Header Ads



ரஷ்யாவில் குத்துச்சண்டையில் வென்ற, இலங்கையரை கௌரவித்த ஹிஸ்புல்லாஹ்


ரஷ்யாவில் நடைபெற்ற எம்.எம்.ஏ.  (Mixed Martial Arts ) குத்துச்சண்டை போட்டியில் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்ற தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் அலி முஹம்மது அஸாதை  நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வாழ்த்தி கௌரவித்தார். 

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வை இன்று புதன்கிழமை அவரது அமைச்சில் வைத்து வீரர் முஹம்மது அஸாத் மற்றும் அவரது தந்தை அப்துல் அலி ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர். இதற்கான ஏற்பாடுகளை மூதூர் பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர் இஸ்மாயீல் மஹ்ரூப் செய்திருந்தார். 

இதன்போது, ரஷ்யாவில் நடைபெற்ற எம்.எம்.ஏ. குத்துச்சண்டை போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று இரு வெள்ளிப் பதக்கங்களை வெற்றி பெற்று நாட்டுக்கு பெருமை சேர்;த்த முஹம்மது அஸாதை பாராட்டி கௌரவித்த இராஜாங்க அமைச்சர், தொடர்ந்தும் சிறப்பாக விiயாட ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.  

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தோப்பூர், பாலத்தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த அப்துல் அலி முஹம்மது அஸாத் ஆணழகன் (கட்டழகன்), பளுதூக்கல், குத்துச்சண்டை மற்றும் எம்.எம்.ஏ. எனப்படும் ரஷ்யா சண்டைக்கலை போன்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் அண்மையில் ரஷ்யாவின் குரோஸ்னி மாநிலத்தில் நடைபெற்ற 22 வயதுக்குற்பட்ட 57-61 கிலோ கிராம் எடைப்பிரிவில் எம்.எம்.ஏ  குத்துச்சண்டைப் போட்டியில் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை  வெற்றி பெற்றிருந்தமைக் குறிப்பிடத்தக்கது. 

1 comment:

  1. Respected Minister....

    Do you know many scholars of Sunnah says BOXING GAME is not allowed in Islam as it violates the HADEES,

    which say "Hitting on FACE is not allowed"

    This BOXING clearly goes against the teaching of the Prophet (sal), as narrated by Abu Hurayrah: “When any one of you fights, let him avoid (striking) the face.” (Narrated by al-Bukhaari, al-Fath, 5/215).

    The hadees is saheeh.. how come you can appreciate such players?

    Minister please stop supporting this gae , if you obey to this hadees.

    ReplyDelete

Powered by Blogger.