Header Ads



முஸ்லிம் தனியார் சட்டத்தை எதிர்த்து, சலீம் மர்சூபின் அறிக்கையை ஆதரிக்கும் சூலனி கொடிகார

சட்டத்தரணி சூலனி கொடிகார, இலங்கை முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்காக குரலெழுப்பி வருபவர், Muslim Family Law in Sri Lanka; Theory, practice and issues of concern to women என்னும் நூலின் ஆசிரியர், பலநூறு ஆராய்ச்சிக் கட்டுரைகளுக்குச் சொந்தக்காரர், இலங்கை முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்பதில் போராடி வருபவர். ‘இலங்கையில் நிலைமாறும் நீதி’ தொடர்பில் பிரித்தானிய எடின்பரோ பல்கலைக்கழகத்தில் கலாநிதிக் கற்கையை தொடர்ந்து வருகின்றார். இவர் மீள்பார்வை பத்திரிகைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் இங்கு தரப்படுகிறது.

நேர்காணல்: ஹெட்டி ரம்ஸி

முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் நீங்கள் மேற்கொண்டுள்ள ஆய்வுகள் குறித்து சற்று தெளிவுபடுத்த முடியுமா?

முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் நான் 1994களிலேயே ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தேன். அப்போது நான் Muslim Women’s Research and Action Forum என்னும் அமைப்புடன் இணைந்து பணியாற்றினேன். அக்காலப்பகுதியில் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் ஒரேயொரு புத்தகம் மாத்திரமே எழுதப்பட்டிருந்தது. பேராசிரியர் சாவித்ரி குணசேகர, முன்னாள் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூப் ஆகியோருடன் இணைந்து முஸ்லிம் தனியார் சட்டம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்தோம்.

2000ஆம் ஆண்டு வரையில் Muslim Women’s Research and Action Forum அமைப்புடன் இணைந்து பணியாற்றினேன். இக்காலப் பகுதியில் பல்வேறு புத்தகங்களை வெளியிட்டோம். முஸ்லிம் தனியார் சட்டத்தின் நூறு வருட கால தீர்ப்புக்களை ஆராய்ந்து Muslim Family Law in Sri Lanka; Theory, practice and issues of concern to women என்னும் நூலை எழுதினேன்.

Muslim Family Law in Sri Lanka; Theory, practice and issues of concern to women என்னும் நூலுக்கூடாக நீங்கள் வெளிப்படுத்திய மிக முக்கிய விடயங்கள் என்ன?

முஸ்லிம் பெண்களை சட்டத்தினால் எவ்வாறு வேறுபடுத்திக் கவனிக்கிறார்களை என்கின்ற விடயத்தை நாம் ஆராய்ந்தோம். 1951ஆம் ஆண்டு 13ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரமே தற்போதைய முஸ்லிம் தனியார் சட்டம் உள்ளது. ஆரம்பத்தில் 1929ஆம் ஆண்டு சட்டத்தின் படியே முஸ்லிம் சட்டம் அமைந்திருந்தது. ‘1929ஆம் ஆண்டு முஸ்லிம் தனியார் சட்டம் பிரித்தானியர் காலத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம், இதனை இஸ்லாமிய சமயத்தின் படி பின்பற்ற முடியாது, எனவே இச்சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்’ என 1950களில் முஸ்லிம் ஆண் தலைமைகள் கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக அது மாற்றப்பட்டது. எனினும் தற்போதைய இந்தச் சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு வேறுபாடு காட்டும் முகமாகவே அமையப்பெற்றுள்ளது. 1970களுக்கு பின்னர் இந்தச் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து பல்வேறு தரப்புக்களிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் பெண்களை வேறுபடுத்திப் பார்க்கும் ஏற்பாடுகளாக நீங்கள் எவற்றை குறிப்பிடுகிறீர்கள்?

முஸ்லிம் விவாகப் பதிவாளராக ஒரு பெண்ணுக்கு கைச்சாத்திட முடியாத நிலையுள்ளது. திருமணத்தில் வலியாக பெற்றோர் குறிப்பாக ஆண்தரப்பு மாத்திரமே கைச்சாத்திடுகின்றனர். காதி நீதிமன்றங்களில் பெண்களுக்கான வாய்ப்புக்களோ பதவி நிலைகளோ இல்லை. ஏனெனில் ‘முஸ்லிமான ஆண்களே அதற்குச் சிறந்தவர்கள்’ என்று முஸ்லிம் தனியார் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிமான ஆண்களுக்கு மாத்திரமே காழியாக செயற்பட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தது திருமண வயது. பன்னிரண்டு வயதுக்கு குறைவான பெண்களை காழியின் அனுமதியோடு திருமணம் முடிக்க முடியும் என்றும், எவ்வித நிபந்தனைகளுமின்றி ஆண்களுக்கு 4 பெண்களை மணம் முடிக்க முடியும் என்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுபோன்று நிபந்தனையின்றி தலாக் கூறி விவகரத்துச் செய்யும் உரிமையும் ஆண்களுக்கு உள்ளது. அத்துடன் விவாகரத்துப் பெறுகின்ற பெண்களுக்கு எந்த விதமான தாபரிப்புச் செலவுகளும் சட்டத்தால் வேறுபடுத்திக்கொடுக்கப்படவில்லை. அண்மைக்காலத்தில் Muslim Women’s Research and Action Forum முன்வைத்த ஆலோசணையின் படி பெண்கள் விவாகரத்துப் பெறுகின்ற போது கொடுப்பனவொன்று வழங்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு நீதிச்சேவை ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியது. ஆனால் அது இன்னும் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.

பொதுச்சட்டத்திற்கும் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கும் இடையிலான வேறுபாடுகளை சற்று தெளிவுபடுத்த முடியுமா?

இலங்கையில் நான்கு தனியார் சட்டங்கள் உள்ளன. இதில் கண்டியன் சட்டம், தேசவழமைச் சட்டம் போன்றவற்றை குறிப்பிட முடியும். பொதுச்சட்டம் என்பது தநநெசயட அயசசயபைந யரனiநெnஉந என்பதாகும். இது ஆங்கிலச் சட்டத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின் படி பெண்களுக்கு திருமணம் முடிப்பதற்கு பெற்றோரின் அனுமதி தேவையில்லை. 18 வயதுக்கு பிறகு ஒரு பெண்ணின் விருப்பப்படி திருமணம் முடித்துக்கொள்ள முடியும். அதுபோன்று சர்வதேச சட்டத்தின் படி பெண்களின் திருமண வயது 16 இலிருந்து 18ஆக அதிகரிக்கப்பட்டது. விவாகரத்துச் சட்டத்தில் இருவரது விருப்பத்தின் அடிப்படையில் விவாகரத்துப் பெற முடியும் என்கின்ற விடயங்கள் உள்ளன. விவாகரத்து என்ற அடிப்படையில் பார்க்கும் போது சாதாரண சட்டத்தை விட முஸ்லிம் சட்டம் சிறந்தது. இரண்டு சட்டத்திலும் தாபரிப்பு உரிமை உள்ளது. பொதுவான சட்டத்தின் படி நீதவான் நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு செல்ல முடியும். பெண்களுக்கு நீதிமன்றங்களில் நீதிபதியாகும் உரிமை இந்தப் பொதுச்சட்டத்தில் உள்ளது. ஆனால் முஸ்லிம் சட்டத்தில் அவையொன்றுமில்லை.

சலீம் மர்சூக் தலைமையில் தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த அறிக்கை எவ்வளவு தூரம் முன்னேற்றகரமானது என நீங்கள் கருதுகின்றீர்கள்?

சலீம் மர்சூக் தலைமையில் முன்வைக்கப்பட்ட அறிக்கை மிகவும் முற்போக்கானது. ஆனால் திருமண வயது என்கின்ற விடயத்தில் 16 வயதில் திருமணம் முடிக்க இயலும் என்கின்ற விடயம் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சில விடயங்கள் முன்னேற்றகரமானதாக இல்லை என ஒரு சில பெண்கள் தெரிவிக்கின்றார்கள். எனினும் பெண்கள் முன்வைத்த பெரும்பாலான வேண்டுகோள்கள் சலீம் மர்சூக் அறிக்கையின் மூலம் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக பெண்களுக்கும் காழியாக செயற்பட முடியும் என்கின்ற உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாத்திற்கு முரணற்ற வகையிலேயே முஸ்லிம் தனியார் சட்டம் மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து 1990களிலிருந்து முன்வைக்கட்டது. இஸ்லாத்திற்கு வெளியால் நின்று தங்களுக்கான உரிமைகளை வழங்குமாறு பெண்கள் கூறவில்லை. உலக முஸ்லிம் நாடுகளில் இஸ்லாமியச் சட்டங்கள் வித்தியாசமாகவே காணப்படுகின்றன. சட்டம் இறைவனிடமிருந்து வருவதில்லை. மதத்தை வரைவிலக்கணப்படுத்தி மனிதனால் உருவாக்கப்படுபவையே சட்டங்களாகும். வரலாற்று ரீதியாக நோக்கினாலும் ஒவ்வொரு நாடுகளினதும் சமூக கலாசார பொருளதார விடயங்களில் இஸ்லாமிய சட்டங்கள் வேறுபாடுகளுக்கு உட்பட்டுள்ளன. சட்டங்கள் எந்நாளும் ஒரே அமைப்பில் இருப்பதில்லை. இஸ்லாமிய சமயம் தோன்றிய காலம் முதல் அது மனிதனின் சகல விடயங்களிலும் தாக்கம் செலுத்தியது.

ஆனால் யதார்த்தம் என்னவெனில் இஸ்லாத்தை பின்பற்றும் நாடுகளின் சட்டங்கள் குடும்பவியல், தனியார் சட்டங்கள் என்ற துறையிலேயே அதிக தாக்கம் செலுத்துகிறது என்பது. இஸ்லாமிய சட்டத்தின் படி களவெடுத்தால் கை வெட்டப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இஸ்லாமிய நாடுகளிலும் கூட அது அவ்வாறே பின்பற்றப்படுவதில்லை. இஸ்லாமிய சட்டங்கள் காலத்துக்குக் காலம் இடத்துக்கு இடம் வித்தியாசப்பட்டு வந்துள்ளன. ஆனால் பெண்கள் உரிமைகளை வேண்டுகின்ற சந்தர்ப்பத்திலேயே இது மார்க்கத்திற்கு முரணானது எனக் கூறுகின்றார்கள். மார்க்க விளக்கத்தின் அடிப்படையில் சட்டங்கள் மனிதனாலேயே உருவாக்கப்படுகின்றன. பெண்களுக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும் எனக் கூறுபவர்களுக்கு சரியான முறையில் மார்க்கம் தெரியாது. இது ஆணாதிக்க மனோபாவத்தின் அடிப்படையிலேயே நோக்குகப்படுகின்றது.

தற்பொழுது இரண்டு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில் எந்த அறிக்கை பாராளுமன்ற விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டு நிறைவேற்றப்படக் கூடிய நிலையில் உள்ளது?

இரு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டிருப்பது நீதியமைச்சுக்கு சிக்கலாய் அமைந்துள்ளது. எதற்குப் பெரும்பான்மை உள்ளது என்கின்ற பிரச்சினை எழுந்துள்ளது. சலீம் மர்சூபின் அறிக்கைக்கு நீதியமைச்சின் செயலாளர் கைச்சாத்திட்டிருக்கக் கூடாது என அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சார்பில் அறிக்கை தயாரித்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். தங்களது அறிக்கைக்கே பெரும்பான்மையினரின் ஆதரவு உள்ளதென இவர்கள் தர்க்கின்றார்கள். முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் எனப் போராடியவர்கள் பெண்களாவர். எனவே பெண்களின் கருத்துக்கள் பெறப்படாமல் இதனை நிறைவேற்ற முடியாது. சலீம் மர்சூகின் அறிக்கைக்கே அதிகமான பெண்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

முஸ்லிம் பெண்களும் இந்நாட்டின் பிரஜைகள். சமத்துவம், வேறுபாடின்மை போன்ற விடயங்களை ஒரு சமூகத்தின் பெண்கள் தரப்பு வேண்டும் பட்சத்தில் அதனை அந்தச் சமூகத்தின் ஆண்தரப்பு மூடி மறைப்பதாக இருந்தால் இந்தக் கட்டத்தில் அரசாங்கத்தின் வகிபங்கு எப்படி இருக்க வேண்டும்? இன்று அதிகமான முஸ்லிம் பெண்கள் பல்கலைக்கழகங்களில் கற்கின்றார்கள். சட்டத்தரணிகளாகின்றனர். உயர் பதவிகளை வகிக்கின்றானர். நீதிபதிகளாகவும் உள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஒரு முஸ்லிம் பெண் உயர் பதவியில் இருந்து வருகின்றார். இவர் சுப்ரீம் கோட்டிற்கு செல்லும் நிலையும் உள்ளது. இப்படி முஸ்லிம் பெண்கள் முன்வருவதையே இவர்கள் இப்படித் தடுத்து வருகின்றார்கள். கடந்த வருடம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 25 வீத பெண் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டது. இதன் மூலம் முஸ்லிம் பெண்கள் உள்ளுராட்சி மன்றங்களிலும் பிரதிநிதித்துவம் செய்கின்றனர். எனவே முஸ்லிம் பெண்களுக்கு காதி நீதிமன்றத்தில் பதவி வகிக்க முடியாது எனக் கூறுவது மிகவும் அநீதியானது. இது நகைப்புக்குரிய விடயம்.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் எத்தகைய பகுதிகள் சீர்திருத்தப்பட வேண்டும் எனக் கருதுகின்றீர்கள்?

குறைந்த பட்சம் சலீம் மர்சூபினால் முன்வைக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களுக்கு அமைய முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் இடம்பெற வேண்டும்.

அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள விடயங்களுக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளனவா?


இலங்கை அரசியலமைப்பின் 12ஆவது பந்தியின் படி ஆண், பெண் சமத்துவம் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் 1978இல் அரசியலமைப்பு உருவாக்கப்படுகின்ற போது பாகுபாட்டுச் சட்டம் காணப்படுமாக இருந்தால் அவை இருக்க முடியும் என்று அரசியலமைப்பிலேயே கூறப்பட்டுள்ளது. இதுவே பிரச்சினை. இது பெண்களுக்கு அநீதியான சட்டம் என்பதால் சுப்ரீட் கோட்டிற்கு சென்று இதனை சவாலுக்கு உட்படுத்த முடியாது. ஆனால் இது பாராளுமன்ற சட்ட மூலமாக கொண்டுவர முடியும். புதிய அரசியலமைப்பில் இந்தப் பந்தி நீக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்பின் கீழ் அரசியலரமைப்புக்கு எதிரான சட்டங்களை நீதிமன்றத்தின் மூலம் சவாலுக்கு உட்படுத்தும் உரிமை எமக்கிருக்க வேண்டும். ஆனால் இதற்கும் பெரும்பாலான முஸ்லிமான ஆண்கள் எதிராக நிற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

8 comments:

  1. All you idiots, please follow the law & orders from Al-Quraan very simply, this is the Law only created for Human by the LORD Allah (The CREATOR)
    All other issues are nonsense

    ReplyDelete
  2. Your opinion is correct
    For your self.but Muslim ummah we have to follow wich is Quran n hadees and scholars guideway.
    We don't need your advice at all.
    Islam has give good way to follow entire humankind.

    ReplyDelete
  3. ஒரு காபிர் இஸ்லாமிய சட்டம் பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது. இந்தம்மாவுக்கு இஸ்லாமிய எந்த சட்ட வரையறைகளும் தெரியாது. ஸலீம் மர்சூப் என்பர் முஸ்லிம் தனியார் சட்ட சீர்திருத்தத்தில் இருந்து தூக்கி எறிய வேண்டியவர். இவர் ஒரு சடவாதி. இவருக்கு ஷீஆ சட்டம் பற்றி எந்த அறிவும் அனுபவமும் இல்லை

    ReplyDelete
  4. What this lady said in her last sentence is correct that is majority of Muslim males would object. True to her observation Muslim males are irrationally against it and uttering racial slurs such as Kafir etc.
    This law affects Muslim women and their input is absolutely necessary before any final decision.
    In most of the western nations, Toronto for example, bride signs the documents along with the groom at weddings conducted by Muslim registrar. Will the millions of Muslims living here ready to leave and go back to countries where they came from because the so called "wally" system not followed?

    ReplyDelete
  5. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று பிடிவாதம் பிடிப்பவர்களிடம் பேசி பயனில்லை மேடம். தமது உண்மையான பெயரைக்கூட குறிப்பிட முடியாதவர்கள் கருத்துச்செல்லும் போது முழுப்பெயரையும் கூறி விலாசத்தையும் கூறி படத்தையும் போட்டு பேட்டி கொடுக்கும் நீங்கள் எவ்வளவு மேல். நீங்கள் கூறியது சரி முஸ்லீம் தனியார் சட்டமானது மார்க்க அறிவு மட்டுப்படுத்தப்பட்டிருந்த சிலரால் உருவாக்கப்பட்டிருக்கின்றது அதனால் தான் முழுக்க முழுக்க அச்சட்டத்தில் ஆணாதிக்கம் பரவிக்கிடக்கின்றது. பெண்கள் உரிமை என்பது ஒருபக்கமிருக்க அவர்களை மனிதர்களாகவேனும் கணக்கெடுக்கப்பட்டதாக புரியவில்லை. இதைச் சொன்னால் கோபம் பொத்துக்கொண்டு வருகின்றது. உண்யைான பெயரைக்கூட போட்டுக்கொள்ள அச்சமுள்ளவரகள் இஸ்லாத்திற்காக போராடப்புறப்பட்டு விட்டார்கள். முதலில் நாகரீகமாக பேச எழுத பயிற்றுவிக்காத மாரக்கம் யாருக்கத்தேவை.

    ReplyDelete
  6. Muslim is Muslim only if he follows Islam. Muslim Law is called Muslim Law only if it is Muslim Law. If it is something else and decided by other people and ideologies cantrarily to Islamic law why should we call it Muslim Law.

    We keep shut even though your law causes injustice. Sex is a right to have when reached puberty. Law cannot change or control nature. Even as exceptional cases you must permit nature's law. Otherwise rule will remain a rule and people will be abused by people breaching the laws and rules. No use in filing case after things happened.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. بسم الله الرحمن الرحيم இவங்க சொல்கின்ற இந்த கருத்து மிகவும் தவறானது ஏனென்றால் திருமண வயதை அடைந்த ஒரு பெண் வலி அதாவது பொறுப்பாளர் இல்லாமல் திருமணம் முடிப்பது மிகவும் தவறானது ஏனென்றால் வலி இல்லாமல் திருமணம் முடித்த பிறகு கணவன் மோசமானவர் போதை பொருளுக்கு அடிமையானவர் என்றால் என்ன செய்வது அந்தப்பெண் வலிகாரர்இருந்தால் ஒரு நல்ல ஆணை தேர்ந்தெடுப்பார்கள்

    ReplyDelete

Powered by Blogger.