Header Ads



அவுஸ்ரேலிய செனட் சபையில், முதலாவது முஸ்லிம் பெண் உறுப்பினர்

மெஹ்ரீன் ஃபருகி (Mehreen Faruqi) முதலாவது முஸ்லிம் பெண் உறுப்பினராக அவுஸ்ரேலிய செனட் சபையில் இணைந்துள்ளார்.

செனட் சபையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் வகையில், நியூ சவுத் வேல்ஸின் பசுமைக்கட்சி செனட் உறுப்பினராக ஃபருகி நேற்று (15) நியமிக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, ஃபருகி அடுத்த வாரம் செனட் சபை உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவின் எதிர்காலம் பல்லினக் கலாசாரத்திற்கு ஏதுவாக அமையும் என ஃபருகி நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

பாகிஸ்தானை பிறப்பிடமாகக் கொண்ட ஃபருகி, கடந்த 1992ஆம் ஆண்டு தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவில் குடியேறினார்.

அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னர் கல்வியாளராக சிறப்படையாளம் பெற்று விளங்கிய ஃபருகி, சுற்றுச்சூழல் பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவராவார்.

2013ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட ஃபருகி, அவுஸ்ரேலியாவில் அரசியல் அலுவலகம் பெற்ற முதல் முஸ்லிம் பெண் என்ற பெருமையை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

Powered by Blogger.