Header Ads



பலகத்துறையில் இலவச, கண் சத்திரசிகிச்சை முகாம் (படங்கள்)


-எம்.ஜே.எம். தாஜுதீன்-

கண்ணிலேற்படும் " வெள்ளை படர்தல் - “கெட்ரக்ட்" நோய்க்கான சத்திர  சிகிச்சை முகாம் ஒன்றை போருதொட்ட அபிவிருத்தி மன்றம் ( PDF ) ஏற்பாடு செய்துள்ளது.

“மேர்சி லங்கா”  நிறுவனத்தின் அனுசரணையில் முற்றிலும் இலவசமாக நடைபெறவுள்ள இந்த சத்திர சிகிச்சைக்காக  நோயாளிகளைத் தெரிவு செய்யும் நிகழ்வு -  (cataract screening program) வியாளக்கிழமை (23) காலை பலகத்துறை ரஸ்னா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இது தொடர்பாக நடைபெற்ற வைபவத்திற்கு போருதொட்ட அபிவிருத்தி மன்றத்தலைவர் டாக்டர் ஏ.எல். லியாவுதீன் தலைம வகித்தோடு நோயாளிகளையும் பரிசோதனை செய்தார்.

மதுரங்குளியில் இயங்கும் “மேர்சி லங்கா” நிறுவனத்தின் பணிப்பாளரும் திட்ட முகாமையாளருமான அஷ்ஷேக் முனாஸ் ( நளீமி) அவர்கள் உட்பட மற்றும் பலர் உரையாற்றினர்.

இன்றைய பரிசோதனையில் 29 பேர் சத்திர சிகிச்சைக்குத் தெரிவு செய்யப்பட்டனர்.

மற்றுமொரு வைத்தியப் பரிசோதனையின் பின்னர் இவர்களுக்கான சத்திர சிகிச்சை முற்றிலும் இலவசமாக வத்தளை ஹேமாஸ் ஆஸ்பத்திரியில் (Hemas Hospital) இல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





No comments

Powered by Blogger.