவோ அல்லது அவற்றுக்கு மாறு செய்யவோ கூடாது.

எமது பகுத்தறிவு வரையறைக்கு உட்பட்டதாகும். மறைவான விடயங்களை அறியும் ஆற்றல் இப்பகுத்தறிவுக்கு கிடையாது.

என்றாலும் தற்காலத்தில் அதிகமானோர் பகுத்தறிவுக்கு முன்னுரிமை வழங்கி தமது மார்க்கத்தை பின் தள்ளிவிடும் நிலைப்பாட்டை அப்பட்டமாக காணக்கூடியதாக இருகின்றது.

நபி முஹம்மத் (ஸல்) அவர்களுடைய காலத்தில் இறக்கப்பட்ட அல் குர் ஆன் தற்காலத்திற்கு பொருந்தாதுஇ  அது பாலைவனக்காலத்துடன் முடிந்து விட்டது  என  இஸ்லாத்திற்கு முரணான சிந்தனைகளை முன்வைத்த 1962 இல் பிறந்த தஸ்லீமா நஸ்ரின் கூறியது யாராலும் மறக்கவோ மறுக்கவே முடியாது.

அவளின் சிந்தனைகளும் எழுத்துக்களும் இஸ்லாத்திற்கு முரணாக இருந்தபோதிலும் சில அறிவிலிகள் அவளின் கருத்துக்களை ஷரீஆவுடன் ஒப்பிடாது தமது பகுத்தறிவினால் சரி கண்டனர். அதன் விலைவாள் காலப்போக்கில் இஸ்லாத்தை விட்டும் அவர்கள் வெளியேரி நாஸ்தீகர்களாவே இவ்வுலகை விட்டும் பிரிந்தனர்.

அவளின் சிந்தனையில் விழுந்த பலர் எமது இலங்கை நாட்டிலும் இருந்து வருகின்றனர்.

அதன் சாயலே 'பாலியல் தொழிலை இலங்கையில் சட்டபூர்வ மாக்குவது நல்ல விடயமாகும்' என  ஒருபெண் (அவளின் பெயரை இங்கு குறிப்பிட்டு எனது எழுத்தில் அலுக்கு படிவதை நான் விரும்ப வில்லை)  (20.11.2012) ஆம் திகதி பி.பி.சி. தமிலோசைக்கு வழங்கிய பேட்டியின் போது தெரிவித்திருந்தாள்.

இன்னும் பல கொம்பு முலைத்த பெண்ணியல் வாதிகள் எமது நாட்டில் மிகவும் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.  இவர்களுடைய சூழ்ச்சிகளை நிச்சயம் அல்லாஹ் அண்மையில் தகர்த்து விடுவான்!

இவ்வாறே பொளத்த மதத்தை பெறும்பான்மையாக கொண்டுள்ள இந்த நாட்டில், சிறுபான்மையாக வாழும்  முஸ்லிம்களுக்கு  முன்னோர்களின் அயராத முயற்சியினால்; கிடைக்கபெற்ற பெரும் சொத்து 'முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம்'  என்பது இதையே 1951ஆம் ஆண்டு முதல் இலங்கை முஸ்லிம்கள் கடைப்பிடித்து வருகின்றனர் என்பதை மிக சந்தேஷமாக கூறிக்கொள்கின்றேன்.

மேலே முன்வைக்கப்பட்டது போல பெண்ணியல் வாதிகளினால் எமது நாட்டில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதற்காக 30 - 40 வருடங்களாக பெரும் முயற்சிகள் நடந்த வன்னமே உள்ளது. இதற்காக பல மேற்கத்திய நாடுகளும் பெயர்த்தாங்கிய முஸ்லிம்களும் இரவு பகலாக அயராது உழைத்து வருகின்றனர்.

அல்லாஹ்வின் உதவியால் 1973ஆம் ஆண்டு முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் வரவேண்டும் என்பதாக குரல்கள் எழுப்பட்ட போது அதை முன்னெடுப்பதற்காக நியமிக்கப்பட்ட பாரூக் கமிட்டி ஷரீவுக்கு உற்பட்ட இரண்டு மூன்று விடயங்களை மாத்திரம் தமது பரிந்துரையில் முன்வைத்தனர்.

இதனை சகித்துக் கொள்ளமுடியாத துரு பிடித்த உள்ளங்கள் மீண்டும் தமது முயற்சியினால் 1990ஆம் ஆண்டு ஷஹாப்தீன் கமிட்டி  என்ற ஒரு கமிட்டி நியமிக்கப்படுவதற்கு வழிவகித்தது.

இம்முறையும் அல்லாஹ்வின் உதவியால் எந்த நாஸ்தீகர்களுக்கும் அந்த குழு இடமளிக்கவில்லை. நடைமுறையில் இருக்கும் சட்டம் சரியாக தான் இருக்கின்றது. முலுமையாக குர் ஆன் ஹதீஸ், இஜ்மா, கியாஸ்  என்பவற்றுக் கேற்ப அமைந்திருப்பதால் எந்த மாற்றமும் தேவையில்லை நடைமுறையிலுள்ள தனியார் சட்டத்தில் நிர்வாக சம்பந்தமான விடயங்களில் மாத்திரம்  திருத்தங்கள் அமைய வேண்டும் என்பதாக அந்த குழுவின் தீர்மானம் அமைந்தது.

அதே தொடர்ச்சியில் மேற்கத்திய நாடுகளின் கைகூலிகளான சிலபெண்களும் அவர்களுக்கு வக்காளத்து வாங்கும் இஸ்லாம் தெரியாத அறிவிலிகளும் இச்சட்டத்தில் மாற்றம் வருவதற்கு பல திட்டங்களை தீட்டினர் அதன் முடிவாக 2009 ஆம் ஆண்டு அப்போதை நீதியமைச்சர் கொளரவ மிலிந்த மொரகொட அவர்களால்  சட்டத்தரணி சலீம் மர்ஸுப் அவர்களின் தலைமையில் 17 நபர்களை கொண்ட ஒரு குழு நியமிக்கப்பட்டது.

(இக் குழுவின் தலைவர் சட்டத்தரணி சலீம் மர்ஸுப் அவர்கள் 1973ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட பாரூக் கமிட்டியின் ஒரு உறுப்பினராக இருந்துள்ளார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.)

இக்குழுவின் பரிந்துரைகள் யாவும் ஷரீவுக்கு உற்பட்டதாகவே அமையவேண்டும் என்பதாக சிலரும்,

(மார்க்கம் என்ற பெயரில்) பெண்ணியல் வாதிகளின் சிந்தனையில் வீழ்ந்து பால் சமத்துவம் என்பதாக கூறி மார்க்கத்தில் அனுமதியில்லாத விடயத்தை ஆகுமாக்கவும், அல்லது (மஸ்லஹா முர்ஸலா) என்பதாக எதிர் காலத்தில் பெண்களுக்கு பெரும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் சில விட்டுக் கொடுப்புக்களை முன்வைக்கும் சிலரும் என்பதாக அக் குழு இரண்டாக பிரிந்து இரண்டு பரிந்துரைகளை நீதி அமைச்சிடம் கைச்சாட்டுள்ளது.

இந்த நிலையில் உண்மையான முஸ்லிம் பெண்கள் என்ன செய்யவேண்டும்? இந்த இரண்டு பரிந்துரைகளிலும் எது இஸ்லாத்திற்கு உற்பட்டது? முஸ்லிம் சமூகத்திற்கு எது ஆரேக்கியமானது? நாம் எதை ஆதரிக்கவேண்டும்? என பல கேள்விகள் எழுந்தள்ள நிலையில் பலராலும் பல விளக்கங்கள் மக்கள் மன்றத்திலில் உலா வருகின்றது.

இந்த கோள்விக்கு எனது ஒரு கருத்தை மாத்திரம் முன்வைக்கின்றோன். அதாவது சட்டத்தரணி ஸலீம் மர்ஸுப் அவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரையில் 'இஸ்லாம் திருமணத்தின் போது விழியின் முக்கியத்துவத்தை எந்த தூர நோக்கத்துடன் கட்டாயப்படுத்தியுள்ளதே அதை பின் தல்லி விட்டு ஒரு பெண் விரும்பினால் எவரையாவது கட்டிக் கொள் என்ற பொருளை உள்ளடக்கிய அவரின் பரிந்துரையை  பார்க்கும் போது மார்க்கத்தை ஏன் இவ்வாரு உதாசீனப்படுத்துகின்றீர்கள் எனக் கேட்கத் தோனுகின்றது.

இதற்கு சில உஸ்தாத் மார்களின் ஆதரவும் வீடியோவாக வெளிவந்துள்ளது. அந்த உஸ்தாத் அவ்விடயத்தை முன்வைக்கும் போது அவர் மார்க்கத்தில் செய்யும் இருட்டடிப்பைப் பற்றி இங்கு நான் குறிப்பிட கடமைப் பட்டுள்ளேன். அவர் கூறுகையில் பின் வரும் தப்ஸீருல் குர்துபியின் சில வரிகளை வாசித்து இது தான் ஹனபீ மத்கப் என்பதாக முன்வைக்கின்றார்.

 وقد كان الزهري والشعبي يقولان : ' إذا زوجت المرأة نفسها كفؤا بشاهدين فذلك نكاح جائز ' . وكذلك كان أبو حنيفة يقول

இங்கு உஸ்தாத் அவர்களின் மோசடி என்ன வென்றால் இதற்கு பின் வரும் வரியை மறைத்து விட்டார் அதாவது :

وكذلك كان أبو حنيفة يقول : إذا زوجت المرأة نفسها كفؤا بشاهدين فذلك نكاح جائز ، وهو قول زفر . وإن زوجت نفسها غير كفء فالنكاح جائز ، وللأولياء أن يفرقوا بينهما . قال ابن المنذر : وأما ما قاله النعمان فمخالف للسنة

என்று குர்துபியின் இந்த வரிகள் அவரின் கண்களுக்கு மறைந்து விட்டதா? அல்லது உலகாசை முன் வந்து மறைத்து விட்டதா?

மேலும் அவர் ஹனபி மத்ஹபில் இமாம்களின் கருத்து வேறுபாட்டையும் குறிப்பிடாமல் வெறுமனே வலி இன்றி திருமணம் செல்லுபடியாகும் என்று எழுத்தில் ஒன்று பேச்சில் ஒன்று கூறியது மிகப் பொரும் மோசடியாகும்.

வலியின்றி திருமணம் நடந்தால் என்ன நடக்கும் என்பதை சென்ற வாரம் நடந்த ஒரு சம்பவத்தை எடுத்துக் காட்டுகின்றோன்.

பெண் ஆதிக்கம் நிறைந்த ஒரு குடும்பம் தந்தையும் சுகயீனமானவர் சகோதரர்களும் உள்ளனர் என்ற போதிலும் குடும்பத்து குத்து விழக்குகள் சொல்லுவதை தான் ஆண்கள் ஏற்க வேண்டிய நிலமை அவ்வாறு இருக்க ஒரு குமரியின் திருமண விடயமாக பேச்சு வார்த்தை நடக்கின்றது. ஆண்களின் அனுவளவும் விருப்பமின்றி திருமணம் நடந்து முடிந்து. 10 - 12 நாட்களில் கனவனை காணவில்லை காணாமல் போனவன் அந்த பெண்னின் வாழ்வை நாசமாக்கிட்டு நகைகளையும் திருடி விட்டு இன்னுமோர் இடத்தில் வேறு பெண்னை மறுமணம் செய்து வாழ்வதாக செய்து கிடைக்க பொலீஸ் உதவியுடன் அவன் பிடிக்கப்படுகின்றான். விசாரணையின் போது அவன் ஒரு மாற்று மதத்தவன் என்பதாகவும் பெண்னை ஏமாற்றுவதற்காக புதிய முஸ்லிம் என்பதாக கூறி இவலை திருமணம் செய்து கெண்டதாகவம் இரண்டாவது திருமணம் செய்தவள் இவனின் முதல் காதலி என்பதாகவும் தெரிய வந்தது.

இறுதியில் பார்த்தால் முதல் மனைவியின் வலி மற்றும் சகோதரர்கள் இருந்தும் பெண் ஆதிக்கத்தால் அந்த திருமணம் நடந்துள்ளது. இரண்டாவது திருமணம் தகப்பனுடைய அனுமதியின்றி தனது விருப்பப்படி வலியின்றி நடந்தது.

இதற்கு மகாஸித் பேசுவோர் என்ன கூறப்போகின்றீர்கள் எமது நாட்டில் விதவைகளின்       எண்னிக்கையை கூட்டவா? மார்க்கம் பேசுகின்றீர்கள் அல்லாஹ்வை பயந்துக் கொள்ளுங்கள். இந்த புனித நாட்களிலாவது தவ்பா செய்து கொள்ளுங்கள், உம்முடைய மார்க்க தீர்பை வைத்த சீரலியும் ஒவ்வொரு குமரிகளின் கண்ணீரும் உங்களது குடும்பத்தையும் பாதிக்கும் என்பதை மறந்து விடவேண்டாம். (அல்லாஹ் அனைவரையும் நோர்வழி நடாத்துவானாக)

எமது நாட்டில் பெண்ணியம் பேசுவோருக்கு நான் அன்பாக கோட்டக் கொள்கின்றேன் எமது முன்னோர்கள் நமக்கு பெற்றுத் தந்துள்ள இந்த தனியார் சட்டத்தை பாதுகாக்க இயலாவிட்டாலும் அதை இல்லாமலாக்கி விட நீங்கள் செயற்படுவதை விட்டு விடுங்கள்.

தங்களின் உலக இன்பத்திற்காக முஸ்லிம்களின் உரிமைகளை விற்கவேண்டாம்  உமது வங்கிக் கணக்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம்களின் விவாகரத்து எண்ணிக்கையை கூட்ட முயற்சிக்கவேண்டாம். நீங்கள் எவர்களினால் வழி நடாத்தப் படுகின்றீர்கள் என்பதை உமது முக நுற்கள் முலமே தெளிவாகின்றது.

பெண்னியம் பேசுவேருக்குக் கைக்கூலியா மார்க்கம் போசுவேருக்கு, மார்கத்தில் மீண்டும் மீண்டும் விளையாட வேண்டாம் அல்லாஹ் தந்த இல்மை மறுமையை சம்பாதிக்க பாவித்துக் கொள்ளவும். இல்லாவிடின் ஹப்ஸா பின்தி சீரீன்கள் உமக்கு பதிலலிப்பார்கள். எமது நாட்டில் லட்சக்கணக்காண  பின்தி சீரீன்கள் உள்ளனர் என்பதையும் கூறிக் கொள்கின்றோன்.

இறுதியாக கூறிக் கொள்ள விருப்புகின்றோன்.

அன்று நபி (ஸல்) அவர்களுக்கு எதிராக வசைப்பாடப் பட்ட போது ஹஸ்ஸான் இப்னு சாபித் (ரழி) அவாகள் இவ்வாறு பதிலடி கொடுத்தார்கள்:

لساني صارمٌ لا عيبَ فيهِ...............    

என்னுடைய நாவு கூர்மையான வாள் போன்றது  அதில் எந்த குறையும் கிடையாது:

இவ்வாறே இஸ்லாத்திற்கு எதிராக பேசுவோருக்கும் எழுதுவோருக்கும் எமது பேனை முனைகள் கூர்மையான வாள்களைப் போன்றது என்பதையும் சுட்டிக் காட்டிக் கொள்கின்றோன்.

அல்லாஹ் கூறுகின்றான்;:

يُرِيدُونَ أَن يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَن يُتِمَّ نُورهُ وَلَوْ كَرهَ الْكَافِرُونَ (التوبة:32)


அல்லாஹ்வின் ஒளியைத் தம் வாயால் ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகிறார்கள். ஆயினும் அல்லாஹ் தன் ஒளியை நிறைவு செய்யாமல் விடமாட்டான். இறைநிராகரிப்பாளர்களுக்கு அது எவ்வளவு வெறுப்பாக இருந்தாலும் சரியே! (தவ்பா:32)

7 comments:

  1. Sister tginking in a very small of islam.please go through article of mr. Ahban Abdul Haleem "moochuth thinarum muslim thaniyar chattam" in the same media.

    ReplyDelete
  2. Read the report submitted to the Ministry of Justice first. Then start talking.

    ReplyDelete
  3. HALF BAKED STUFF FROM THIS LADY!

    ReplyDelete
  4. This is rediculous. The incedent which she detailed happened when the existing MMDA is active, what couse of action they can take based on it. Does Qazi judges have the power to enforce a payment on him. NO, he can rule but Qazi can't enforce his ruling. Do not glorify the MMDA as equal to sharia. It need to be changed and there is no argument about it. The parties have to agree on what need to be changed without holding on to their version of pseudo-Islam and their own egos.

    ReplyDelete
  5. உலகம் எங்கே போகிறது இவர் எங்கே இருக்கிறார்

    ReplyDelete
  6. Excellent article. Very good perspective.
    Don't mind above negative comments. That is because agents have their cyberspace representatives. Really proud of you sister in Islam. மிகச் சிறந்த கட்டுரை. வாழ்த்துக்கள். உங்கள் பகுத்தறிவாற்றலை மெச்சுகிறேன்

    ReplyDelete

Powered by Blogger.