Header Ads



முஸ்லிம் அமைச்சர்கள் சிலர், மஹிந்தவுடன் இரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளார்கள்

-ARA.Fareel-

அர­சியல் கள­நி­லைமை ஸ்திர­மற்ற தன்­மையை அடைந்­துள்ள நிலையில் முஸ்லிம் அமைச்­சர்கள் சிலர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுடன் எதிர்­கால அர­சியல் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடாத்­தி­வ­ரு­வ­தாக ஸ்ரீ லங்கா பொது­ஜன முஸ்லிம் முன்­ன­ணியின் பொதுச்­செ­ய­லாளர் அப்துல் சத்தார் தெரி­வித்தார்.

இது­வரை நடை­பெற்­றுள்ள பேச்­சு­வார்த்­தைகள் வெற்­றி­க­ர­மாக நடை­பெற்­றுள்­ள­தா­கவும் எதிர்­வரும் மாகாண சபைத் தேர்தல், ஜனா­தி­பதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்­தல்­களில் பெரும்­பான்மைக் கட்­சிகள் வெற்றி இலக்கை எய்த முடி­யாத சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளதால் அவர்கள் பொது­ஜ­ன­பெ­ர­முன மீது நம்­பிக்கை வைத்­துள்­ளார்கள் எனவும் அவர் கூறினார்.

ஸ்ரீ லங்கா பொது­ஜன  முஸ்லிம் முன்­ன­ணியின் எதிர்­கால அர­சியல் நகர்­வுகள் தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இக்­க­ருத்­தினை வெளி­யிட்டார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரி­விக்­கையில், மாகா­ண­சபைத் தேர்தல் தொகுதி எல்லை நிர்­ணய அறிக்கை தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது. அறிக்­கையை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்த அமைச்சர் பைசர் முஸ்­த­பாவே எதிர்த்து வாக்­க­ளித்­துள்ளார்.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் அமைச்சர் பைசர் முஸ்­தபா தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­வ­துடன் அர­சாங்கம் பத­வி­வி­லக வேண்­டு­மென நாம் வலி­யு­றுத்­து­கிறோம்.

சபா­நா­யகர் தற்­போது எல்லை நிர்­ணய அறிக்கை தொடர்­பாக மேன்முறையீட்டு குழு­வொன்­றினை பிர­தமர் தலை­மையில் நிய­மித்­துள்ளார். இவ்­வா­றான குழுக்­களில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. மாகாண சபைத் தேர்­தலை மேலும் தாம­தப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இவ்­வா­றான செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்கப்­ப­டு­கின்­றன. அர­சாங்கம் தேர்­தலை உட­ன­டி­யாக நடத்த வேண்டும் என்றே நாம் கோரு­கின்றோம்.

அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் அமைச்­சர்கள் பலர் தற்­போ­தைய அர­சாங்கம் ஸ்திர­மற்­றது. நிச்­சயம் மாற்றம் ஒன்று நிக­ழ­வுள்­ளது என்­பதை முன்­கூட்­டியே அறிந்­தி­ருக்­கி­றார்கள். அர­சாங்கம் மாறினால் அவர்­க­ளது ஊழல்கள் வெளிச்­சத்­துக்கு வரும் என அச்­ச­முற்­றுள்­ளார்கள். இத­னாலே அவர்கள் மாற்று வழியைத் தேடுகிறார்கள்.

முஸ்லிம் அமைச்சர்கள் சிலரின் முன்னாள் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை இரகசியமாகவே நடைபெறுகின்றன. தேவையான சந்தர்ப்பத்தில் பேச்சுவார்த்தைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்படும் என்றார்.
-Vidivelli

1 comment:

Powered by Blogger.