Header Ads



‘புர்கா’ தடைக்கு எதிராக டென்மார்க்கில் ஆர்ப்பாட்டம் (‘எனது ஆடையில் கை வைக்காதே’ ‘எனது ஆடை, எனது தேர்வு’)


டென்மார்க்கில் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைக்கும் இஸ்லாமிய ஆடைக்கான தடை அமுலுக்கு வந்த நிலையில் அதற்கு எதிராக நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தடை அமுலுக்கு வந்த கடந்த புதன்கிழமை தலைநகர் கோபன்ஹேகனின் மத்திய பகுதியில் முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதோர் முகத்தை மறைக்கும் புர்கா ஆடை அல்லது முகத்தை மறைக்கும் வகையில் துணியை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சமகாலத்தில் ஹர்ஹுஸ் நகரிலும் இதேபோன்ற ஆர்ப்பட்டம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பொது இடத்தில் முகத்தை மறைத்தால் 1,000 க்ரோனர் அபராதம் விதிக்கப்படும் என்ற நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் எந்த அபராதமும் விதிக்கவில்லை.

இதன்போது, ‘எனது ஆடையில் கை வைக்காதே’ மற்றும் ‘எனது ஆடை, எனது தேர்வு’ என்று எழுதிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுமந்திருந்தனர்.

டென்மார்க்கில் சுமார் 200 பெண்கள் மாத்திரமே முகத்தை மறைக்கு இஸ்லாமிய ஆடை அணியும் நிலையிலேயே அந்த நாட்டில் இந்த தடை அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

9 comments:

  1. புர்கா தடை செய்ய தான் வேண்டும்.புர்காவுக்கும் இஸ்லாத்துக்கும் எந்தவொரு தொடர்புமில்லை அது கலாச்சாரம் கலாச்சாரமாக வந்ததோன்று.இஸ்லாம் மார்க்கம் இலகுவானது ஆனால் இந்த மக்கள் மற்றவர்களுக்கு கடினமாக காட்டுறார்கள்.

    ReplyDelete
  2. My cloth my decision. My country my rule.

    ReplyDelete
  3. நிகாபுக்கு ஆதரவாக நிகாப் அணியாத முஸ்லிம் பெண்களும், அந்நிய மதப் பெண்களும் ஆதரவளிப்பது வரவேற்கக்கூடிய விடயமாகும்.

    ReplyDelete
  4. Mr. bullbulli, thanks you. Yes, you are correct. ISLAM is the easiest religion to follow. Its guidence is very very easy to follow. It is also the religion of the wise people. You have had a clear account of Islam.. So.... Why are you still hesitant to embrace the true faith?

    ReplyDelete
  5. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

    ReplyDelete
  6. "எனது ஆடை எனது தேர்வு ", அது நியாயமானதுதான் .அது எப்படி பொது இடங்களில் அநாகரீகமாக ஏனையவர்கள் முகம் சுளிக்க வைப்பதாக இருக்கக்கூடாதா , அதேபோல் ஏனையவர்களுக்கு பயமூட்டக்கூடிய வகையில் அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடும் வகையில் முகத்தை மூடியும் இருக்க கூடாது.

    ReplyDelete
  7. @ Kumar
    நீதியான வாதம்!  இது என்றும் எதிலும் இருக்கட்டும்.

    ReplyDelete
  8. Kumar You are absolutely right. Also its not a Islamic Dress. Its a culture dress. (Same Like Saree, Salwar,Lunghi). Islam is more beautiful and practical.

    ReplyDelete
  9. Crazy Ladies Without proper Islamic Knowledge..

    ReplyDelete

Powered by Blogger.