August 16, 2018

நுஸ்ரான் பின்னூரியின் வைத்தியத்தினால், ஏமாற்றமடைந்த ஒரு தந்தையின் வேதனை

-தகவல் மூலம், மீள்பார்வை-

பாதிக்கப்பட்ட சம்பவம்

பெயர் குறிப்பிட விரும்பாத தந்தை

மகனுக்கு நான்கு வயதிருக்கும். பிறந்தது முதல் மகன் காலில் ஓர் உபாதை. மகனைக் குணப்படுத்தும் முயற்சியில் பல வைத்தியர்களையும் நாடிச் சென்றேன். தற்காலிக பலன் தவிர பூரண குணம் கிட்டவில்லை. இனிமேலும் வைத்தியம் செய்வதில் பயனில்லை என்று விரக்தியில் இருந்த சமயம்,

இஸ்லாமிய மருத்துவர் ஒருவர் கொழும்பில் இருப்பதாகவும் அவரை நாடினால் சில தினங்களிலேயே பலன் கிட்டும் என்பதாகவும் ஒரு செய்தி கிடைத்தது. கொழும்பில் இயங்கிவரும் Raha Natural Herb வைத்திய நிலையத்திற்கு மகனை அழைத்துச் சென்றேன்.

அவ்வைத்திய நிலையத்தில் ஒரு படிவம் வழங்கப்பட்டது. படிவம் பூரணப்படுத்திக் கொடுக்க, பதிவுக்கட்டணமும் அறிவிடப்பட்டு வைத்தியரைப் பார்க்க அழைத்தும் செல்லப்பட்டேன்.

வெள்ளை ஜுப்பா தலையில் தொப்பி அணிந்த ஒருவர் மகனின் நாடியைப்பிடித்து பரிசோதித்தார். மகனுக்கு ஒன்றும் உபாதைகள் இல்லை ரூஹானியத் சம்பந்தப்பட்ட கோளாரென்று மாத்திரமே காணமுடிகிறது. ஒரு தாயத்து தருகிறோம் மகனின் இடுப்பில் கட்டிவிடுங்கள். கவுண்டரில் ஒரு காகிதக் கூண்டு தருவார்கள் அதில் உள்ளவற்றை செய்து கொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் குணம் கிடைக்கும் என உருது மொழியில் சொல்ல அடுத்தவர் அதனை மொழிபெயர்த்துச் சொன்னார்.

கவுண்டரில் அந்த காகித கூண்டைப் பெற 9000.00 ரூபா அறவிடப்பட்டது. வீட்டிற்கு சென்று பார்த்தால் காகிதத்தில் ‘யா முமீத்’ என ஒரு நாளைக்கு 8000 வீதம் ஏழு நாட்கள் ஓதவும் என அதில் எழுதப்பட்டிருந்தது.


4 கருத்துரைகள்:

இது போன்ற பயங்கரவாதி,ஏமாற்றுக்காரன்,பொய்யனை இந்த சமூகத்தில் அவனுடைய போக்கிலேயே விட்டுவைப்பதுதான் இந்த சமூகம் செய்யும் பாரதூரமான குற்றமாகும். இவனைச்சரியான முறையில் சட்டத்தின் முன் நிறுத்தி அவனைத்தண்டிக்கஇ்நத நாட்டின் சட்டத்துக்கு உறுதுணையாக இருப்பது பரளு கிபாயாவாகும் என்பதைக் கூறிவைக்க விரும்புகிறேன். ஏற்கன வே பலதடவை டாக்டர் ரயீஸ் அவரகள் இவனுடைய பைத்தியத்தினால் பாதிப்படைந்து வாழ்நாள் முழுக்க கஷ்டமும் துன்பமும் பட்டுக் கொண்டிருக்கும் பல பெற்றோர்களின் துன்பமும் சோகமும் நிறைந்த கதைகளைக் கூறியும் இந்த சமூகம் வாழாவிருப்பது மிகவும் பாரதுரமான குற்றமாகும். எனவே இதற்குரிய சட்டரீதியான முன்னெடுப்புகளை எடுக்க இந்தஇணையத்தளமும் சமுகத்தின் முக்கிய பதவி வகிப்பவர்களும் ஆவன செய்து வேண்டும் என பணிவாக வேண்டிக் கொள்கின்றேன்.

Mr Professional Translation service,சமூகத் தலைவர்களும் முப்fதீக்களும் இடுப்பில் தகடு தாயத்களைக் கட்டிக்கொண்டு இவன் போண்டவர்களின் காலில் விழும்போது நீங்கள் சொல்வதெல்லாம் எஙகே நடக்கப் போவுது

இறைவன் எந்த நோயையும் அதற்க்கு மருந்தை இறக்காமல் அனுப்புவதில்லை

இதில் ஆங்கில மருந்து என இலங்கையர்கள் அறியாமையால் அழைக்கும் மருந்தும் அல்லாஹ் எமக்கு அருளிய மருந்துகள் தான்

ஜரோப்பாவை துருக்கி வல்லரசு ஆட்ச்சி செய்த காலத்துக்கு முன்னரே பல்லாயிரம் இஸ்லாமிய மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்த மருத்துவமே தற்போது இலங்கையர்கள் ஆங்கில மருந்து என அறியாமல் அழைக்கும் சத்திர சிகிச்சை உட்பட மேற் கொள்ளப்பாடும் மருத்துகளும் மருத்துவமும் ஆகும்

இஸ்லாமிய விஞ்ஞானிகள் ஆங்கிலேயேருக்கு அறிமுகம் செய்த மருத்துவமே அவை

அதை தூக்கி எறிந்து விட்டு இப்படி இஸ்லாத்தில் இல்லாத ஒரு போலி வைத்தியத்தை நம்பி ஏமாற வேண்டாம்

போலிகளை போதிப்பது ஷியா மதத்தவர்கள்தான்
இவர்களையும் அவர்களின் இப்படியான போலி வைத்திய முறைகளையும் யாரும் நம்பி ஏமாற வேண்டாம்

ஏதோ காகிதத்தில் யாமுமீத் என 7000 தடவை என குறிப்பிடப்பட்டுள்ளது ஆனால் செய்தியில் 8000 என குறிப்பிட்டுள்ளார் செய்தியாளர். ஆக 9000/- ரூபா எனப்படும் பெறுமானம் என்பது 900/- ரூபா வைத்தான் செய்தியாளர் குறிப்பிட்டுள்ளாரோ?

சகோதரர் PTS கண்டவாறு திட்டித்தீர்த்துள்ளார். சகோதரா ஒன்றை நீர் விளங்கும் கொள்ள வேண்டும், International School Term Fees ஒரு பிள்ளைக்கு 25000/- செலுத்தும் எமது முஸ்லிம் சகோதர பெற்றோர் குர்ஆன் மதரசாவுக்கு ஒரு பிள்ளைக்கு ஒரு மாதத்திற்கு ரூபா 400/- என கட்டணம் விதிக்கப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் எங்களது 3 பிள்ளைகள் ஒதுகிறார்கள் நாங்கள் மூவருக்கும் 1200/- கட்ட முடியாது மூவருக்கும் பொதுவாக 500/- ரூபா தான் செலுத்துவோம் என அடம்பிடித்து அதைத்தான் நிர்வாகமும் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் எம் சமூகம் இன்று உள்ளது.

அந்த வகையில் பார்க்கும் போது, Private hospital இல் 90000/- ஆயிரங்கள் செலவு செய்து உயிர் போனாலும் பரவாயில்லை எம்மோர் அதை மையத்து வீட்டில் கூறி பெருமையடிப்பார்கள் அது உம்மைப் போன்றோருக்கு திருப்தியாக இருக்கும், ஆனால் எப்பேர்ப்பட்ட நோயையும் குணப்படுத்தக்கூடிய வளிமுறைகளை கூறும் குர்ஆன் வசனங்களை ஓதும்படி கூறினால், ஏக இறைவனாம் அந்த அல்லாஹ்வின் 99 திருநாமங்களில் ஒன்றான "யாமுமீது " என கூறும்படி கூறினால் உம்மைப் போன்றோருக்கு கடுப்பாகிறது

நான்கு ஐந்து வருடங்கள் சொந்தப் பணத்தை செயவு செய்து கஷ்டப்பட்டு குர்ஆனை இஸ்லாத்தை மணணமிட்டு படித்து பட்டம் பெற்ற எமது மெளளலவி மார் சொற்ப பணம் அறவிட்டால் உம்மைப் போன்றோருக்கு பிடிக்காது, பொது மக்கள் பணத்தில் நாலு english மாத்திரைகளைப் பற்றி படித்து விட்டு, ஏழை எழியவர்களைப் பற்றி கவலைப்படாத வெட்கம் கெட்ட ஒரு சமூகம் ஆயிரக்கணக்கில் என்ன இலட்சக்கணக்கில் வாங்கினாலும் உமக்கு சந்தோசம் வெட்டமில்லையா? கண்டவாறு comments எழுதுவது சேவலமாக தெரியவில்லையா?

Post a Comment