Header Ads



மரண தண்டனை கைதிக்கு, பேஸ்புக் கணக்கு - விசாரிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

இரத்தினபுரியில் மூன்று பேரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சர்பயா (பாம்பு) என்ற ஹசித சமந்த முஹாந்திரம் என்பவரின் முகநூல் கணக்கு தொடர்ந்தும் புதுப்பிக்கப்படுவது குறித்து ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம், சிறைச்சாலை அத்தியட்சகருக்கு இன்று உத்தரவிட்டுள்ளது.

அந்த அறிக்கையை தனிப்பட்ட ரீதியில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதிபதி சம்பா ஜானகி ராஜரத்ன உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த முகநூல் கணக்கு தொடர்பான விசாரணை ஒன்றை நடத்தி, அது எங்கிருந்து பதிவேற்றம் செய்யப்படுகிறது என்பது பற்றிய அறிக்கையை வழங்குமாறும் நீதிபதி, குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் திகதி சப்ரகமுவ மாகாண முன்னாள் அமைச்சர் ரஞ்சித் நந்தசிறி, அவரது சாரதி உட்பட மூன்று பேரை கொலை செய்த குற்றத்திற்காக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஹசித சமந்த முஹாந்திரத்திற்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

No comments

Powered by Blogger.