Header Ads



"ஒற்றுமை இல்லாததினால், மத்திய கிழக்கு நாடுகளின் முன்னேற்றமும் தடைப்பட்டுள்ளது"

வடக்கு மாகாண முதலமைச்சர் அடிப்படைவாத கதைகளை கூறுவதாகவும் போர் முடிந்து மக்கள் துன்பத்தில் இருந்து விடுப்பட்டு அமைதி நிலைமைக்கு வரும் வேளையில் அதனை குழப்ப பொய்யான கதைகளை கூறுவதாகவும் வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

பொலன்நறுவையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வடக்கில் விகாரைகளை நிர்மாணிக்க வேண்டாமாம். தெற்கில் கோயில்கள், பள்ளிவாசல்களை நிர்மாணிக்கும் போது எவருக்கும் பிரச்சினையில்லை.

எமது விகாரைகளில் இந்து தெய்வங்கள் இருக்கின்றன. அதேபோல் இலங்கையின் அடையாளமானது அறிவு மற்றும் கல்வியிலேயே தங்கியுள்ளது. உலகில் வாழும் விலங்குகளில் உயர்வான விலங்கு மனிதன்.

மனிதனுக்கு கல்வி தொடர்பான அக்கறை ஏற்படும் போது பொருளாதாரம் மட்டுமல்ல, இனங்கள், மதங்கள் மற்றும் ஜாதிகளுக்கு இடையிலான பேதங்கள் இல்லாமல் போகும்.

உலகில் பெறுமதியான சொத்துக்கள் தங்கமும், வைரமும், காணிகளும் அல்ல. அறிவே உயர்வான சொத்து. நாம் பெற்றுக்கொள்ளும் அறிவை எவராலும் திருட முடியாது.

இனங்களுக்கு இடையிலான ஐக்கியமின்மையே நாட்டின் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளது. ஒற்றுமை இல்லாத காரணத்தினால், மத்திய கிழக்கு நாடுகளின் முன்னேற்றமும் தடைப்பட்டுள்ளது.

இலங்கையில் சிங்களவர்களே அதிகளவில் இரத்ததானம் செய்கின்றனர். இன, மத, ஜாதி பேதங்கள் இல்லாத நாடாக இலங்கையை மாற்ற வேண்டும் என்பதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நோக்கம் எனவும் ரெஜினோல்ட் குரே குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. உமக்கு மண்டைக்கு வெளிய தான் ஒன்றும் இல்லை என பார்த்தால் மண்டைக்கு உள்ளேயும் சக்கு கட்டின களி மண் தான் இருக்கு போல. வட மாகாணத்திலே ஒரு கதை வெளி மாகாணங்களில் இன்னுமொரு கதை. சபாஷ் வாங்கும் சம்பளத்துக்கு ஒரு படி மேலாகவே வேலை செய்கின்ரீர்கள்.

    ReplyDelete
  2. சரியான கருத்து யாழ்ப்பாண தமிழ் அடிப்படைவாதிகளிடம் அடிப்படைவாத சிந்தனை அவ்வளவு எளிதில் நீங்கிவிடாது

    ReplyDelete

Powered by Blogger.