Header Ads



சீனாவின் திட்டங்களை செயல்படுத்தினால், பெரும் கடன்சுமை நேரிடும் - மஹதீர்

சுமார் ரூ.1.5 லட்சம் கோடி மதிப்பிலான சீன திட்டங்களை ரத்துச் செய்யப் போவதாக மலேசிய பிரதமர் மஹதீர் முகமது தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுடன் வீதி, ரயில், கடல் வழியேயான போக்குவரத்தை ஏற்படுத்தும் ‘ஒரே சுற்று , ஒரே பாதை’ என்ற திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் உள்ள குவாதரில் பிரம்மாண்டமான துறைமுகத்தை சீனா கட்டியுள்ளது. சீனாவில் இருந்து குவாதருக்கு நெடுஞ்சாலையையும் அமைத்துள்ளது. இந்த நெடுஞ்சாலை பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை ஊடறுத்துச் செல்வதால் இந்தியா அதற்கு கடுமையாக ஆட்சேபனை தெரிவித்து வருகிறது.

‘ஒரே சுற்று, ஒரே பாதை’ திட்டத்தில் மலேசியாவில் சுமார் ரூ.1.53 லட்சம் கோடி செலவில் ரயில், எண்ணெய் குழாய் திட்டங்களைச் செயல்படுத்த சீனா ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த ஒப்பந்தம் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் காலத்தில் செய்துகொள்ளப்பட்டது.

கடந்த மே மாதம் மலேசியா வின் புதிய பிரதமராக மஹதீர் முகமது பதவியேற்றார். சீனாவில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற் கொண்ட அவர், அந்த நாட்டு தலைநகர் பீஜிங்கில் மலேசிய நிருபர்களிடம் பேசுகையில்:

‘ஒரேசுற்று, ஒரே பாதை’ திட்டத்தில் மலேசிய தலைநகர் கோலாலம்பூர், தாய்லாந்தை இணைக்கும் ரயில் பாதை, 2 எண்ணெய் குழாய் திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந் தது. இந்த திட்டங்கள் மலேசியா வுக்கு தேவையில்லை.

சீன நிதியுதவியுடன் இந்த திட்டங்களைச் செயல்படுத்தினால் மலேசியாவுக்கு பெரும் கடன் சுமை நேரிடும். கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே ரயில் பாதை, எண்ணெய் குழாய் திட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம்.என்று அவர் தெரிவித்தார்.

1 comment:

  1. wow this is a true leader!! may allah help you on your efforts!!

    ReplyDelete

Powered by Blogger.