Header Ads



குமார் சங்கக்காரவை ஜனாதிபதி, வேட்பாளராக்க தொடர்ந்து முயற்சி

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் தான் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சங்கக்கார தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அறிவித்திருந்தார்.

ஆனாலும் சங்கக்காரவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதில் பிரபல அரசியல்வாதிகள் சிலர் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக பிராந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அழுத்தங்களை சங்கக்கார மீது திணிக்கும் முயற்சியில் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சங்கக்காரவை ஜனாதிபதியாக்கும் முயற்சிக்கு பிராந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் தலையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதற்கமைய சங்கக்காரவை சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆட்சியின் போதும் குமார் சங்கக்காரவை அரசியலில் ஈடுபடுத்தும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டிருந்தார். ஆனாலும் குமார் சங்கக்கார அதனை முற்றாக நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.