Header Ads



ஹஜ் ஏற்பாடுகள் தீவிரம் - கட்டாரிலிருந்து இதுவரை எவரும் செல்லவில்லை


இந்த ஆண்டு ஹஜ் கடமைக்காக இதுவரை சுமார் 567,000 யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவை வந்தடைந்திருப்பதாக சவூதி நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த ஜூலை 14 ஆம் திகதி தொடக்கமே இந்த யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர்.

சவூதி அரேபியாவின் கடவுச்சீட்டுகளின் பொது இயக்குனரகத்தின் அறிக்கையின்படி, விமானத்தின் ஊடே 558,505 யாத்திரிகர்கள் வந்திருப்பதோடு 4,696 யாத்திரிகர்கள் தரைவழியாகவும், 4,258 யாத்திரிகர்கள் கடல் மார்க்கமாகவும் சவூதியை அடைந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் இந்தோனேசியாவில் இருந்து அதிக எண்ணிக்கையாக 103,000 யாத்திரிகர்களும் இதற்கு அடுத்ததாக இந்தியாவில் இருந்து 93,000 யாத்திரிகர்களும் ஹஜ் கடமைக்காக சென்றுள்ளனர்.

இதனிடையே சவூதி அரேபியாவுடன் இராஜதந்திர முறுகளில் ஈடுபட்டிருக்கும் அண்டை நாடான கட்டாரில் இருந்து இதுவரை ஹஜ் கடமைக்கு யாரும் வரவில்லை என்று சவூதி நிர்வாகம் (புதன்கிழமை 01) குறிப்பிட்டது.

தீவிரவாதத்திற்கு உதவியதாக குற்றம்சாட்டி கடந்த ஆண்டு சவூதி அரேபியாவுடன் எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பஹ்ரைன் நாடுகள் கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்து அந்நாட்டுக்கான கடல், தரை மற்றும் வான் வழிப்பாதைகளையும் முடக்கியது.

இந்த ஆண்டு ஹஜ் கடமை ஓகஸ்ட் 19ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

1 comment:

  1. haji yenpathu iru naattu uravai thandi allahval muslimkalukku kadamai aakkappatta oru amal. atharku yentha vithathilum yarum thadaiyaha irukka mudiyathu.

    ReplyDelete

Powered by Blogger.