Header Ads



பாராளுமன்றத்தில் பெரும், குழப்பம் ஏற்படும் அபாயம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்குமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் சபாநாயகர், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மஹிந்த அமரவீரவிடம் விடயங்களைக் கோரியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோரி ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கடந்த 30 ஆம் திகதி 70 உறுப்பினர்களின் கையெழுத்துடன் சபாநாயகரிடம் கடிதம் ஒன்றைக் கையளித்தது.

இந்நிலையில், எதிர்க்கட்சி பதவி தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை முன்வைக்குமாறு சபாநாயகர் தமக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இன்று அரசாங்கத்துடன் உள்ளது. அவ்வாறு இருந்து கொண்டு எதிர்க்கட்சித்தலைவர் பதவியை வகிக்க எங்களுக்கு உரிமையில்லை. தற்போதுள்ள எதிர்க்கட்சித்தலைவர் அந்த செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வார் என மஹிந்த அமரவீர குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் சபாநாயகருக்கு கடிதம் எழுதுவதை விடுத்து, கூட்டமைப்பு அரசாங்கத்திலிருந்து விலகுவதாகக் கடிதம் அனுப்புமாறு மஹிந்த அமரவீரவிற்கு கூறிக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.