August 03, 2018

காதி நீதிமன்றத்தில், நான் கண்டது (நேரடி அனுபவம்)

-Inaas-

முஸ்லிம் தனியார்சட்டம் தொடர்பில் சூடான வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்து வரும் இந்த சூழலில் . முஸ்லிம் தனியார்சட்டம் என்பதும் அதன்பெரும்பாலான விடயங்கள் காதிநீதிமன்றத்துடன் தொடர்பானதாகவே இருந்து வருகிறது.

அந்த வகையில் காதிநீதிமன்றத்தில் நடந்த, நானே நேரடியாக கண்ட ஒரு நிகழ்வை இங்கு பகிர்ந்துகொள்வது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்என நம்புகின்றேன்.

நடுவில் காதிநீதிபதி தனது ஆசனத்தில அமர்ந்திருந்தார். அவருக்கு பக்கத்தில் மௌலவிமார்கள் 3 பேர் ஜூரிகளாக அமர்ந்திருந்தனர். அந்நிய மதப்பெண்ஒருவரின் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.

குறித்த பெண் காதிநீதிபதியிடம் கோரிக்கை ஒன்றை சிங்கள மொழியில் முன்வைக்கிறார். அப்பெண் பௌத்த மதத்தை சேர்ந்த ஒரு பெண்.

'கனம் நீதிபதி அவர்களே காதிநீதிமன்ற சட்டத்தில் எனக்கு நீதி கிடைக்கும் என நான் நம்பவில்லை பல தவணைகள் கடந்துவிட்டன இதுவரை எனதுகணவர் வழக்குக்கு வரவுமில்லை நான் மட்டும் தான் தினமும் இங்கு வந்து போகிறேன். ஆகவே எனது வழக்கை இலங்கை பொதுச்சட்டத்தின் மூலம்விசாரிக்க எனது வழக்கை சிவில் நீதிமன்றத்துக்கு மாற்றித் தாருங்கள் என்று கோரிக்கை விடுக்கிறார்.

குறித்த பெண்ணுக்கு காதிநீதிபதி இவ்வாறு பதிலளிக்கிறார்.

நீங்கள் உங்கள் திருமணத்தை முஸ்லிம் விவாகபதிவின் கீழ் செய்துள்ளதால் உங்கள் வழக்கை காதிநீதிமன்றத்தில் தான் விசாரிக்க வேண்டும். இதனைசிவில் நீதிமன்றத்துக்கு மாற்றினால் சட்டசிக்கல்கள் வர வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும் உங்கள கோரிக்கையை எழுத்து மூலம் தாருங்கள் என்கிறார்காதி நீதிபதி.
குறித்த அந்நிய சகோதரியோ காதிநீதிமன்றத்துக்கு வெளியில் வந்து கீழ்வருமாறு புலம்புவதனை காண முடிந்தது.

“பல மாதங்களாக நான் இங்கு வந்து சீரழிகிறேன் எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையே போய்விட்டது. இந்த ஒழுங்கற்ற சட்டத்தை பயன்படுத்திஎனது கணவன் தொடர்ந்து என்னையும் நீதிமன்றத்தையும் ஏமாற்றிக்கொண்டே வருகிறான். அவன் மீது சட்டநடவடிக்கை எடுக்க எந்தமுன்னெடுப்புமில்லாமல் காதிநீதிமன்றம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.  இது என்ன சட்டம் என்றவாரு காதிநீதிமன்றத்தை கடுமையாகசாடிக்கொண்டிருந்தார்.                     அச்சகோதரி.

இச்சிங்கள சகோதரி மட்டுமல்ல காதிநீதிமன்றம் செல்லும் பெரும்பாலானோர் இப்போது அமுலில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில்இப்படியான அதிருப்தியான மனநிலையிலேயே உள்ளனர் என்பது தான் உண்மை.

இதனை இன்னுமொரு கோணத்தில் நோக்கினால் இவர்கள் இந்த சட்டங்கள் இஸ்லாத்தின் சட்டங்கள் என்று நினைத்துக்கொண்டுள்ளதால் இஸ்லாத்தின்மீதான தவறான ஒரு கருத்தும் இவர்களின் மனதில் பதிந்துவிடுகிறது.

இஸ்லாத்தின் சட்டங்கள், அல்லாஹ்வின் சட்டங்கள் முழு மனித சமூகத்துக்கும் நூறு வீதம் நன்மையை மட்டுமே தரக்கூடியன. அதனைஅமுல்படுத்துவதால் எந்த தீமையும்,அதிருப்தியும் மனித சமூகத்துக்கு வந்துவிடாது.

ஆனால் அல்லாஹ்வின் சட்டங்களை பிழையாக புரிந்து பிழையாக அல்லாஹ்வின் சட்டம் என்ற பெயரில் நடைமுறைபடுத்த முற்படும் போது மேலேசம்பவத்தில் சொன்னது போன்ற மனித சமூகத்தின் அதிருப்தியையே சம்பாதிக்கும்.

இந்நிலையை நீக்க ஒரேயொரு தீர்வு. நாங்கள் மீண்டும் ஒரு முறை நமது சட்டங்களை குர்ஆன் ஹதீஸின் ஒளியில் மீள்வாசிப்பு செய்ய வேண்டும்.

விடிவெள்ளியில் கலாநிதி அனஸ், ஷெய்க் ரவுப்ஸெய்ன் போன்றோர் இஸ்லாமிய உலகின் சில நாடுகளின் முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்பிலானதமது அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வந்ததனை வாசித்திருந்தால் இஸ்லாமிய சட்டம் எவ்வளவு கவர்ச்சியானது இஸ்லாமிய சட்டம் எந்தளவுக்குநுணுக்கமானது என்பதனை எங்களால் புரிந்துகொள்ள முடியும். அவற்றை இயற்றியவர்களும் இஸ்லாமிய உலகின் தலைசிறந்த உலமாக்கள் தான். அச்சட்டங்களில் மார்கத்துக்கோ இஸ்லாத்துக்கோ முரணாக எந்வொரு ஷரத்தும் இல்லை.

இலங்கையில் நிலவும் பிரச்சினை என்னவென்றால் நாம் ஒரேயொரு மத்ஹபின் வட்டத்துக்குள் இருந்து கொண்டு சட்டங்களை இயற்ற முற்படுகிறோம். இஸ்லாத்தின் இருப்பில் மத்ஹபுகளின் பங்களிப்பை எவராலும் மறுக்க முடியாது. அதன் அர்த்தம் மத்ஹப்களின் அனைத்து சட்டங்களும்எல்லாக்காலத்துக்கும் பொருத்தம் என்பதல்ல. அல்லாஹ்வை தவிர எந்த ஒருவராலும் முக்காலத்துக்கும் சேர்த்து சட்டம் இயற்ற முடியாது. அந்த வகையில்மத்ஹப்களின் சட்டங்களிலும் அக்கால சமூகயதார்த்தத்தின் பாதிப்பு நிச்சயம் இருக்கும்.

அந்த சட்டங்களை எந்தவித மாற்றமும் இல்லாமல் அப்படியே கொண்டு வந்து பல நவீன சமூகப்பிரச்சினைகளை கொண்ட இக்கால சமூகத்தில்பிரயோகிக்க முற்பட்டால் இஸ்லாம் தொடர்பில் தவறான புரிதல் மக்களுக்கு ஏற்படுதனை நிச்சயம் தடுக்க முடியாது.

ஆகவே இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டம் கட்டாயம் மீள்வாசிப்பு செய்யப்பட வேண்டும் என்பதில் நமக்கு இரு கருத்துக்கள் இருக்க கூடாது.

மீள்வாசிப்பின்  போது கட்டாயம் இஸ்லாமிய உலகின் தலைசிறந்த அறிஞர்களின் நவீன பத்தவாக்கள், இஜ்திஹாத்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். அது மட்டுமல்லாமல் இஸ்லாமிய நாடுகளின் முஸ்லிம் தனியார் சட்டங்களையும் கட்டாயம் ஆய்வு செய்து. இலங்கையில் சிறுபான்மையாகவாழும் முஸ்லிம்கள் என்ற வகையில் இஸ்லாத்தின் அடிப்படை உஸூல்களுக்கு  மாற்றமில்லாத வகையில் இது தொடர்பில் சமூகத்தில் தோன்றியுள்ளநவீன சமூகவியல் பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு சொல்லும் வகையில் முஸ்லிம் தனியார் சட்டம் மீள்வாசிப்பு செய்யப்பட வேண்டும்.


அப்படி சிறந்த முறையில் மீள்வாசிப்பு செய்யுமிடத்து அடுத்த சமூகத்தினர் எமது சட்டத்தை முண்ணுதாரணமாக கொள்ளுமளவுக்கு எமது தனியார்சட்டம் தரமாக அமையும்.

அல்லாஹ்வின் சட்டங்கள் மனித சமூகத்துக்கு நன்மையை மட்டுமே விளைவிக்கும், எல்லா சட்டங்களையும் விட தரத்தில் உயர்ந்த சட்டம் அல்லாஹ்வின்சட்டங்கள் தான்  என்பது அடுத்த சமூகங்களுக்கு நிதர்சனமாக தெரியவரும்.

எம்மை சுற்றி வாழ்பவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாத்தின் தூதை பெறாதவர்கள் என்ற வகையில் இஸ்லாத்தின் தூதின் உயர்ச்சியைமுஸ்லிமல்லாதவர்களுக்கு நிரூபிக்க இது ஒரு சிறந்த சந்தர்ப்பம். தஃவா கடமையான சிறுபான்மை சமூகம் என்ற வகையில் சமகாலத்தில் எமக்கானஜிஹாத் இதற்காக உழைப்பது தான்.

2 கருத்துரைகள்:

This is the reality. Innocent women are suffering. Those who are in authority should be held responsible for their sufferings. May Allah punish those who are ignoring their duties. I have seen many incidents like this.Last two paras are golden words bro. our people have lost sight in differentiating the Sharia and the MMDA, this is actually a grave sin my our Ulemas.

Post a Comment