August 31, 2018

எமக்கு எதிராக செயற்பட்டால், அடித்து முடித்து விடுவோம் - பிறகு இந்நாட்டில் எவரும் இருக்க இடமளிக்க மாட்டோம்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு தேவையானதை இந்த நாட்டில் செய்ய இடமளிக்க போவதில்லை என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள தனது இல்லத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது தமிழ் மக்களின் வாக்குகளை பெற மேற்கொள்ளும் நடவடிக்கை. பிரபாகரனுக்கு தேவையானதை இந்த நாட்டில் செய்ய நாங்கள் இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டை பிரிக்க இடமளிக்க மாட்டோம். தமிழ் மக்கள் எங்களுடன் கைகோர்த்து வாழ முடியும். முஸ்லிம் மக்களும் எங்களுடன் கை கோர்த்து இருக்க முடியும்.

ஒவ்வொருவருக்கும் தேவையான வகையில் இந்த நாட்டை பிரிக்க முடியாது. அவர்களுக்கு தேவையானதை செய்ய இடமளிக்க முடியாது. இது சிங்கள பௌத்த தர்மம் உள்ள நாடு. இதனை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

கத்தோலிக்கர்கள், பௌத்தர்கள் என இந்த நாட்டில் 76 வீதம் சிங்கள மக்கள் இருக்கின்றனர். உலக நாடுகளை பாருங்கள்.

உதாரணமாக அமெரிக்காவை எடுத்துக்கொண்டால், அமெரிக்கன். இந்தியா இந்து மொழி. இந்தியா புத்த பகவான் பிறந்த நாடு. தமது நாட்டின் அடையாளம். இலங்கையின் அடையாளத்தை இல்லாமல் செய்ய முடியாது.

ஆட்சியாளர்களுக்கும், கூட்டு எதிர்க்கட்சியினருக்கு முதுகெலும்பில்லை. நான் வடமத்திய மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுவேன். வீர துட்டுகெமுனு (துட்டகைமுனு) அமைப்பின் கீழ் முதலாவதாக மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவோம்.

பிரச்சினைகள் உள்ள, உடைந்த கட்சிகளுக்கு நான் செல்ல மாட்டேன். எனது உடலில் ஓடுவது சிங்கள இரத்தம். சகல இனங்களும் நமது நண்பர்கள் என புத்த பகவான் போதித்துள்ளார்.

அனைத்து மதங்களையும் நாங்கள் மதிக்க வேண்டும். பௌத்த தர்மத்தின் படி எங்களிடம் விரோதங்கள் இல்லை. குரோதங்கள் இல்லை.

தமிழ், முஸ்லிம் மக்களை இரண்டு கைகளில் பிடித்து கொண்டு, பறங்கியர், மலாயர்களுடன் ஒன்றாக முன்னோக்கிச் செல்ல வேண்டும். ஆனால், எமக்கு எதிராக செயற்பட்டால், துட்டகைமுனு மன்னர், எல்லாளனுக்கு செய்தது போல், அடித்து முடித்து விடுவோம். அதற்கு பிறகு இந்த நாட்டில் எவரும் இருக்க இடமளிக்க மாட்டோம். இது எனது கருத்துக்கள் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

10 கருத்துரைகள்:

நம்ம காமடி பீசு.
மஹிந்தக்கு முக்கின சரி வரவில்லை. ரணிலுக்கு முக்கின அதுவும் வாய்க்க இல்லை. இப்ப தனியா ஒரு கட்சியில போய் இருக்கிற கோமணத்தையும் இல்லாம செய்ய போற. பக்கத்தில் திரிபவர்களின் முக்கிய கவனத்துக்கு, காணாத இடத்துலே கடிச்சு வைச்சிர போகுது இந்த ஜந்து பிறகு குணப்படுத்துவது கஷ்டம். விசர் தலைக்கேறி பைத்தியம் முத்தி போய் திரியுது.

Good!!!!! Tamil fundamentalist must need a lesson again

Info x, உங்களை தான் தேடிக்கொண்டிருந்தேன். எத்தனை முறை நான் எச்சரித்தேன். கவனம். இலங்கையில் ISIS பெருமளவில் இருக்கிறார்கள் என.

இப்போ, ஒருவர் அவுஸ்திரேலிய போய் அங்கு கையும் மெய்யுமாக பிடிபட்டுவிட்டார். அதும் பிரதமரையும், அப்பாவி மக்களையும் கொலை செய்ய முயற்சித்துகொண்டு இருந்துள்ளார்.

இப்படி இன்னும் பலர் இலங்கையில் இருக்கலாம்.
இப்போ, புலிகளின் ஆயுதங்கள் வேறு வைத்திருக்கிறீர்கள் என்கிறார்கள்.

உங்களை நினைத்தாலே இப்போ பயமாக உள்ளது. Gtx Sir, என்னை ஒன்றும் பண்ணிவிடாதீர்கள்.

பூங்கா வனத்தில் நுழைந்த பன்றிபோல

@info x,

Yes you are right. Then only our demand will be more strenghthen among international communities and would be the key for our freedom. So we are curiously waiting to learn a lesson from this Modaya.

Ean brothers ungada veriththanaththa inga kaatreenga. Naam sirupaanmayyinanar. Uur irandu pattal kooththaadikku kondaattam😣🤔🤔🤔🤔

இலவு காத்த கிளி : ஈனத்தமிழன். சர்வதேச சமூகம் உன்ட மச்சானா அநுசாத்து.

முஸ்லிம்ளை படுகொலை செய்துவிட்டு, ஆயுதங்களை முஸ்லிம்களுக்கே விற்றார்களாம். சொல்லுகின்ற பொய்யையும் பொருந்தச்சொல்லுங்கடா ... குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு

@Nazmi,
சர்வதேசம் மனது வைக்காமல் இந்த பூமி பந்தில் எந்தவொரு நாடும் புதிதாக பிறந்ததில்லை. பங்களாதேஷ் சூடான் இஸ்ரேல் எரித்திரியா உட்பட புதிய நாடுகள் அனைத்தையும் உருவாக்கியது சர்வதேசமே. காலம் கனிந்து வரும். போராடி இறந்தவர்களின் தியாகம் வீண் போகாது அது பலஸ்தீனத்திலே போராடுபவர்களாக இருணிகளும் சரி ஈழத்திலே போராடுபவர்களாக இருந்தாலும் சரி. அப்பொழுது இந்த ஈழ தமிழன் ஈன தமிழனாக இருக்க மாட்டான்.

Who's that internationals? ஏனைய நாடுகளின் வளங்களை கொள்ளையடிக்க யுத்தம் செய்யும் கூட்டமா? ஆயுதங்களை உற்பத்தி செய்து மறைமுகமாக பயங்கரவாதம் செய்பவர்களா? அநியாயம் செய்பவனுக்கு காலம் ஒருபோதும் கனியாது. அப்போது ஈனத்திலும் ஈனமாவான். இலங்கை அழிந்தால் என்ன செய்வீர்?

Post a Comment