Header Ads



பார்சிலோனா செல்லும் அணியில், கிண்ணியா மாணவன் கதீம்


சுட்டி வீரன் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி கே. எம்.கதீம், பார்சிலோனா செல்லும் உதைப்பந்தாட்ட அணிக்கு தெரிவாகியுள்ளார்.

பார்சிலோனாவில் நடைபெறவுள்ள 12 வயது பிரிவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் விளை யாடுவதற்காக கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி மாணவன் கே. எம்.கதீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அகில இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம் மேளனமும் கல்வி அமைச்சும் இணைந்து நடாத்திய 2018 ஆண் டுக்கான Road To Barcelona (பார்சிலோ னாவுக்கு அழைத்துச் செல்லல்) 12 வயதுப் பிரிவின் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியில் கிண்ணியா அல் அக்ஸா கல்லூரி சம்பியனாகத் தெரிவு செய்யப் பட்டது.

இந்த தொடரில் அல் அக்ஸா கல்லூரி அணி சந்தித்த அனைத்து போட் டிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக் காட்டிய இவர், இலங்கையில் இருந்து பார்சிலோனாவுக்குச் செல்கின்ற ஆறு மாணவர்களில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்ப டுத்தும் ஒருவராக இருக்கின்றமை . குறிப்பிடத்தக்கது.

4 comments:

Powered by Blogger.