Header Ads



கசப்புணர்வுகளை மறந்து, பல்கலைக்கழக நன்மைக்காய் ஒன்றுபடுங்கள் - உபவேந்தர் நாஜீம் உருக்கம்

பல்கலைக்கழக அபிவிருத்தியில் அக்கறைகொன்டதன் காரணமாகவே உபவேந்தர் நியமனத்துக்காக பலர் முட்டி மோதியதாக தான் கருதுவதாகவும் அவ்வாறு அவர்கள் உண்மையாக பல்கலைக்கழகத்தின் நலனில் அக்கறையுள்ளவர்களாக இருந்தால் தன்னுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு அறைகூவல் விடுப்பதாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் தெரிவித்தார்.

2015 ஆம் ஆண்டு நான்காவது உபவேந்தராக கடமைபுரிந்த பேராசிரியர் நாஜீம் ஐந்தாவது முறையாகவும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக தெரிவுசெய்யப்பட்டு பதவியேற்றிருந்த நிலையில் பல்கலைக்கழகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வும் கல்விசார், நிருவாக மற்றும் கல்விசாரா ஊளியர்களுடனான சந்திப்பும் 2018-08-23 ஆம் திகதி அரபு மற்றும் இஸ்லாமிய கற்கைகள் பீடத்தின் கேட்போர் கூடத்தில், பதில் பதிவாளர் ஏ. தையூப் தலைமையில் இடம்பெற்றது.

கலாநிதி றமீஸ் அபூவக்கரின் வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர் நாஜீம்,

தனது முதலாவது உபவேந்தர் காலப்பகுதியில் பல்கலைக்கழகத்தின் கல்விசார் விடயங்களிலும் ஏனைய விடயங்களிலும் நேர்மையாக செயற்பட முற்படுகையில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாகவும் சவால்கள் தனக்குப் புதிய விடயமல்ல என்றும் தற்போது பதவியேற்றுள்ள இந்த காலப்பகுதியிலும் இன்னும் உத்வேகத்துடன் செயற்பட உள்ளதாகவும் இதில் பல்கலைக்கழக சட்டக்கோவை, பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் சுற்றுநிருபங்கள் மற்றும் நிதிப்பிரமானங்களுக்கு அமைவாகவே தனது செயற்பாடுகள் அமையும் என்றும் இவைகளை மீறி தான் எதனையும் செய்யப்போவத்தில்லை என்றும் சட்டம் மற்றும் சுற்றுநிருபங்களை மீறும் எதற்கும் தான் எப்போதும் துணைனிற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்தில் கடமைபுரியும் ஒவ்வொருவரும் அவரவரது கடமைகளை உளசுத்தியுடன் செய்வார்களானால் எவ்வித சிக்கலும் ஏற்படாது எனத் தெரிவித்த உபவேந்தர், சம்மந்தமில்லாத விடயங்களில் தங்களது மூக்கை நுளைப்போர் அவைகளில் இருந்து தவிர்ந்துகொள்வது நல்லது என்றும் தெரிவித்தார்.

நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய கலை கலாசாரா பீடத்தின் அரசியல் விஞ்ஞான பிரிவின் தலைவர் எம்.எம்.பாசில், மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் சிந்தனையில் உருவான தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளர்சிகள் தொடர்பாகவும் கடந்தகால உபவேந்தர்கள் ஆற்றிய பங்களிப்புகள் தொடர்பாகவும் பல்கலைக்கழகத்தை தரவரிசையில் முன்னிலைக்கு கொண்டுவர தற்போதைய உபவேந்தர் எடுத்து வரும் பங்குகள் குறித்தும் உரையாற்றிய அதேவேளை கசப்புணர்வுகளை மறந்து பல்கலைக்கழக நன்மைக்காய் ஒன்றுபடுமாறும் கேட்டுக்கொண்டார். 

எம்.வை.அமீர்-






3 comments:

  1. All what you need to do is to put some disciplines on both staff and students..
    Think this university represents the nation's interest ...not communal interest ..
    Think broadly in terms of Sri Lanka not in term of regions..
    Why people are narrow minded ?
    Why do you think only VCs or Deans or Heads should be from East ...from your regions ..
    Why not from anywhere in Sri Lanka ..
    Why would say from any community..
    What is wrong with you if a good Sinhalese or Tamil VC could do better than our community people ..
    Why not ?
    Do not see how Tamil teachers teach in our school better than our lazy or unqualified teachers ..
    Same applied to university staff .
    So many fake are recruited to university staff ..
    Some of them do not have basic academic stills ..
    The problem is we use politics to get appointment..
    This is basically against the law and Islam .
    Why do you do this in the name of your religion.
    Muslim community will never progress of we use all back door tricks .
    Let this VC do his job for another term .
    It is not a big deal .
    Choose best one next time .
    Do not go for regionalism or but look for talent .
    The basic rule is community interest in education should be given preference over personal interest of any person ..
    This is basic for any one To know .
    But all what you do is to appoint Some where from some area in your region?
    Is this what you inherite from Islam or from some ummayid caliphs or Sauid rulers or Gulf..
    Give this bad mindset ..
    But elect and select best and most qualified ..

    ReplyDelete
  2. I do not generalise ..
    They so many good people .
    See Dr Ameer Ali ...the most qualified person among Sri Lanka Muslim community..
    His degree is not fake like many others have ..
    Yet ; his application was turned on the pretext of old aged law .
    Because he did not go to seek poltiican' s support ..
    ..
    Many of university lecturers among Muslim community are milking the system and do little work for the money they got .
    All can fool the system but not the community ..
    Not Allah so; let them take some change in teaching and in their job

    ReplyDelete
  3. Vote for Qualification and talented one it will be run smooth

    ReplyDelete

Powered by Blogger.