August 03, 2018

"முஸ்லிம்களின் சனத் தொகை, தமிழரையும் தாண்டும் என்பது தவறு கிடையாது"

-Mahibal M. Fassy-

வட மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள், விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன் அவர்கள் அண்மைய தமது உரை ஒன்றில் குறிப்பிட்டது போன்று,  முஸ்லிம்களின் சனத் தொகை வளர்ச்சியை தமிழருடன் ஒப்பிட்டு தனது சமூகத்தின் பலகீனத்தைப் பற்றிக் கவலைப்படுவதில் தவறு கிடையாது.  

அது ஏனைய சமூகத்தினருக்கு எதிரான இனவாதமல்ல.  அவரது கருத்து முஸ்லிம்களுக்கு எதிரானது எனக்கொள்ள முடியாது.

தனது சமூகத்தைப் பற்றிக் கவலைப் படுபவர்தான் சிறந்த சமூகத் தலைவராக இருக்க முடியும்.

அவரது கணிப்பின்படி இன்னும் ஐந்து வருடங்களில் முஸ்லிம்களின் சனத் தொகை தமிழரையும் தாண்டி  முதலாவது சிறுபான்மை என்ற நிலைக்கு வரலாம்.

அவ்வாறான ஓர் நிலை வந்தாலும்கூட இந்நாட்டுப் பிரச்சினைகளை தற்போதைய பெரும்பான்மையினர் தீர்த்து வைப்பதற்கான எந்த மானசீக ஆற்றலும் அவர்களிடம் கிடையாது.

இந்நாட்டின் மொழிப்பிரச்சினை, ஊழல் ஒழிப்பு, அதிகாரப் பரவலாக்கம், போதைவஸ்து ஒழிப்பு, வட்டியற்ற பொருளாதாரம், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் - விதவைகளுக்கான தீர்வு, வறுமை ஒழிப்பு, பாலியல் ஒழுக்கச் சீர்கேடுகள், சாதி, இன முரண்பாடுகள் போன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கான தீர்வை அனைத்து அனைத்து மனிதர்களுக்காகவும் இறைவன் புனித குர்ஆனில்தான் வைத்திருக்கின்றான். 

எனவே புனித குர்ஆனின் மேன்மையான போதனைகளை நாமும் அறிய முயற்சி செய்து அதன்படி நடப்பதோடு  இந்நாட்டின் ஏனைய மக்களும் அதனை அறிந்து ஏற்றுக் கொள்வதற்கான சூழலை உருவாக்க வேண்டும்.

அத்துடன்,  முஸ்லிம்கள் இந்நாட்டில்  பெரும்பான்மையான பின்தான் குர்ஆனிய போதனைகள் மூலம் இந்நாட்டின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்ற நிலைதான் என்றிருந்தால், அதனை விரைவு படுத்துவதே விவேகமும் அனைவருக்குமான விரைவான தீர்வுமாகும்.

"வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் - ஏனெனில் உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்." 
(திருக்குர்ஆன் 6:151)

படைப்பினங்களின் வாழ்வாதாரங்களை இறைவனே பொறுப்பேற்று இருக்கின்றான் என்ற இறை நம்பிக்கை, சந்ததிகளை அதிகரித்துக் கொள்வதற்காகவும் மற்றும் பலதார மணம் புரிவதற்காகவுமான இறைவனதும் அவனது இறுதித் தூதரினதும் உற்சாகமூட்டுதல்கள் போன்றன இது விடயத்தில் நாம் சாதகமாகப் கவனத்தில் எடுத்து நடைமுறைப்படுத்த வேண்டியவையாகும். நன்றி.

6 கருத்துரைகள்:

Tamil migration..
Tamil late marriage ...
Tamil caste system..
Tamil birth control...
All are some of the reaons .
We are not like that ..

What a brain-dead person you are!

Hindus easily forget the hardships and the sufferings Muslims went through during the LTTE's atrocities. Muslims were also badly affected by the war as any other community. Nobody talks about the number of innocent Tamil children who were killed or number of people who migrated to Europe or other countries due to the war. Tamils can have as many children as they like.

@ Lareef Abdul Majeed
எது உங்களை அவ்வாறு எழுதத் தூண்டியது?

இன்னும் ஐந்து வருடங்களில் முஸ்லிம்களின் சனத்தொகை தமிழரையும் தாண்டிவிடும் என்பது பிழையான கருத்து. முஸ்லிம்களின் சனத்தொகை ஏற்கனவே தமிழரையும் தாண்டிவிட்டதை கடந்தகால கணிப்பீடுகள் காட்டிவிட்டன.. இனவாதிகளால் அந்தப் புள்ளிவிபரங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளன.

அண்மைக்காலங்களாக நான் கிழக்கு மாகானம் தொடர்பாக அக்கறை செலுத்திவருகிறேன். முஸ்லிம்கள் சனத்தொகைபற்றி சில சிங்களவர்கள் தமிழர்கள் புரளிகிழப்புவதும் அதை சில முஸ்லிம்கள் கொண்டாடுவதும் அபத்தமானது. பகுதி பகுதியாக அகதிகழ் மீழ் வருகை ஆரம்பித்ததில் 2007ல் 45.% இருந்த முஸ்லிம்களின் சனத்தொகை 40.4% மாக 5%ம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேற்படி காலக்கட்டத்தில் தமிழர் சனத்தொகை 3.5% உயர்ந்துள்ளது. இது அடுத்த 5 வருடங்களில் மேலும் பாரிய மாற்றங்களுக்கு உள்ளாகும். அம்பாறை மாவட்டத்தில் தமிழ் அகதிகள் மீழ்வரவு மெதுவாகவே இடம்பெறுகிறது. எனினும் முஸ்லிம்கள் சனத்தொகை வீதத்தில் குறிப்பிடத்தக்க உயர்வு ஏற்படவில்லை. எனவே புரழி கிளப்புவதை சிங்கல தமிழ் இனவாதிகளும் புரளிகளை கொண்டாடுவதை முஸ்லிம் இன வாதிகளும் கைவிட வேண்டும்.
.
https://www.facebook.com/jaya.palan.9/posts/10155970533584332

Post a Comment