Header Ads



கண்டி மீராமக்காம், பள்ளிவாசல் நூதனசாலையாகிறது


வர­லாற்று புகழ்­மிக்க கண்டி மீரா­மக்காம் பள்­ளி­வா­ச­லுடன் நிர்­மா­ணிக்­கப்­பட்­டுள்ள கலா­சார நிலைய கட்­டி­டத்தின் மேல் மாடியில் இஸ்­லா­மிய நூத­ன­சாலை ஒன்­றி­னையும், வாசி­க­சாலை ஒன்­றி­னையும் அமைப்­ப­தற்கு பள்­ளி­வாசல் நிர்­வாகம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது.

இதற்­கான பேச்­சு­வார்த்­தைகள் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் மற்றும் பல்­க­லைக்­க­ழகப் புத்­தி­ஜீ­வி­க­ளுடன் நடத்­தப்­பட்­டுள்­ள­தாகப் பள்­ளி­வாசல் நிர்­வாக சபையின் தலை­வரும் கண்டி மாந­கர சபை பிரதி மேய­ரு­மான ரி.எம்.இலாஹி ஆப்தின் தெரி­வித்தார்.

கண்டி நக­ருக்கு விஜயம் செய்யும் பெரும் எண்­ணிக்­கை­யி­லான வெளி­நாட்டு உல்­லாசப் பய­ணி­களை கவரும் வகையில் அவர்­க­ளுக்கு இஸ்­லா­மிய கலை, கலா­சா­ரங்­களை விப­ரிக்கும் வகையில் நூத­ன­சாலை அமையும் எனவும் அவர் கூறினார்.

இதற்­காக வக்பு சபையின் அனு­ம­தியைப் பெற்றுக்கொள்வதற்காகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
-VIdivelli

No comments

Powered by Blogger.