Header Ads



பணவெறி வைத்தியர்களினால், பச்சிலம் பாலகன் பறிபோனான்


சளித்தொல்லையால் அவதியுற்ற இரண்டு வயது குழந்தைக்கு துரிதமாகச் சிகிச்சை அளிக்காததால் அக்குழந்தை இறந்துவிட்டதாகக் குற்றஞ்சாட்டி, கலஹா வைத்தியசாலை முன்பாக பொதுமக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூச்சுவிடுவதற்குச் சிரமப்பட்ட குழந்தையை வைத்தியசாலையில் அனுமதித்து சுமார் இரண்டு மணித்தியாலம் கடந்துவிட்ட போதிலும் அந்தக் குழந்தைக்கு மருத்துவர் சிகிச்சை அளிக்கவில்லை என்றும் அதன் காரணமாக அக்குழந்தையைப் பெற்றோர் பேராதனை வைத்தியசாலைக்குக் கொண்டுசென்றபோது அங்கு அந்தக் குழந்தை இறந்துவிட்டதாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனைக் கேள்வியுற்றே பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கலஹா ஆறு ஏக்கர் வைத்தியசாலையின் மருத்துவருக்கு எதிராகவே நேற்றுப் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பந்தப்பட்ட மருத்துவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்ைக விடுத்தனர்.

கலஹா தெல்தோட்டை குறூப் தோட்டத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளியான சங்கர் என்பவரின் 2 வயது மகன் சங்கர் சஜீ என்ற சிறுவனே மரணமடைந்துள்ளார்.

கடுமையான சளித் தொல்லை காரணமாக அவதியுற்ற சிறுவனை பெற்றோர் நேற்று (28) காலை 7 மணியளவில் கலஹா ஆறு ஏக்கர் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

ஆனால், 9.00 மணிவரை இந்த சிறுவனை வைத்தியர் பரிசோதிக்கவும் இல்லை, மருந்துகள் ஏதும் கொடுக்கவும் இல்லை. சிறுவனின் அவதியை சகிக்க முடியாத பெற்றோர் உடனடியாகப் பேராதனை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

சிறுவனை ஆஸ்பத்திரியில் அனுமதித்த போது சிறுவன் மரணதடைந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. கலஹா வைத்தியசாலையில் முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டிருக்குமானால், சிறுவனைக் காப்பாற்றியிருக்கலாம் எனப் பேராதனை வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்ததாகப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஆத்திரமுற்ற பிரதேசவாசிகள் கலஹா ஆறு ஏக்கர் அரசாங்க ஆதார வைத்தியசாலை பொறுப்பான வைத்தியர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனக் கோரி கடும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக இப்பிரதேசத்தில் பதற்ற நிலை காணப்பட்டது. இதனால் கலகம் தடுக்கும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன் உயர் பொலிஸ் அதிகாரிகளும் வருகை தந்து நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும் இங்கு சமுகமளித்திருந்தனர்.

இவ் வைத்தியசாலைக்கு எடுத்து வரப்படுகின்ற நோயாளிகளை வைத்தியசாலை வைத்தியர்கள் உரியமுறையில் கவனிப்பதும் இல்லை, உரிய சிகிச்சைகள் வழங்குவதுமில்லை. ஆனால் இவ் வைத்தியர்களின் பிரத்தியேக மருத்துவ நிலையங்களுக்குச் சென்றால் பணம் பெறுவதற்காக நன்றாக கவனிக்கின்றார்கள். எங்களைப் போன்ற வறியவர்களுக்குப் பண வசதியின்மையால் அரசாங்க ஆதாரவைத்தியசாலையையே நாடி வரவேண்டியுள்ளது எனப் பிரதேசவாசிகள் அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டி கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.

பொலிஸ் உயரதிகாரிகளும் மத்திய மாகாண சுகாதார பிரிவு அதிகாரிகளும் வைத்தியரை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தை கைவிடுமாறு கோரிய போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாய் மொழி உறுதிகளை ஏற்க முடியாது. எழுத்துமூலமான உறுதியைத் தந்தால் மாத்திரமே ஆர்ப்பாட்டத்தை கைவிடுவதாகத் தெரிவித்தனர். எனினும் சமாதான முயற்சிகள் கைகூடாத நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால், நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்குப் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டனர்..

நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர பொலிஸார் மற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர்..

1 comment:

  1. சளி நோய் என்று பிரச்சாரம் செய்யப்பட்டாலும் சளியுடன் கூடிய காய்ச்சல் அதனால் ஏட்பட்ட காய்ச்சல் வலிப்பு (Febrile Fits) ஏட்பட்ட நிலையில் தான் பிள்ளை அனுமதிக்க பட்டுள்ளது.
    Adadera வின் இந்த Video வை பாருங்கள்.
    ஆரம்ப சிகிட்சைகள் அளிக்கப்பட்டு பிள்ளை Ward இல் இருக்கும்போது விபத்தில் சிக்கிய இருவர் அதே நேரம் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை Ambulance Kandy வைத்தியசாலைக்கு கொண்டு சென்றும் இந்த பிள்ளை ஆரம்பத்தில் அனுப்பப்படவில்லை.

    மக்களின் கொந்தளிப்பு சரியான Treatment வழங்க படாமை மற்றும் இனவாத கண் கொண்டு பிள்ளைக்கு Ambulance வசதி செய்து கொடுக்க புறக்கணிக்க பட்டுள்ளது என்பதே.

    https://www.youtube.com/watch?time_continue=56&v=I-BC5yVLjHk

    இதில் Medical Negligence இருந்தால் கட்டாயம் நிதியின் முன் நிறுத்த வேண்டும்.
    அதே நேரம் சிறு பிள்ளைகளுக்கு காய்ச்சல் ஏட்படும்போது ஆரம்பத்திலேயே உரிய மருத்துவ ஆலோசனையை பெற்று காய்ச்சலை தணிக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வாறான காய்ச்சல் வலிப்பு ஏட்பட்டு உயிராபத்து வரும் சாத்தியங்கள் உண்டு.
    இங்கு பெற்றோரும் தமது கவன ஈனத்தையும் சமூகத்தின் மத்தியில் மறைக்க இப்படி நடந்து கொள்வதும் உண்டு. (காய்ச்சல் வலிப்பு Febrile fits வரும்வரை இருந்துவிட்டு வைத்தியசாலையை நாடுவது.)
    காய்ச்சல் இயற்க்கையாக சரியாகிவிடும். மருந்து தேவை இல்லை என்று பிரச்சாரம் செய்வோர் இதனையும் ஒரு படிப்பினையாக பார்க்க வேண்டும்.
    சமூக வலைத்தளங்களில் இவ்வாறான காய்ச்சலுக்கு மருத்துவம் தேவை இல்லை என்ற செய்தியை பிரச்சாரம் செய்யும் அதனை Share செய்யும் அதி மேதாவிகளும் இதனை கவனத்தில் கொள்க.
    குழந்தைகளின் காய்ச்சல் விடயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

    GALAHA INCIDENT- Confirmed update,

    At 9.10am an infant with febrile convulsion has been admitted to Galaha DH. Patient has been refered by a GP after giving Diclofenac Sodium Suppository. On admission the doctor has given ABC management, canulation and PR Diazepam. These has been documented too. At that time also the fit was almost settled and patient was on ?? post ictal drowziness.
    At that same time two patients with RTA got admitted. One with ear bleeding and other one with a head injury with a confusional status. So the doctor has managed both of them and arranged an ambulance to transfer them to Kandy TH. As theres only 1 ambulance , the Delthota hospital ambulance was called to transfer the infant to SBSCH. Within few mins it has reached and at that same time the patient got arrested. This is at 9.40am. When the doctor tries to manage that , bystanders has disturbed and beaten the doctor. And they have taken the infant by force to SBSCH.
    Now villagers have surrounded the hospital and police also has arrived.
    Two vehicles of the said doctor and the RMO who was looking after the clinic today was destroyed by the villagers. Two doctors are within the hospital premises under the security of police.

    ReplyDelete

Powered by Blogger.