August 03, 2018

முஸ்­லிம்கள் எங்­களை விட்டு, தூரச் செல்­லக்கூடாது - பௌத்த தேரர் உருக்கம்


கண்டி, திகன வன்முறையின் பின்னர் முஸ்­லிம்­க­ளு­டைய மனோ நிலை, சிங்­கள மக்­க­ளுடன் கொண்­டுள்ள  உறவு  எத்­த­கைய தன்­மை­களைக் கொண்­டி­ருக்­கி­றது என்று எண்­ணிப்­பார்த்தால் சிங்­கள மக்கள் சந்­தே­கிக்­கு­ம­ள­வுக்கு தப்­ப­பிப்­பி­ரா­யங்­களை  கொண்­ட­வர்­க­ளா­கவோ அல்­லது வேறு­பா­டு­டை­ய­வர்­க­ளா­கவோ இருக்­க­வில்லை. வன்முறைகள் முடிந்த மறு­க­ணமே முஸ்லிம் இளைஞர் முதல் சக­லரும்  சக­ஜ­மாக எம்­மோடு சக­வாழ்வைப் பேணி நடந்­தனர்.  இந்தக் சம்பவம் ஏற்­ப­டா­த­வாறு இருக்க எத்­த­னையோ முயற்­சிகள் செய்தேன். ஆனாலும் அது  எல்லை மீறி கட்­டுக்­க­டங்­காமல் நிகழ்ந்­து­விட்­டது. இது ஒரு துர­திஷ்­ட­மான சம்­ப­வ­மாகும். பொலிஸார் முயற்சி செய்­தி­ருந்தால் கட்டுப் பாட்­டுக்குள் கொண்டு வந்­தி­ருக்­கலாம். இனி­வரும் காலங்­களில் இது­போன்ற சம்­ப­வங்கள் இடம்­பெ­றா­தி­ருக்க வழி­வ­கைகள் செய்ய வேண்டும் என்று பல­கொல்ல ரஜ­மஹா விஹா­ரா­தி­பதி தல்­பொத தம்­ம­ஜோதிதேரர் தெரி­வித்தார்.

இன, சமூக நல்­லி­ணக்க சக­வாழ்வைக் கருத்­திற்­கொண்டு கண்டி நக­ரி­லுள்ள சிவில் அமைப்­புக்கள் மற்றும் கண்டி ஜம்­இய்­யதுல் உலமா பிர­தி­நி­திகள் இணைந்து அஷ்ஷெய்க் பஸு­லுர்­ரஹ்மான் தலை­மையில் பல­கொல்ல ரஜ­மஹா விஹா­ரா­தி­பதி தல்­பொத தம்­ம­ஜோ­திதேரருடன் நல்­லெண்ண சந்­திப்­பொன்றில் நேற்று முன்தினம் கலந்து கொண்­டனர்.  அதன்போது பல­கொல்ல ரஜ­மஹா விஹா­ரா­தி­பதி தல்­பொத தம்­ம­ஜோதிதேரர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரி­விக்­கையில்,

இனங்­க­ளுக்­கி­டையே வெறுப்­பு­ணர்­வையும் பகை­மை­யையும் சந்­கே­கத்­தையும் உண்­டு­பண்ணும் காரி­யங்­களை  இல்­லாமற் செய்­வ­தற்­கான வேலைத்­திட்­டங்­களை அதி­க­ளவில் மேற்­கொள்ள வேண்டும். இது­போன்ற சந்­திப்­புக்­கள்தான்  எங்­க­ளுக்­கி­டையே காணப்­படும் சந்­தே­கங்­க­ளையும் கருத்து முரண்­பா­டு­களை இல்­லாமற் செய்யும். நான் வன்முறையின் பின்னர் திகன , பல­கொல்லப் பகு­தி­க­ளி­லுள்ள குடும்­பங்­க­ளுக்கு சிங்­கள மக்கள் மூலம் சேக­ரிக்­கப்­பட்ட உல­ரு­ணவுப் பொருட்­களை அனுப்பி வைத்தேன். அது­மட்­டு­மல்ல, சிங்­கள மக்­களை அழைத்துச் சென்று பள்­ளி­வா­சல்­களை சுத்தம் செய்யும் பணி­க­ளிலும் ஈடு­பட்டேன். கடந்த காலங்­களில் இந்தப் பிர­தே­சங்­களில் எவ்­வாறு  வாழ்ந்­தோமோ அதே­போன்று நாங்கள் இன்றும் ஒற்­று­மை­யுடன் தொடர்ந்து வாழ வேண்டும். எனினும்  முஸ்­லிம்கள் எங்­களை விட்டுத் தூரச் செல்­லாமல் இருத்தல் வேண்டும். எனக்­கொரு கவலை இருக்­கி­றது சமூக நல்­லி­ணக்­கத்­திற்­காக நான் எத்­த­னையோ முஸ்லிம் சமூ­கத்­திற்­காக உத­வி­க­ளையும் ஒத்­து­ழைப்பு பங்­க­ளிப்­புக்­க­ளையும் நல்­கியும் சிறிது காலம் என்னை வந்து எவரும் சந்­திக்கவில்லை. இன்­றைய  உங்கள் வரவு எனக்கு மிகுந்த  மன ஆறு­தலைத் தரு­கி­றது என்று அவர் மேலும் தெரி­வித்தார்.

இந்­நி­கழ்வில் கண்டி ஜம்­இய்­யதுல் உலமா சபைத் தலைவர் அஷ்ஷெய்க் உமர்தீன், பேராதனை பல்கலைக்கழக ஓய்வுநிலை விரிவுரையாளர் கலாநிதி நௌபல், திகன ஜம்இய்யதுல் உலமாக் கிளைத் தலைவர் அஷ்ஷெய்க் சக்கூர், கே.ஆர்.சி.சி.அமைப்பின் பிரதிநிதி ஐ. ஐனுடீன், மடவளை பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

(இக்பால் அலி)

0 கருத்துரைகள்:

Post a Comment