Header Ads



ஜனாதிபதியாகும் ரணில், பிரதமராகும் மைத்திரி...??

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக்கும் யோசனை தொடர்பில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர் ஒருவரை அடிப்படையாக கொண்டு அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்தை வெற்றியடைந்தால் அடுத்த மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இணைந்து போட்டியிடும் என நம்பப்படுகிறது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் இது தொடர்பிலான தீர்மானமிக்க கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இணைவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு வாய்ப்புகள் இல்லாமையினால் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடவே நேரிடும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

6 comments:

  1. Failed Leaders (MS+RW) OR HITLER (MR+GR)?????

    ReplyDelete
  2. kadenthe aatsiyil MR seithe sevaihal vilembereppaduththappattene. rupavahini news le pathi nerem avere iriparu.


    inthe aresu athe seiyathethuthan avenge vitte thaveru .

    MR nireye sevaihal seitharu. but aniyayengele thadukke marenthutaru.
    RAJAPAKSHA எனும் நாமம் இல்லாத மஹிந்த சிறந்தவரே....
    MY3 இல்லாத ரணிலும் சிறந்தவரே....
    MAHINDA RANIL ஆட்சி வந்தால் நாடு வளம்பெறும் .
    ஓர் ஐந்து வருடம் தாய்நாட்டுக்கய் முன்வருவார்களா?????

    ReplyDelete
  3. MR+RW 👌👌👌👌
    GR and MS இருவரும் சரிவரா......

    ReplyDelete
  4. MR+RW 👌👌👌👌
    GR and MS இருவரும் சரிவரா......

    ReplyDelete
  5. நல்ல செய்தி அப்பதான் மஹிந்த அணியை மிக கவனமாக பாதுகாக்கலாம் தாஜூடீன் கேசும் புஷ்வாணமாகிடும்

    ReplyDelete

Powered by Blogger.