August 25, 2018

முஸ்லிம்களிடம் ஆயுதம் இருப்பதாக பொய் கூறிய, இன்பராசாவுக்கு, வந்து விட்டது ஆப்பு

-சட்டத்தரணி சறூக் -

2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் நீதான் சர்வதேச உடன் பாட்டொழுங்கு சட்டம்(International Covenant on Civil and Political Rights(ICCPR) Act) த்தின் பிரிவு 3 (1) படி “ஆளெவரும்போரை பரப்புதலோ அல்லதுபாரபட்சத்தை,எதிர்ப்புணர்ச்சியை அல்லது வன்முறையை தூண்டுவதாக அமையும் தேசிய , இன அல்லது மத ரீதியிலான பகைமையை ஆதரித்தலாகாது.

(2).மேலே கூறப்பட்ட தவறொன்றை
அ. புரிவதற்கு எத்தனிக்கும்
ஆ.அதனை புரிவதில் உதவிபுரியும் அல்லது உடந்தயாயிருக்கும் அல்லது
இ. புரியப்போவதாக அச்சுறுத்துகின்ற
ஆளொருவருக்கு 10 ஆண்டுகளுக்கு விஞ்சாத காலத்திற்கு கடூழிய சிறைத்தண்டணைக்குட்படுத்தலாம். இவருக்கு பிணை கூட மேல் நீதிமன்றம் விதிவிலக்கான சந்தர்ப்பத்தில் மாத்திரம் வழங்கும்.

இந்த கருத்தினூடாக இன்பராசா 30 வருட போரினால் நழிவடைந்திருக்கும் தமிழ் மக்கள் அனைவரையும் முஸ்லீம்களின் மீது எதிர்ப்புணர்வை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளார்.இது அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான முஸ்திப்பாக இருக்கலாம்.

ஆனால் மேலே விபரித்த ICCPR சட்டத்தின் கீழ் இரு சமூகங்களுக்கிடையே எதிர்ப்புணர்வை ஏற்படுத்திய குற்றத்தை புரிந்தமைக்காக அவருக்கெதிராக வழக்கு தொடர  வழிவகுத்துள்ளது.

எனவே இப்படியானவர்கள் இரு இனங்களுக்கிடையில் இனவாத்தை மூலதனமாக்கி எதிர்காலத்தில் அரசியல் செய்வதற்கு முனைவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

எனவே ஒவ்வொரு ஊரிலுள்ள சமூகப்பற்றுள்ள ஒவ்வொரு முஸ்லிம்களும் இன்பராசாவின் விலாசத்தைப்பெற்று ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் ஒரு முறைப்பாட்டை செய்யலாம்.

"அவரின் பேட்டி எவ்வாறு உங்களை பாதித்த து "என பொலிசார் உங்களிடம் கேட்கலாம். "அவர் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினையும் பாதிக்கும் வகையில் பேசியுள்ளார் அந்த சமூகத்தின் ஒரு உறுப்பினர் நான்"எனக்கூறி அவர்பேசிய வீடியோவை காட்டவும்.கட்டாயம் பொலிஸ் முறைப்பாட்டை எடுத்து இன்பராசாவை அழைத்து அவரின் வாக்கு மூலத்தை எடுத்து விட்டு நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவர்.

இப்படியாக நாட்டிலுள்ள ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திலும் ஒவ்வொரு முறைபாடு போட்டு குறைந்தது 100 முறைப்பாடுகளை போட்டால் போதும் அங்குமிங்கும் பொலிஸ் நிலையத்திற்கும் ஜெயிலுக்கும் அலைந்து இன்பராசா துன்பராசா ஆகிடுவார்.

குறிப்பு : எமது அரசியல்வாதிகளே நீங்கள் இதனை ஜனாதிபதிக்கோ பிரதமருக்கோ அறிவிப்பதால் அவர்கள் முஸ்லிம் சமூகம் சார்பாக பொலிஸில் என்றி போடப்போவதில்லை.

(இன்பராசாவின் address கிடைக்கும் வரை இதனை share பண்ணிக்கொண்டே இருங்கள்)
சட்டத்தரணி சறூக் -கொழும்பு 0771884448

5 கருத்துரைகள்:

இந்த முறைப்பாட்டை Police நிலைத்தில் செய்வது
ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு சமூகக்கடமை எனக்கருதி செய்தல் வேண்டும்.
தனியாக முறையிடுவது சங்கடமெனின் குழுக்களா க இணைந்து சட்டத்தரணிகள் உதவியோடு முறைப்பாட்டை தயாரித்து ஒப்படைக்கலாம்.

நுனலும் தன் வாயால் கெடும் என்ற உதாரணம் சகோதர இன்பராசாவுக்கு பழித்துவிடும் போல

இவரது விலாசம் தெரிந்தவர்கள் பதிவிடவும்

இவனை விட இஸ்லாத்தை முஸ்லிம்களை கேவலமாக கதைத்தவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக பாரிய கலவரங்களை தூண்டியவர்கள் இந்நாட்டில் இப்போதும் உயிருடன்தான் உள்ளனர் அவர்களுக்கெதிராக இந்த அரசாங்கம் காவல்துறை நீதிமன்றங்கள் எதை சாதித்தது
அவர்களுக்கு என்ன தண்டனை பெற்றுக்கொடுக்கப்பட்டது எல்லாம் பூச்சியம்தான்
முஸ்லிம் சமூகத்திற்கெதிராக எதிர்காலத்தில் பாரிய இனவழிப்புகள் ஏற்படலாம்.அதற்கான வேலைதிட்டங்களை இனவாதிகள் ஆரம்பித்திருக்கின்றனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது எதுவாக இருந்தாலும் அநீதியாளர்களிடம் நீதியை எதிர்பார்க்காமல் அனைத்து விதமான பிரச்சினைகளையும் எதிர்கொள்வதற்கு இஸ்லாமிய சமூகம் தனது வேறுபாடுகளை களைந்து தயாராக வேண்டும்.

Post a Comment