August 17, 2018

துருக்கி மீதான அமெரிக்காவின், பொருளாதார சதிப் புரட்சி - பின்னனியும், எதிர்காலமும்

-றிஸான் சுபைதீன் (நளீமி)

வொஷிங்டன் மற்றும் அங்காராவிற்கு இடையிலான உறவு சீர் செய்ய முடியாத அளவு விரிசலைடந்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

துருக்கியிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம், இரும்பு பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து  துருக்கியின் நாணய அலகான லீரா என்றும் இல்லாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது. 

துருக்கி மீதான இன்னும் பல தடைகள் விதிப்பதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பிலும் டிரம்ப் நிர்வாகம் ஆராய்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் துருக்கி மீதான பொருளாதார சதிப் புரட்சி என துருக்கி ஜனாதிபதி வர்ணித்துள்ளார்.

முரண்பாட்டிற்கான பின்னணி

அங்காரா மற்றும் வொஷிங்டனுக்கிடையிலான இம்முறுகல் நிலை திடீரென ஏற்பட்ட ஒன்றல்ல. நீண்ட பல சம்பவங்கள் இதற்கான பாதையை ஏற்படுத்தியுள்ளன.

பாஸ்டர் புருன்சன் எனும் அமெரிக்க மதகுரு பயங்காரவாத குற்றச்சாட்டின் பெயரில் துருக்கியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 2016ல் நடந்த சதிப்புரட்சியுடன் தொடர்பு கொண்டிருந்தமை, குர்திஸ் விடுதலை போராளிகளுடனான தொடர்பு போன்ற குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என மிரட்டும் பெரிய அண்ணன் தோரணையில் அமெரிக்கா உத்தரவிட்டிருந்தது. இதனை துருக்கி காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இதுவே முரண்பாட்டின் உச்ச நிலைக்கான உடனடிக் காரணியாகும். 

அத்தோடு  சேர்ந்தாற்போல் சிரியா தொடர்பிலான கொள்கை முரண்பாடுகள், துருக்கிக்கு வழங்க வேண்டிய F-35 விமானங்களை அமெரிக்கா வழங்காமல் நிறுத்தியமை, ரஷ்யாவுடன் துருக்கி ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தங்கள், அமெரிக்கா பிரஜைகள் இருவரின் சொத்துக்களை துருக்கி முடக்கியுள்ளமை, பத்ஹுல்லாஹ் கோலானை துருக்கியிடம் ஒப்படைக்க மறுத்தமை என பல முரண்பாடுகள் இரு நாட்டு உறவும் சீர் குலைவதற்கு காரணங்களாக அமைந்துள்ளன.

முரண்பாட்டின் விளைவு

அமெரிக்கா துருக்கியின் இறக்குமதி பொருட்களுக்கான வரியை உயர்த்தியதை அடுத்து லீரா பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்கா டொரலரிற்கான லீராவின் பெறுமதி 7.24 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வீழ்ச்சியானது நாட்டின் பணவீக்கத்தை ஏற்படுத்துவதோடு பொருட்களுக்கான விலையும் அதிகரித்துள்ளது. நாட்டின் பணவீக்கம் 15 வீதத்தால் அதிகரித்துள்ளதாக பொருளியல் நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவிற்கான துருக்கியின் பதிலடி


துருக்கியின் இறக்குமதி பொருட்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டதனை தொடர்ந்து துருக்கிய ஜனாதிபதி அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பிரயாணக் கார்கள், மதுபானம், புகையிலை உற்பத்திகள் போன்றவற்றிற்கான வரிகள் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் அழகுசாதனப் பொருட்கள், அரிசி, நிலக்கரி போன்றவற்னிற்குமான வரிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

 ஐ போன் உட்பட எலக்ட்ரோணிக் உற்பத்திகளுக்குமான தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கான இறக்குமதி தீர்வையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க உற்பத்திகளுக்கு பதிலாக மாற்று உற்பத்திகளை பயன்படுத்துமாறும் அவர்களின் உற்பத்திகளை பகிஷ்கரிக்குமாறும் அர்தூகான் மக்களை வேண்டிக் கொண்டுள்ளார்.

நெருக்கடியை கையாள்வதற்கான துருக்கியின் திட்டங்கள்

துருக்கியின் பொருளாதார நெருக்கடியை ஓரளவு ஈடு செய்யும் முகமாக துருக்கியில் 18 பில்லியன் டொலர் பெறுமதியான முதலீடுகளை கட்டார் மேற்கொள்ளும் என மன்னர் தமீம் அல் தானி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து லீராவின் பெறுதி ஓரளவு ஸ்தீரத் தன்மையை அடைந்துள்ளது. அதாவது டொலரிற்கான பெறுமதி 5.80 லீராவாக குறைவடைந்துள்ளது. இது விரைவான வளர்ச்சியாக நோக்கப்படுகின்றது.

லீராவின் பெறுமதி வீழ்ச்சியை  குறைக்கும் முகமாக நாட்டு மக்கள் தங்களிடம் உள்ள டொலர் மற்றும் யூரோக்களை லீராவிற்கு மாற்றும்படி வேண்டியுள்ளார் ஜனாதிபதி அர்தூகான்.

அனைத்து வங்கிகளுக்கும் தேவையான பணத்தை வழங்குவதாக துருக்கி மத்திய வங்கி அறிவித்துள்ள அதேவேளை உற்பத்தி துறைகளுக்கு 1.2 பில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வானிபத்துறை அமைச்சு அளிவித்துள்ளது. 

இதேவேளை நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என நிதியமைச்சர்  நூற்றுக் கணக்கான வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மத்தியில் உரையாற்றுகையில் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தை விட பலமான நிலையில் துருக்கி மீண்டுவரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

துருக்கியிற்கான முஸ்லிம்களின் ஆதரவு

துருக்கியின் நிலை தொடர்பில் பாகிஸ்தானின் புதிய பிரதமரும் முன்னாள் கிரிக்கட் ஜாம்பவானுமாகிய இம்ரான் கான் கரிசனை செலுத்தியுள்ளார். துருக்கி தனது நிலையில் இருந்து விரைவில் மீண்டு வருவதற்கு பிரார்த்திப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான் பொது மக்களும் துருக்கியிற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத் தளங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர். அமெரிக்க உற்பத்திகளை பகிஷ்கரிப்பது தொடர்பிலும் பரவலான விழிப்புணர்வு முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்பட்டு வருகின்றமை கவனிக்கத் தக்கது. 

துருக்கியோடு தோழ் கொடுக்கும் மற்றுமொரு முக்கிய நாடாக கட்டார் செயற்படுகிறது. ஏலவே பாரிய முதலீடுகளை துருக்கியில் மேற்கொண்டுள்ள கட்டார் மேலும் பல பில்லியன் டொலர் பெறுமதியான முதலீடுகளை மேற் கொள்ள எதிர்பார்த்துள்ளது. 

அமெரிக்கா தனது டொலரின் மூலம் பல்வேறு நாடுகளை அடிமைகளாக்கி அதிகாரம் செலுத்திவரும் வேளையில், டொலரிற்கு பதிலாக வேறு நாணய அலகுகள் தொடர்பில் பல்வேறு நாடுகளும் சிந்தித்து வருகின்றன. இத்தருணத்தில் துருக்கியின் பகிஷ்கரிப்பு அமெரிக்கா டொலரிற்கு எதிரான பகிஷ்கரிப்பின் முக்கிய மைல் கல்லாக அமையும் பட்சத்தில் அமெரிக்கா தன் வாலை சுருட்டிக் கொண்டு ஓரமாகும் காலம் விரைவில் ஏற்படலாம்.

10 கருத்துரைகள்:

முட்டாள் துருக்கி.
Google, Yahoo, Facebook, Microsoft இப்படி எல்லாமே அமேரிக்க உற்பத்திகள் தான்.
Internet யை அறிமுகபடுத்தப்படுத்தியதும் அமேரிக்க தான்.

ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் வரிசையில் ....... வெகு விரைவில் துருக்கி....அடுத்து பாக்கிஸ்தான்

Ya Allah unit all muslim countries toward a United currency to defeat the arrogant of this world.

கிருஸ்தவ பயங்கரவாதி.

ஆம் ajnan. . கிரிஸ்த்தவர்களுக்கு தெரிந்தெல்லாம் பொறாமையும் அடிதடியும்தான்.எதையும் பேசித்தீர்க்கும் குணமே கிடையாது.

Ajan ... எழுதி வைத்துக் கொள் துருக்கியின் மயிரையும் புடுங்க முடியாது

துருக்கி இந்த சவாலை தாண்டி செல்லும் அதட்கான சிறந்த தலைமைத்துவமும் ஆற்றலும் இறைவனுடைய உதவியும் நிச்சயம் அவர்களுக்கு உண்டு. எப்போதும் கஷ்டம் வந்த பிறகு தான் இன்பம் வரும். அதட்கு மிக சிறந்த உதாரணம் கத்தார் நாடு. துருக்கி மிக்க விரைவில் பழைய நிலைமையை விட நல்ல நிலமைக்கு வரும். டாலர் அதன் பெறுமதியை இழந்து யூரோ மிக பலம் வாய்ந்த நாணயமாக மாறும் அல்லது வெற ஒரு நாணயம் அறிமுகப்படுத்தபடும்

Qatar Agreed to Invest $15bn not $18bn.

(Allow this comment if you dare, block this if you wanna coverup)

Pls don not blame the religion of xsitian
All the religion preaching peace but anjan
is a lowcast and uneducated person so because of his name all Christian religion will be destroyed

Pls don not blame the religion of xsitian
All the religion preaching peace but anjan
is a lowcast and uneducated person so because of his name all Christian religion will be destroyed

உலகில் முஸ்லிம்கள் என்று கூறுபவர்கள் எல்லாறும் பெயர் அளவில் தான் முஸ்லிம்கள் அவர்கள் வாழும் நாடுகளில் பாதி அளவு முஸ்லீம்கள் ஒன்றுபட்டு cocacola வை நிராகரித்தாலே அமெரிக்க பொருளாதாரத்தை ஆட்டம் காணவைக்கலாம் கத்தியின்றி யுத்தம்இன்றி இலகுவான வழிகள் எவ்வளவோ உள்ளது தமது சுக வாழ்விற்காக சுயனலமாக சிந்திப்பவர்கள் தான் உலகில் உள்ளார்கள்

Post a Comment