அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்
தியாகத் திருநாள் ஈதுல் அழ்ஹா பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் ஈதுல் அழ்ஹா வாழ்த்துக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துக் கொள்கிறது.
நபி இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முழு வாழ்வுமே தியாகத்தோடு நிறைந்ததாகும். அன்னாரினதும் அவரது மனைவி ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும் அவர்களது புதல்வன் நபி இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களினதும் தியாகங்களை இத்தினங்களில் நினைவு கூறுகின்ற நாம் அத்தகைய தியாக உணர்வுகளை எம்மில் வளரத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும். சிறந்த முன்னுதாரணமிக்க ஒரு குடும்பமாக திகழ்ந்த இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தில் இருந்து நாமும் படிப்பினைகள் பெறவேண்டும்.
இத்தியாக திருநாளில் உலகலாவிய முஸ்லிம் உம்மத் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் முறியடிக்கப்பட அல்லாஹ்விடம் பிராத்திப்போமாக. ஒற்றுமையெனும் கயிற்றைப் பலமாக பிடித்து நாம் அனைவரும் தீன்பணியில் ஈடுபடுவோமாக.
'உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்புகிறார்களோ அவர்களுக்கு திடமாக இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமும் அவரோடு இருந்தவர்களிடமும் அழகிய முன்மாதிரியிருக்கிறது.' (60:06) என்ற அல்குர்ஆன் வசனத்தை நினைவிலிருத்தி தியாக சிந்தனையோடு வாழ எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!
தகப்பலல்லாஹு மின்னா வமின்கும்!
ஈத் முபாரக்!
அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
2 கருத்துரைகள்:
Perunal indaikka?
Thank you for day of 21st wishes
Post a Comment