Header Ads



மலாயர்களையும், மேமன்களையும் காணவில்லை - முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட சதி - ரிஷாட்

மாகா­ண­சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணயம் பல முரண்­பா­டான விட­யங்­களை  உள்­ள­டக்­கி­யி­ருக்­கி­றது. எல்லை நிர்­ண­யத்தில் முஸ்­லிம்­களை இலங்கை சோனகர் என்று கணித்­தி­ருப்­பதால் உள்­வாங்­கப்­ப­ட­வேண்­டிய முஸ்­லிம்­க­ளா­கிய மலாயர், மேமன் என்போர்  கணிப்­புக்குள் உள்­வாங்­கப்­ப­ட­வில்லை. இது முஸ்­லிம்­களின் பிர­தி­நி­தித்­து­வத்தைக் குறைப்­ப­தற்கு திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்­ட­தாகும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும், கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

மாகாண சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணயம் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், 

"இன­ரீ­தி­யான கணக்­கெ­டுப்பில் தமி­ழர்கள் இலங்கைத் தமி­ழர்கள், இந்­தியர் தமிழர் என பிரித்­துக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அதே­நேரம் சிங்­க­ள­வர்கள் கரை­யோரச் சிங்­க­ள­வர்கள் என்றோ கண்டிச் சிங்­க­ளவர் என்றோ பிரித்­துக்­காட்­டப்­ப­ட­வில்லை. தனி சிங்­க­ளவர் என்றே கணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள். ஆனால், முஸ்­லிம்­களை  இலங்கைச் சோனகர் என்று கணித்­தி­ருப்­பதால் மலாயர், மேமன் முஸ்­லிம்கள் உள்­வாங்­கப்­ப­டாமை ஒரு முரண்­பா­டான விட­ய­மாகும்.

கொழும்பு மாவட்­டத்தில் இலங்கைச் சோனகர் 2,49,609 என்றும் இஸ்­லா­மியர் 2,74,087 என்றும் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும் நிலையில், மாவட்ட ரீதி­யான அங்­கத்­த­வர்­க­ளுக்­கான கணக்­கெ­டுப்­பின்­போது 2,49,609 என்ற சனத்­தொ­கையே உள்­வாங்­கப்­பட்­டுள்­ளது. இதன்­மூலம் முஸ்­லிம்­களின்  எண்­ணிக்கை சுமார் 25,000 தால் குறைத்துக் காட்­டப்­பட்­டுள்­ளது. மாகா­ண­சபை எல்லை நிர்­ணய அறிக்­கை­யின்­படி எல்லா மாகா­ணங்­க­ளிலும் இதே நிலையே காணப்­ப­டு­கி­றது.

இந்த புதிய மாகாண தேர்தல் தொகுதி முறை­மையை நாம் வன்­மை­யாக எதிர்க்­கிறோம். இந்த எல்லை நிர்­ணயம் தெளி­வில்­லாமல் இருக்­கி­றது. புதிய முறை­யி­லான மாகாண சபைத் தேர்­தலை சிறு­பான்மை கட்­சிகள் அனைத்தும் சில பெரும்­பான்மைக் கட்­சி­களும் எதிர்க்­கின்­றன. பழை­ய­மு­றை­யி­லேயே தேர்தல் நடத்­தப்­பட்ட வேண்­டு­மென்று உறு­தி­யாக  நிற்­கின்­றன.

மாகாண சபைத் தேர்தல் மேலும் காலம் தாழ்த்தப்படக்கூடாது. பழைய விகிதாசார முறையில் அவசரமாக தேர்தல் நடத்தப்படவேண்டும். எமது நிலைப்பாட்டினை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் விளக்கியிருக்கிறோம்" என்றார்.

-Vidivelli

No comments

Powered by Blogger.