Header Ads



இலங்கையிலுள்ள ஆதிவாசிகள், மேற்கொண்டுள்ள தீர்மானம்

எதிர்காலத்தில் உலக பழங்குடியினர் தினத்தை கொண்டாடப் போவதில்லை எனவும் அதற்கு செலவாகும் தொகையை கிராமத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த போவதாகவும் இலங்கையின் ஆதிவாசிகளின் தலைவர் விஸ்வகீர்த்தி, வனஸ்பதி வன்னிலா எத்தோ தெரிவித்துள்ளார்.

தமன, கொட்டபக்கினிய கிராமத்தில் இன்று நடைபெற்ற உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் அரச நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

13 கூட்டங்களை நடத்தி, ஆதிவாசிகளின் பிரச்சினைகள் தொடர்பான மனுவை அரசாங்கத்திடம் வழங்கியுள்ளோம். எனினும் பல ஆதிவாசிகளின் கிராமங்களது பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.

இனிவரும் காலங்களின் ஆதிவாசிகள் தினத்தை கொண்டாடப் போவதில்லை. அதற்கு செலவிடப்படும் பணத்தை கிராமத்தின் பிரதான பிரச்சினைகள் மற்றும் கல்வியை மேம்படுத்த செலவிட நான் தீர்மானித்துள்ளேன்.

ஆறு வருடங்கள் செல்லும் போது ஆறு ஆதிவாசி கிராமங்களின் பிரச்சினைகளை தீர்க்கலாம். எங்களது பரம்பரை கலாசாரத்தை பாதுகாக்க வேண்டுமாயின் எமது ஆதிவாசிகள் பட்டினியை போக்க வேண்டும்.

அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். அரசாங்கம் கூடிய பங்களிப்பை வழங்கினால், அது மிகவும் முக்கியம் என வன்னிலா எத்தோ கூறியுள்ளார்

2 comments:

  1. ஆதி வாசிகளின் அசல் தாயகமான சுவனபதிக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லும் சுந்தர  மார்க்கத்தையும் அதைச்  சுமந்துகொண்டு இருப்போர் சொல்லக் கடமைப்பட்டு உள்ளார்கள்:

    "ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்;

    நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு;

    மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்."

    (அல்குர்ஆன் : 7:27)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. அதென்ன ஆதி வாசி அந்தம் வாசி ? சக மனிதர்களை போல் வாழ வேண்டியதுதானே!

    ReplyDelete

Powered by Blogger.