Header Ads



தொலைபேசி ஒட்டுகேட்க வேண்டியவர்களின், பட்டியலில் ஹக்கீம்

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கம், தனது இறுதி காலத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது எதிர் கட்சியினரை மட்டுமல்லாது, அரசாங்கத்தை விமர்சிப்போரின் அலைபேசி அழைப்புகளை ஒட்டுக்கேட்க ஆரம்பித்துள்ளதாக, ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

இதனிடையே ஒட்டுகேட்கப்பட வேண்டியவர்களின் பட்டியலில், அமைச்சர் ரவுப் ஹக்கீமின் அலைபேசி அழைப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் இன்று -08- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த, டலஸ் அழகப்பெரும எம்.பி தெரிவித்தார்.

இவ்வாறு அலைபேசி அழைப்புகளை இரகசியமாக ஒட்டுக்கேட்பதற்கான பொலிஸ் குழுவொன்றை அரசாங்கம் கொழும்பு - நுகேகொடவில் ஸ்தாபித்துள்ளதாகவும், இதற்கான விசேட தொழிநுட்ப கருவிகளும் ஜப்பானிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. மனிதனுக்கு இத்தகைய ஆற்றலைக் கொடுத்திருக்கும் ஏக இறைவனாகிய அல்லாஹ், தனது ஆற்றல் பற்றி இங்கு இவ்வாறு பேசுகின்றான்:

    "எனினும் நிராகரிப்பவர்கள்:
    “(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது” என்று கூறுகிறார்கள்;

    அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்;

    அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது;

    இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று (நபியே நீர்) கூறுவீராக."

    (அல்குர்ஆன் : 34:3)
    www.tamililquran.com

    ReplyDelete
  2. This guy Hakeem may have already started negotiating with Joint opposition group with regard to number of ministerial posts they want when they join their future government. These so called Muslim leaders would never negotiate about problems pertaining to Muslim community.

    ReplyDelete

Powered by Blogger.