August 02, 2018

முஸ்லிம்களின் எண்ணிக்கை உயருகிறது, நாங்கள் 3 வது இனமாக சுருங்கி விடுவோம், தமிழர்கள் அதிக குழந்தைகளை பெற்றாக வேண்டும் - வடக்கு கல்வியமைச்சர்

தமிழர்களின் சனத்தொகை அதிகரிப்பு விகிதம் ஆண்டு தோரும் குறைவடைந்து அபாய கட்டத்தை அடைந்திருக்கிறது. ஒரு ஆண்டில் ஒரு கல்வி வலயத்தில் ஆயிரம் மாணவர்கள் குறைவடைகின்றார்கள். நாங்கள் உடனடியாகவே எமது தமிழ் சமூகத்தின் பிள்ளைப்பிறப்பு விகிதத்ததை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் இன்னும் ஐந்து ஆண்டுகளில் நாங்கள் இலங்கையின் மூன்றாம் தர மக்களாக மாறிவிடுவோம். என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று(01.08.2018) யாழ் மத்திய கல்லூரியின் 202 ஆவது பரிசில் நாள் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தனது உரையில் மேலும் குறிப்பிடுகையில்…..

நான் ஒரு கல்வி அமைச்சராக வடக்கு மாகாணத்தின் பல பாடசாலைகளுக்குப் போயிருக்கிறேன். எமது மாகாணத்திலே 1010 பாடசாலைகள் இருக்கின்றன. இவற்றில் 120 பாடசாலைகள் 20 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கின்றன. 250 பாடசாலைகள் 50 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் நகரத்தின் சில பாடசாலைகள்,பருத்தித்துறை நகரத்தின் சில பாடசாலைகள்,கிளிநொச்சியின் நகரத்தல் ஒரு சில பாடசாலைகள், இதேபோன்று வவுனியா,மன்னார் போன்ற நகரங்களில் உள்ள சில பாடசாலைகளைத் தவிர மிகுதி அனைத்துப்பாடசாலைகளிலுமே மாணவர் பற்றாக்குறை நிலவி வருகின்றது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் வடமராட்சி கல்வி வலயத்தில் மட்டும் முதலாம் தர மாணவர்ளின் தொகை ஆயிரம் மாணவர்களால் வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு வருடத்திலே ஒரு வலயத்திலே ஆயிரம் மாணவர்கள் குறைவடைந்திருக்கிறார்கள் என்று சொன்னால் எங்களுடைய மாணவர்களின் எதிர்காலம்,எங்களுடைய இருப்பினுடைய எதிர்காலம் பற்றி நாங்கள் சிந்திக்க வேண்டும். இலங்கையில் இடம்பெற்ற போர் ஒரு மில்லியன் தமிழ் மக்களை நாடடை விட்டு வெளியேற்றியிருக்கிறது. இதை விட போராளிகள்,பொது மக்கள் உற்பட மூன்றறை லட்சம் மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறியோராக இருந்தாலும் சரி அல்லது கொல்லப்பட்டவர்களாக இருந்தாலும் சரி இவர்களின் வயதெல்லைகளைப் பார்ப்போமாக இருந்தால் பெரும்பாலானோர் 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டவர்களாகவே இருக்கின்றனர். ஆக இந்த மக்களும் எங்களிடம் இல்லை. இவர்களின் சந்ததிகளும் எங்களிடம் இல்லை. ஆகவே நாங்கள் மூன்று நான்கு தலைமுறையை இழந்திருக்pறோம்.

இப்போது இலங்கையின் சனத்தொகை பெருக்க விகிதம் முஸ்லிம்கள் ஆயிரம் பேருக்கு 8.7 பேர் அதிகரிக்கிறார்கள். சிங்களவர்கள் ஆயிரம் பேருக்கு 5.5 பேர் அதிகரிக்கிறார்கள் தமிழர்கள் 1.5 பேர் அதிகரிக்கின்றார்கள். தேசிய சராசரியை விட மிகமிக குறைவான மக்கள் தொகை அதிகரிப்பில் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். கண்டிப்பாக எமது சனத்தொகை தொடர்பில் மீள் சிந்தனை கண்டிப்பாக எங்களுக்குத் தேவை. சிங்கள இனவாத பிக்கு ஞானசார தேரர் சிங்களவரிடத்திலே பரப்புரை செய்து வருகிறார் இங்கே சிங்கள இனம் அழிந்து கொண்டு வருகிறது. எனவே 6,7 பிள்ளைகள் பெறுங்கள் என்கிறார். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த போது அவரது பாதீட்டிலே சிங்கள இராணுவத்தைச் சேர்ந்த ஒருவர் மூன்றாவது பிள்ளைப்பெற்றால் அவரது பிள்ளைக்கு ஒரு லட்சம் ரூபா வழங்கப்படும் என அறிவித்து அதனை நடைமுறையும் படுத்தினார். அந்த திட்டத்தில் இன்னும் மாற்றமில்லை. இந்த அரசாங்கமும் அதை செய்து கொண்டு தான் இருக்கிறது.

இப்போது இருக்கின்ற சனத்தொகை வளர்ச்சி வீதத்தில் எமது இனம் சென்று கொண்டிருக்குமானால் நாங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில் இலங்கையின் மூன்றாவது இனமாக சுருங்கி விடுவோம். ஆகவே பாடசாலைகளுக்கு மாணவர்கள் குறைவு என்றால் எங்களுக்கு மாற்று வழிகள் இல்லை. எல்லோரும் அதிக குழந்தைகளைப் பெற்றேயாக வேண்டும். வேறு எந்த குறுக்கு வழிகளிலும் இதற்கு தீர்வு காணமுடியாது என்றார்.

நிகழ்வில் கல்வி மற்றும் இணைபாட விதானங்களிலும்,விளையாட்டுக்களிலும் சிறப்பாக செயற்பட்ட மாணவர்களுக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சரின் துணைவியார் திருமதி சுபாஜினி சர்வேஸ்வரன் அவர்கள் சான்றிதழ்களையும்,பரிசில்களையும் வழங்கிவைத்தார். பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

10 கருத்துரைகள்:

Thoughtful of him who is concerned of his own community, the situation was created by short-sightedness of his own people and NOT because of the Muslims who lead a normal life in the footsteps of Prophet Muhammad.

திரு சர்வேஸ்வரன் அவர்கள் இவ்வாறு ஒரு சமூக சிந்தையுள்ளவர் அவர் எத்தனை பிள்ளைகளை பெற்றெடுத்துள்ளார் என்பதை கூறிவிட்டு தமிழ் சமூகமும் அவ்வாறு அதிகமாக குழந்தைகளை பெறுங்கள் என்று கூறினால் சிறப்பாக இருக்கும்.

உம்மைப் போன்ற கல்வியறிவுள்ள வசதி படைத்தவர்களே ஒன்று அல்லது இரண்டுடன் நிறுத்திவிட்டு படிக்காத ஏழை வறிய மக்களிடம் பிள்ளைகளை பெற்றுத் தள்ளுங்கள் என்றால் அவர்களை பராமரிப்பது நீரா உமது அமைச்சா?

ஒரு வேளை சாப்பாட்டுக்கே வசதியில்லாத ஏழை தமிழ் மக்கள் தொழிலின்றி வாழ்விடமின்றி இலட்சக்கணக்கில் வடகிழக்கில் வாழ்கிறார்கள் அவர்களிடம் போய் அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு உம்மைப் போன்றோருக்கு சொறனை இல்லை பிள்ளைகளை அதிகமாக பெறுங்கள் என்று கூறுவதற்கு வெட்கமில்லையா.

புறைலர் கோழி பண்ணையில் சேர்த்து விட்டால் வெகு சீக்கிரம் உற்பத்தியாக்கலாம்.

இவனெல்லாம் ஒரு கல்வி அமைச்சர். பாடசாலை நிகழ்வுகளில் பிள்ளை பெறுதலை பற்றி பேசி சிறு பிள்ளைகள் மனதில் தேவையற்ற எண்ணத்தை விதைக்கின்றான் என்றால் இவனுடைய இனவாதம் எந்தளவிற்கு தலைகேறியுள்ளது.

Best alternative is to f... Your wives.

ரோம மன்னர் ஹெர்குலிஸுக்கும் முஸ்லிம் தூதுவர்களுக்கும் இடையில் கி.பி. 613ல் நடந்த நீண்ட உரையாடலில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பற்றிய ஓர் குறிப்பு:

'நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றுவோர் அதிகமாக்கிக் கொண்டு செல்கிறார்களா? அல்லது குறைந்து போகிறார்களா?' என நான் உம்மிடம் கேட்டேன்.

'இல்லை அவர்கள் அதிகமாகிக் கொண்டே செல்கிறார்கள்' என நீர் கூறினீர்!  'அப்படித்தான் ஈமான் (இறை நம்பிக்கை).  அது முழுமையடையும் வரை (அதிகமாக்கிக் கொண்டே) இருக்கும்.'

'அவரின் மார்க்கத்தில் நுழைந்த பின் அதன் மீது அதிருப்தியுற்று எவராவது மதம் மாறியிருக்கின்றனரா?' என்று நான் உம்மிடம் கேட்டேன்.

'அவ்வாறெல்லாம் ஒன்றுமில்லை' என நீர் கூறினீர். 'ஈமான் என்பது அப்படித்தான்! அதன் தெளிவு இதயங்களில் கலந்து விடும்போது அதனை எவரும் வெறுக்க மாட்டார்கள்'.

இவ்வாறு மன்னர் ஹெர்குலிஸ் தம்மிடம் கூறியதாக அபூ சுஃப்யான்(ரலி) கூறினார்'.

அறிவிப்பவர் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி).

ஸஹீஹ் புகாரி ஹதீஸ் எண் 51
www.tamililquran.com/hathees

You are a real bull. you force the poor families to fuck and deliever babies what about your babies. Do u satisfied or fulfilled?

Islamophobia spread over jaffna Tamils

All Tamilians are dont want to make baby becouse no ............ Lol

Post a Comment