Header Ads



சுவிட்சர்லாந்தில் கைகுலுக்க மறுத்த, முஸ்லிம் தம்பதிக்கு குடியுரிமை மறுப்பு

சுவிட்சர்லாந்தில் சகஜமாக கைகுலுக்க மறுத்த முஸ்லிம் தம்பதிக்கு குடியுரிமை வழங்க முடியாது என லாசானே நகர நிர்வாகம் மறுத்து விட்டது.

சுவிட்சர்லாந்தில் லாசானே நகரில் வெளிநாட்டை சேர்ந்த முஸ்லிம் கணவன்-மனைவி குடியுரிமை கேட்டு விண்ணப்பித்து இருந்தனர்.

அதை தொடர்ந்து அவர்களிடம் நகரின் துணைமேயர் பியாரே-அன்டோனி ஹில்ட்பிரான்ட் தலைமையில் 3 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தியது.

அப்போது முஸ்லிம் தம்பதி அவர்களிடம் சகஜமாக கைகுலுக்க மறுத்துவிட்டனர்.

இஸ்லாம் சட்டப்படி ஒரு ஆண் சம்பந்தமில்லாமல் பெண்ணுடனும், ஒரு பெண் மற்ற ஆண்களுடனும் கை குலுக்க கூடாது என காரணம் கூறப்பட்டது.

அதைதொடர்ந்து அவர்களுக்கு குடியுரிமை வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் முஸ்லிம் தம்பதிக்கு சுவிட்சர்லாந்து குடியுரிமை வழங்க முடியாது என லாசானே நகர நிர்வாகம் மறுத்துள்ளது.

கைகுலுக்க மறுப்பு தெரிவித்ததால் குடியுரிமை மறுக்கப்படுவதாக மேயர் கிரிகோரி ஜூனாட் தெரிவித்தார்.

கடந்த 2016-ம் ஆண்டில் சிரியாவை சேர்ந்த சகோதரர்கள் 2 பேர் பள்ளி ஆசிரியைக்கு கைகுலுக்க மறுத்ததால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. என் வீட்டிற்கு வரும் விருந்தாளியிடம் நான் கூறுகிறேன் நுளை வாசல் உயரம் குறைவு குனிந்து உள்வரவும் என்றேன் இல்லை என்றால் தலையில் இடிக்கும்
    காலத்திற்கு ஏற்ப மாறுதல் வேண்டும் சுகாதாரம் அதியாவசியம் நாம் BUSல் பயணம் செய்யும் பொழுது நாம் கை பிடிக்கும் எவ் உபகரணங்கள் எந்த வகையில் சுத்தமாணவை

    ReplyDelete
  2. mr varan islam enbadu kalattukku kalam maradu oru one vay valithan sugadarattukkum idukkum sammadam illa

    ReplyDelete
  3. உங்கள் பதிலின் படி ஜரோப்பா,அமெரிக்கா,அவுஸ்ரேலியாவில் வாழும் முஸ்லீம்கள் முஸ்லீம்கள் இல்லை அப்படித்தானே இலங்கையில் செருப்புடன் நடக்கலாம் ஜரோப்பாவில் செருப்புடன் வெளியே சென்றால் கால் விறைத்துவிடும் அரபிக்காரன் ஆடையுடன் திரிந்தால் தேடித்தான் பிடிக்கவேண்டும் சிறு நீர் கழிப்பதற்கு

    ReplyDelete
  4. Islam not too complicated peoples makes that.

    ReplyDelete

Powered by Blogger.