Header Ads



உருக்குலைந்த ஜனாசா, அடையாளம் காணப்பட்டது

(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை கன்னியா காயத்திரி கோயிலுக்கு பின்  புறமாகவுள்ள காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில்  இன்று (02) 
கண்டெடுக்கப்பட்ட சடலம் இணங்கானப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

 உருக்குலைந்த நிலையில் கைப்பற்றப்பட்ட சடலம் திருகோணமலை, தக்கியா வீதி இலக்கம் 19/8 இல் வசித்து வந்த ஏ.சீ.பசீர்  அத்தா (79வயது) என்பவர் எனவும் அவரது   உறவினர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

திருகோணமலை கன்னியா காட்டுப்பகுதியில் சடலமொன்று கிடப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அங்கு விரைந்த செய்தியாளர் புகைப்படங்களையும் வீடியோக்களையும்  எடுத்து விட்டு பொலிஸாருக்கு சில  தகவல்களை வழங்கியுள்ளார்.

அதில் கடந்த 07ம்மாதம்  சோனகவாடி பகுதியில் வயோதிபரொருவரை காணவில்லையென ஊடகவியலாளரான எனக்கு புகைப்படத்துடன் சில தகவல் அனுப்பி வைக்கப்ட்டுள்ளதாகவும்  நான் சடலத்தை பார்வையிட்டதுடன்  அவராக இருக்கலாம் என என்னுவதாகவும் அவருக்கு அருகில் மீட்கப்பட்ட தொப்பி.சேட் மற்றும் பாதணிகள் வயோதிபரொருவருடையது என தான்  என்னுவதாகவும் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதேவேளை  காணாமல் போனவரின் இடத்தில் வசித்து வரும் சக ஊடகவியலாளருடன் தொலைபேசி மூலம் சம்பவத்தை கூறி உறவினர்களுக்கு  இதனை தெரியப்படுத்தியுள்ளார்.

அதனையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த உறவினர்கள்  காணாமல் போன பசீர் அத்தா என இணங்காட்டினர். இதனையடுத்து தூக்கில் உருக்குலைந்த நிலையில் கிடந்த சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாககவும் தெரியவருகின்றது.

இவர் கடந்த ஏழாம்மாதம் 10ம் திகதி காணாமல் போயுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் உளநலம் பாதிக்கப்பட்டவர்  எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.