Header Ads



முஸ்லிம் பாடசாலைகளின் ஹஜ், பெருநாள் விடுமுறைகளில் மாற்றம்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற முஸ்லிம் பாடசாலைகளின் இரண்டாம் தவணை நாளை (17) நிறைவடைகிறது.

அதற்கமைய, நாளை (17) வெள்ளிக்கிழமை இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறைக்காக மூடப்படும் முஸ்லிம் பாடசாலைகள் யாவும், எதிர்வரும் ஓகஸ்ட் 27 ஆம் திகதி திங்கட்கிழமை மூன்றாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நோன்பை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகள் யாவும், இரண்டாம் தவணையின் முதலாம் கட்ட விடுமுறைக்காக, கடந்த மே மாதம் 11 ஆம் திகதி மூடப்பட்டு ஜூன் 18 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட்டது.

அதனையடுத்து, நாளையதினம் (17) முஸ்லிம் மாணவர்களுக்கு இரண்டாம் தவணையின் இரண்டாம் கட்ட விடுமுறை வழங்கப்படவுள்ளது.

இவ்விடுமுறை நாட்களுக்குள், ஹஜ்ஜுப் பெருநாள் தினமும் (22) உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஆயினும், கடந்த ஓகஸ்ட் 06 ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த. உயர் தர பரீட்சை மத்திய நிலையங்களாக செயற்படும் முஸ்லிம் பாடசாலைகளுக்கு ஏற்கனவே விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பரீட்சைகள் எதிர்வரும் செப்டெம்பர் 01 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

No comments

Powered by Blogger.